தங்கம் விலையில் உயர்வுக்கு என்ன காரணம்..? முதலீடு செய்வது சரியா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை பல்வேறு சர்வதேச வர்த்தகச் சூழ்நிலையின் காரணமாக மந்தமாக இருந்தது.

குறிப்பாகச் சீனாவின் பொருளாதாரத் தரவுகள் மற்றும் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் டாலர் மதிப்பைச் சரிவில் இருந்து காப்பாற்ற எடுக்கும் நடவடிக்கை ஆகியவற்றின் மூலம் மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்தது.

ஆனால் தற்போது தங்கம் விலை உயரத் துவங்கியுள்ளது, ஜூலை மாதத்தின் முதல் 2 வாரத்தில் மட்டும் தங்கம் விலை சுமார் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று வர்த்தகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன..?!

 சீனா ஜிடிபி

சீனா ஜிடிபி

2021ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் சீனாவின் ஜிடிபி அளவு 7.9 சதவீதமாக உயர்ந்துள்ளது, ஜூன் காலாண்டில் சீனா 8.1 சதவீதம் வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக உற்பத்தித் துறை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டது.

 அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை

அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இல்லாமல் அரசு உதவி பெறுவோர் எண்ணிக்கை ஜூன் மாதமே குறையும் என எதிர்பார்க்கப்பட்ட போது, தற்போது கணிப்புகளை விடவும் அதிகமானோர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனால் டாலர் மதிப்பு சரியும் நிலை உருவாகியுள்ளது, இதைச் சமாளிக்கப் பெடர்ல் ரிசர்வ் குறிப்பிடத்தக்க அளவிலான தொகையைத் தம்ஹகம் மீது முதலீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 சர்வதேச சந்தை விலை

சர்வதேச சந்தை விலை

இந்தச் சூழ்நிலையில் சர்வதேச தங்க முதலீட்டுச் சந்தையில் முதலீடுகள் கணிசமாக அதிகரித்து வரும் காரணத்தால் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை ஜூலை 15ஆம் தேதி வர்த்தகத்தில் 1,826 டாலர் முதல் 1,833 டாலர் வரையில் அதிகரித்துள்ளது.

 MMTC சந்தை விலை

MMTC சந்தை விலை

ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை 4,981.77 ரூபாயாகவும், இதுவே 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை 4,567.2 ரூபாய் அளவிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 74.52 அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் அதிகளவிலான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price increasing still cheaper by Rs 7900 from record levels, right time to invest?

Gold price increasing still cheaper by Rs 7900 from record levels, right time to invest?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X