தங்கம் பவுனுக்கு 3,000 குறஞ்சிருக்குன்னா சும்மாவா.. போடு வெடிய!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் ஒரு மனிதன் கையில் பணம் இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் அவன் கையில் தங்கம் இருக்கிறது என்றால், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் அதை அந்த நாட்டு பணமாக்கிக் கொண்டு வாழத் தொடங்கலாம்.

அப்படி ஒரு பிரத்யேக சுபாவம், தங்கத்துக்கு தான் மிக அதிகம்.
அப்படிப்பட்ட தங்கத்தின் விலை, கடந்த 2019 முதல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

விலை ஏற்றம்

விலை ஏற்றம்

கடந்த ஜனவரி 01, 2019-ல் 31,650 ரூபாய்க்கு விற்கத் தொடங்கிய 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை, கடந்த மார்ச் 06, 2020 அன்று சுமாராக 46,160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆக சுமார் 14 மாத காலத்தில் 14,510 ரூபாய் விலை அதிகரித்து இருக்கிறது. சதவிகிதத்தில் பார்த்தால் இது 45 % உயர்வு.

தேவை

தேவை

இப்படி தங்கம் விலை தட தடவென அதிகரித்தால் கூட, வீட்டில் விசேஷங்களின் போது தங்கத்தை வாங்காமல் இருக்க முடிகிறதா..? என்று கேட்டால் இல்லை. தங்கம் விலை என்னவாக இருந்தாலும் சரி, அரை பவுன் தங்கமாவது, நம் வீட்டு விசேஷங்களில் கட்டாயம் இடம் பிடித்துவிடும்.

இப்ப எப்படி

இப்ப எப்படி

அப்படிப்பட்ட தங்கத்தின் விலை தற்போது ஓரளவுக்கு நல்ல இறக்கம் கண்டு இருக்கிறது என்று சொல்வதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சரி 24 கேரட் தங்கத்தின் விலை என்ன, 22 கேரட் தங்கத்தின் விலை என்ன, எவ்வளவு விலை சரிந்து இருக்கிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

24 கேரட்

24 கேரட்


24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை கடந்த மார்ச் 06, 2020 அன்று 46,160-க்கு விற்பனை ஆனது. இன்று அதே 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 42,300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 46,160 - 42,300 = 3,860 ரூபாய் சரிந்து இருக்கிறது.
24 கேரட் ஒரு கிராமுக்கு 386 ரூபாயும்,
ஒரு பவுனுக்கு 3,088 ரூபாயும் விலை சரிந்து இருக்கிறது.

22 கேரட்

22 கேரட்

22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை கடந்த மார்ச் 06, 2020 அன்று 42,310-க்கு விற்பனை ஆனது. இன்று அதே 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 38,700 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 42,310 - 38,700 = 3,610 ரூபாய் சரிந்து இருக்கிறது. 22 கேரட் ஒரு கிராமுக்கு 361 ரூபாயும், ஒரு பவுனுக்கு 2,888 ரூபாயும் விலை சரிந்து இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price for a poun fall around Rs 3000

The 24 carat gold price fall around Rs 3,000 for a poun and 22 carat gold price fall around Rs 2,850 for 8 gram.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X