தங்கம் விலையானது வாரத்தின் 4வது வர்த்தக நாளான இன்று சர்வதேச சந்தையினை பொறுத்த வரையில், கிட்டதட்ட 2% ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது.
தொடக்கத்திலேயே கேப் அப் ஆகி காணப்படுகின்றது. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. இதன் காரணமாக ஆபரண தங்கம் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது.
பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், அமெரிக்காவின் வட்டி அதிகரிப்பு குறித்தான பேசிய நிலையில், வட்டி அதிகரிப்பு என்பது இருக்கலாம். எனினும் இது மெதுவான வேகத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2 வார உச்சம்
அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கும் என்ற சூழலில், இது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. வட்டி அதிகரிக்கும்பட்சத்தில் மக்களின் வாங்கும் செலவினங்களை அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு தேவையை குறைக்க வழிவகுக்கலாம். ஆக இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
ஆட்குறைப்பு நடவடிக்கை
தொடர்ந்து வட்டி விகிதமானது மெதுவான வேகத்தில் அதிகரிக்கலாம் என்ற சூழலில், பணவீக்கமும் மெதுவாக குறைய ஆரம்பிக்கலாம். ஏற்கனவே மந்த நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் டெக் நிறுவனங்கள் பணி நீக்கம் செய்து வருகின்றன. இந்த போக்கானது மேற்கொண்டு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தேவையினை குறைக்கலாம்.
முக்கிய டேட்டாக்கள்
அமெரிக்காவின் வேலை வாய்ப்பு குறித்தான தரவானது நாளை வெளியாகவிருக்கும் நிலையில், அதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். அமெரிக்காவில் பே ரோல் தரவானது எதிர்பார்ப்பினை விட குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு டாலரின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
டாலர் மதிப்பு சரிவு
அமெரிக்க டாலரின் மதிப்பானது மீண்டும் சரிவினைக் கண்டு வரும் நிலையில், மறுபுறம் பத்திர சந்தையானது சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. எனினும் இந்த காலகட்டத்தில் முதலீட்டாளர்கள் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காத்துக் கொண்டுள்ளனர் எனலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 33.70 டாலர்கள் அதிகரித்து, 1793.50 டாலராக காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் இன்னும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை
தங்கத்தினை போலவே வெள்ளி விலையும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. வெள்ளியின் விலையானது 3.48% அதிகரித்து, 22.540 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வின் உச்சத்தினை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 485 ரூபாய் அதிகரித்து, 52,965 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்னும் மீடியம் டெர்மில் விலை அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் என எதிர்பர்க்கப்படுகிறது. நடப்பு கான்ட்ராக்ட் ஆனது டிசம்பர் 5 அன்று எக்ஸ்பெய்ரி ஆகவுள்ளது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
வெள்ளி விலையும் கிலோவுக்கு 1270 ரூபாய் அதிகரித்து, 63,510 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளியிலும் நடப்பு கான்ட்ராக்ட் ஆனது டிசம்பர் 5 அன்று எக்ஸ்பெய்ரி ஆகவுள்ளது. ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் வணிகம் செய்வது நல்லது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்து காணப்படும் நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலையானது சென்னையில் இன்று கிராமுக்கு, 19 ரூபாய் அதிகரித்து, 4955 ரூபாயாகவும், சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து, 39,640 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 5405 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 54,050 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 1.80 ரூபாய் அதிகரித்து, 69.80 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 1800 ரூபாய் அதிகரித்து, 69,800 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
More From GoodReturns

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications