அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவுகள் முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தங்கம் விலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 1500 ரூபாய் வரையில் குறைந்து சாமானிய மக்களுக்குத் தங்கத்தை வாங்கும் சிறப்பான வாய்ப்பை அளித்தது.
ஆனால் இன்று காலை சர்வதேச சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையிலும், ரூபாய் மதிப்பு சரிவடைந்த காரணத்தால் இந்திய ரீடைல் சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தை தங்கம் விலை
இன்று காலை சர்வதேச சந்தை வர்த்தகம் துவங்கும் வேளையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1770 டாலரில் இருந்து 1,784 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் வாயிலாக 2 நாட்களாக இந்தியாவில் குறைந்து வந்த தங்கம் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தை தங்கம் விலை
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலை 0.32 சதவீதம் அதிகரித்து 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 47,106 ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் தங்கம் விலை தனது வரலாற்று உச்ச அளவில் இருந்து 9500 ரூபாய் குறைவாக உள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தை வெள்ளி விலை
இதேபோல் வெள்ளியின் விலையும் இன்று 0.84 சதவீதம் அதிகரித்து 68,167 ரூபாயாகக் குறைந்துள்ளது. நேற்றைய வர்த்தகச் சரிவில் வெள்ளி விலை தனது வலிமையான 71000 ரூபாய் அளவீடு, 70000 ரூபாய் அளவீட்டைக் கடந்து பெரிய அளவிலான சரிவைப் பதிவு செய்தது.
150 டாலர் வரையில் சரிவு
கடந்த 7 நாட்களில் தங்கம் விலை சர்வதேச சந்தையில் 1901 டாலரில் இருந்து 1771 டாலர் வரையில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை மீண்டும் உயர துவங்கியுள்ள காரணத்தால் வாய்ப்பை நழுவ விடாமல் தங்கம் வாங்க திட்டமிடுவோர் தங்கத்தை வாங்குவது சிறந்தது.
உள்நாட்டு முதலீட்டு சந்தை
தற்போது உள்நாட்டு பங்குச்சந்தை மற்றும் முதலீட்டு சந்தை மிகவும் மோசமாக நிலையை அடைந்து வரும் நிலையிலும், அமெரிக்கச் சந்தையில் வலிமை அடைந்துவரும் காரணத்தால் அதிகளவிலான முதலீடுகள் வெளியேறி வருகிறது. இதன் வாயிலாகவே இன்று சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications