மக்கள் மனதில் என்றும் சிறந்த முதலீடாக விளங்கும் தங்கத்தின் விலை கடந்த ஆண்டு முதல் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. பங்குச் சந்தைகளை காட்டில் தங்கம் முதலீட்டாளர்களுக்கு நல்ல ஆதாயம் கொடுத்துள்ளது. 2024ம் ஆண்டில் நிஃப்டி 8.7 சதவீதம் மட்டுமே ஆதாயம் கொடுத்தது. ஆனால் மஞ்சள் உலோகமான தங்கம் முதலீட்டாளர்களுக்கு 20 சதவீதம் ஆதாயம் கொடுத்தது. மேலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அமெரிக்க அதிபரின் பரஸ்பர வரி விதிப்பு, அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கும் மற்றும் அந்நாடு பொருளாதார மந்தநிலைக்குள் செல்லும் என்ற அச்சம் காரணமாக தங்கம் விலை தற்போது உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை கடந்த 3 மாதங்களில் தங்கத்தின் விலை சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த கால கட்டத்தில் தங்கத்தின் விலை (10 கிராம்) ரூ.78,000-லிருந்து ரூ.93,000ஆக உயர்ந்துள்ளது.

2024 ஆகஸ்டில் தங்கத்தின் விலை சுமார் ரூ.70,000 என்ற அளவில் இருந்தது. ஆனால் அதற்கடுத்த எட்டே மாதங்களில் தங்கத்தின் விலை 33 சதவீதம் உயர்ந்தது. கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால், 2024 பிப்ரவரி மாதததில் தங்கத்தின் விலை ரூ.64,000 என்ற அளவில் இருந்தது. அதன்படி பார்த்தால் தங்கத்தின் விலை ஓராண்டுக்கும் கொஞ்சம் அதிகமான காலத்தில் தங்கத்தின் விலை 45 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் தங்கத்தில் கிடைத்த ஆதாயம் மிகவும் அபரிதமானது. இந்த காலத்தில் தங்கத்தின் விலை இரு மடங்குக்கும் மேல் உயர்ந்துள்ளது. அதாவது ஆண்டுக்கு சராசரியாக 16 சதவீதத்துக்கும் கூடுதலாக லாபம் அளித்துள்ளது.
விலை வேகமாக உயர்ந்து வருவதால் இந்த ஆண்டுக்குள் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை எட்டி விடுமோ என்ற கேள்வி எழுகிறது. ஆனால் சாத்தியம்தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது பங்குச் சந்தையில் கரடியின் ஆதிக்கம் நிலவுவதால், பங்குகளை விற்று தங்கத்தில் முதலீடு செய்யுமா என்ற எண்ணத்தில பல முதலீட்டாளர்கள் உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி தங்கத்தில் காளைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன எனவே பங்குகளை விற்று தங்கத்தை வாங்குங்கள் என்ற வர்த்தகம் பிரபலமாகி வருகிறது. இருப்பினும், தங்கத்தின் விலையை உயர்த்தும் அடிப்படை காரணிகளில் ஏதேனும் சாத்தியமான மாற்றங்கள் ஏற்படுமா என்பதை முதலீட்டாளர்கள் கவனமாக கவனிக்க வேண்டும்.
முன்னணி நிதி ஆய்வு நிறுவனமான ஈக்விட்டிமாஸ்டர்ஸ் கூறுகையில், ரஒருவரின் போர்ட்ஃபோலியாவில் எப்போதும் 5 முதல் 10 சதவீதம் தங்கமாக இருக்க வேண்டும். இருப்பினும் முதலீட்டாளர்கள் தங்கத்தை வேறு எந்த சொத்ததுக்கும் மாற்றாக பார்க்கக்கூடாது. ஒருவரின் நீண்ட கால போர்ட்ஃபோலியாவில் சில விலைமதிப்பற்ற உலோகங்களை வைத்திருப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும்.
ஆனால் குறுகிய கால விலை நகர்வுகள் குறித்து ஊகிப்பதில் அர்த்தமில்லை. சமீபத்தில் விலை உயர்ந்து விட்டதால், அது தானாகவே தங்கத்தை ஒரு சிறந்த முதலீடாக மாற்றாது என்று எச்சரிக்கை செய்துள்ளது.
அம்பானி டூ பிர்லா வரை: வாரிசு கைக்கு வந்த சாம்ராஜ்ஜியங்கள்..! இனி ஆட்டம் வேற லெவல்..!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை: முதலீட்டாளர்களுக்கு செபி தலைவர் கூறும் அட்வைஸ்

டாடா மோட்டார்ஸ் பங்குகளை கைகழுவிய ராதாகிஷன் தமானி: சில்லறை முதலீட்டாளர்களே கவனம்..

பணக்காரர்களின் ரகசியப் பாதை! ஏன் ராபர்ட் கியோசாகியின் முதலீட்டு டிப்ஸ் இன்றும் ஒரு மந்திரம்?

40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!



Click it and Unblock the Notifications