ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை, தாறுமாறான உச்சத்தில் இருந்தது. ஆனால் தற்போது தரை தட்டி, ஒரு பெரிய விலை வீழ்ச்சியில் இருக்கிறது.
ஆனால், தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. சென்னை ஆபரணத் தங்கம் விலை தொடங்கி, எம் சி எக்ஸ் தங்கம் விலை, சர்வதேச தங்கம் விலை என எல்லாவற்றிலுமே தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
இந்த நேரத்தில், தங்கம் வாங்க விரும்புபவர்கள் அல்லது தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், இந்த வாய்ப்பைத் தவற விடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கம் இப்போது எவ்வளவு விலை வீழ்ச்சியில் இருக்கிறது? தங்கம் விலை நிலவரம் என்ன? வாருங்கள் பார்ப்போம்.
தங்கம் விலை (24 கேரட் 10 கிராம் சென்னை ஆபரணத் தங்கம்)
சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று (29 செப் 2020) அன்று 52,530 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள். ஆகஸ்ட் உச்சத்தில் இருந்து கணக்கிட்டால் இது 6,600 ரூபாய் விலை வீழ்ச்சி. ஆபரணத் தங்கம் வாங்க விரும்புபவர்கள் இந்த வாய்புகளைப் பயன்படுத்திக் கொண்டு நகை நட்டுக்களை வாங்கிக் கொள்ளவும்.
சென்னை ஆபரணத் தங்கம் விலை (22 கேரட் 10 கிராம்)
சென்னை மாநகரத்தில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை, நேற்று, 48,160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இதை ஆகஸ்ட் 2020 உச்ச விலை உடன் ஒப்பிட்டால் 6,040 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது. நல்ல வாய்ப்பா இல்லையா என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஆபரணத் தங்கம் விலை மீண்டும் விலை
சென்னை ஆபரணத் தங்கம் விலை மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது. 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 51,870 ரூபாய் வரை சரிந்தது. ஆனால் நேற்று 52,530 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதே போல 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை 47,550 ரூபாய் வரை வீழ்ந்தது. நேற்று 48,160 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆக சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அசால்டாக ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது.
எம் சி எக்ஸ் தங்கம் விலை - அக்டோபர் காண்டிராக்ட்
அக்டோபர் மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, தற்போது 50,520 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இந்த விலையை, கடந்த ஆகஸ்ட் 2020 உச்சத்துடன் ஒப்பிட்டால் 5,671 ரூபாய் விலை சரிந்து இருக்கிறது. சமீபத்தில் எம் சி எக்ஸ் தங்கம் விலை 49,248 ரூபாய் வரை விலை சரிந்து, தற்போது 50,520 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
XAU USD சர்வதேச தங்கம் விலை
ஒரு அவுன்ஸ், சர்வதேச தங்கம் விலை இன்று 1,887 டாலருக்கு வர்த்தகமாகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து கணக்கிட்டால் 176 டாலர் வீழ்ச்சி கண்டு இருக்கிறது. சர்வதேச தங்கம் விலை சமீபத்தில் 1,861 டாலர் வரை சரிந்து, தற்போது 1,887 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மிஸ் பண்ணிடாதீங்க
ஜிம் ராஜர்ஸ் போன்ற உலகின் முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர்கள், தங்கம் ஒரு நல்ல விலை ஏற்றத்தைக் காணும் எனச் சொல்லி இருக்கிறார்கள். கோல்ட்மேன் சாக்ஸ் தங்கம் 2,300 டாலர் வரைத் தொடலாம் எனச் சொல்லி இருக்கிறது. பேங்க் ஆஃப் அமெரிக்கா 3,000 டாலர் வரைத் தொடலாம் எனக் கணித்து இருக்கிறது. எனவே தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
93.95-ல் டாலர் இண்டெக்ஸ்
டாலர் இண்டெக்ஸ் முன்பு 94.5 புள்ளிகளில் தடுமாறிக் கொண்டு இருந்தது. ஆனால் இப்போது 93.95 புள்ளிகளுக்கு சரிந்து இருக்கிறது. டாலர் பலவீனமடைந்தால், தன்னிச்சையாகவே, மற்ற நாட்டு கரன்சி வைத்திருப்பவர்கள் குறைந்த விலைக்கு தங்கம் வாங்க முடியும். எனவே தங்கத்தில் முதலீடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
0.07 % தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு
உலகின் மிகப் பெரிய தங்க ட்ரஸ்டான SPDR Gold Trust-ல், தங்க கையிருப்பு, கடந்த செவ்வாய் கிழமை (29 செப் 2020) 0.07 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. தற்போது SPDR Gold Trust-ன் தங்க கையிருப்பு 1,268.89 டன்னாக அதிகரித்து இருக்கிறதாம்.
இந்த காரணங்களாலும் தங்கம் விலை அதிகரிக்கும்
1. கொரோனா வைரஸ் சகட்டு மேனிக்கு பரவிக் கொண்டு இருப்பது
2. பூகோள அரசியல் பிரச்சனைகள்
3. தடுமாறும் பங்குச் சந்தை
4. தடுமாறிக் கொண்டு இருக்கும் டாலர் மதிப்பு... போன்ற காரணங்களால் தங்கம் விலை அதிகரிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications