இரண்டாவது நாளாக வீழ்ச்சி காணும் தங்கம்.. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு தான்..!

இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பணத்தினை சம்பாதிப்பது என்பது மிக கஷ்டமான விஷயமாக உள்ளது. அப்படி கஷ்டப்பட்டு சேமித்த பணத்தினை சேமிப்பது, முதலீடு செய்வது என்பது இன்னும் கஷ்டமான விஷயமே.

ஏனெனில் தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலையில், மற்ற முதலீடுகளில் முதலீடு என்று நினைத்தாலே அது சற்று யோசிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

ஆனால் இந்த ரணகளத்திலும் முதலீட்டாளர்களை குதூகலப்படுத்தும் ஒரு நல்ல விஷயம் தங்கம் விலை ஏற்றம் தான்.

தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமைந்தது

தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமைந்தது

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அது தங்கம் விலையில் எதிரொலித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வந்தது. மேலும் அமெரிக்கா சீனா இடையே அதிகரித்து வரும் பதற்றமும் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

கேள்விக்குறியான இரண்டாவது கட்ட ஒப்பந்தம்?

கேள்விக்குறியான இரண்டாவது கட்ட ஒப்பந்தம்?

எனினும் தற்போது அமெரிக்கா டாலரின் மதிப்பு சற்று அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பின் ஹாங்காங்கிற்கான முன்னுரிமை திட்டத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நிறைவேற்று ஆணையில் கையெழுத்திட்டதோடு, சீனாவுடனான பேச்சு வார்த்தை இரண்டாவது கட்ட ஒப்பந்தங்களுக்கு முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் அமைந்துள்ளது. இது மேலும் அமெரிக்கா சீனா இடையேயான பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

தங்கம் விலை அதிகரிக்கக்கூடும்

தங்கம் விலை அதிகரிக்கக்கூடும்

இதற்கிடையில் அமெரிக்கா ஃபெடரல் வங்கி அதிகாரிகள், கொரோனா தொற்று நோயின் வழக்குகள் அதிகரிக்கும் பட்சத்தில் பொருளாதாரம் இன்னும் மோசமடையக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். ஆக இத்தகைய நிச்சயமற்ற சூழல் தங்கம் விலைக்கு ஆதரவாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இன்றைய சூழலில் தங்கம் விலை குறைந்தாலும், நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளதினை இதன் மூலம் அறிய முடிகிறது.

தங்கத்தின் அடுத்த இலக்கு

தங்கத்தின் அடுத்த இலக்கு

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல மாநிலங்கள் பொருளாதார நடவடிக்கைகளை நிறுத்தி, மீண்டும் லாக்டவுன் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே டெக்னிக்கல் அனாலிஸ் படி, தங்கம் விலையானது தற்போது எட்டு ஆண்டுகள் உச்சத்திற்கு அருகில் உள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1921 டாலராக இருந்தது. ஆக விரைவில் தங்கம் விலையானது இந்த இலக்கினை தொடலாம் என்றும் கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று அவுன்ஸூக்கு 3 டாலர் குறைந்து 1,810.40 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது 0.15% சரிவாகும். இது பெரிய அளவில் வீழ்ச்சி இல்லாவிட்டாலும் சற்று குறைந்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமையன்றும் காலை நேர வர்த்தகத்தில் தங்கம் விலையானது சரிந்திருந்த நிலையில், மாலை நேர வர்த்தகத்தில் மீண்டும் ஏற்றம் கண்டு காணப்பட்டது. இதற்கிடையில் இன்றும் அதேபோல் சற்று குறைந்து தங்கம் விலையானது ஏற்றம் காணலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று குறைந்து காணப்பட்டாலும், வெள்ளியின் விலையானது ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. தற்போது வெள்ளியில் விலையானது 0.57% ஏற்றம் கண்டு காணப்படுகிறது. தற்போது 0.118 டாலர்கள் குறைந்து, 19.648 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக தங்கம் விலையானது, இந்திய கமாடிட்டி வர்த்தகர்த்திலும் சற்று குறைய ஆரம்பித்துள்ளது. தற்போது 10 கிராம் தங்கத்தின் விலையானது 94 ரூபாய் குறைந்து, 49,166 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது 0.19% சரிவாகும். எம்சிஎக்ஸ் சந்தையில் கடந்த இரண்டு தினங்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில் இன்று காலை நேர வர்த்தகத்தில் சற்று குறைய ஆரம்பித்துள்ளது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளியின் விலையானது மூன்றாவது நாளாக சற்று கண்டு வர்த்தகமாகி வருகிறது. இது தற்போது 0.39% ஏற்றம் கண்டுள்ளது. தற்போது வெள்ளியின் விலையானது 201 ரூபாய் அதிகரித்து, 52,858 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

சென்னையில் ஆபரண தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது நேற்றைய விலையில் இருந்து இன்னும் மாற்றம் காணவில்லை. எனினும் இது தற்போது 22 கேரட் தங்கம் விலையானது கிராமுக்கு 4,692 ரூபாயாகவும், சவரனுக்கு 37.536 ரூபாயாகவும் காணப்படுகிறது. 24 கேரட் தங்கம் விலையும் இன்னும் மாற்றம் காணவில்லை.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

சென்னையில் ஆபரண வெள்ளியின் விலையானது இன்று மாற்றம் காணவில்லை. கிராமுக்கு 52.13 ரூபாயாகவும், இதே கிளோவுக்கு 52,130 ரூபாயாகவும் காணப்படுகிறது. இதுவே செவ்வாய்கிழமையன்று வெள்ளியில் விலையானது 52,120 ரூபாயாக இருந்தது. இன்று இன்னும் வெள்ளியின் விலையில் பெரிய மாற்றம் எதுவும் காணப்படவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+