ரபேல் வேகத்தில் உயரே பறக்கும் தங்கம் விலை! எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரண தங்கத்தின் விலை, மீண்டும் ஒரு வரலாற்று உச்சமாக 56,500 ரூபாய்க்கு நேற்று விற்பனை ஆகி இருக்கிறது.

 

அதே சிங்காரச் சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, 51,790 ரூபாய் என்கிற மிகப் பெரிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது.

இது போக எம் சி எக்ஸ் தங்கம் விலை மற்றும் சர்வதேச தங்கம் விலை என எல்லாமே புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது.

விரிவாகப் பார்ப்போம்

விரிவாகப் பார்ப்போம்

சர்வதேச தங்கம் விலை என்ன? எம் சி எக்ஸ் தங்கம் விலை என்ன? இப்படி தங்கத்தின் விலை ஏற அடிப்படை காரணங்கள் என்ன? டாலர் நிலை எப்படி இருக்கிறது? என எல்லாவற்றையும் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம். முதலில் இந்தியாவின் கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் இருந்து தொடங்குவோம்.

தங்கம் விலை எம் சி எக்ஸ் ஆகஸ்ட் மாத ஃப்யூச்சர் காண்டிராக்ட்

தங்கம் விலை எம் சி எக்ஸ் ஆகஸ்ட் மாத ஃப்யூச்சர் காண்டிராக்ட்

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் சந்தையில் பட்டியலிடப்பட்டு, வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும், ஆகஸ்ட் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்ட்டின் விலை படு பயங்கரமாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இன்று காலை கூட வரலாற்று உச்சமாக, 54,199 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்னும் எத்தனை புதிய உச்சங்களைத் தொடப் போகிறதோ தெரியவில்லை.

MCX வெள்ளி விலை நிலவரம்
 

MCX வெள்ளி விலை நிலவரம்

அதே போல செப்டம்பர் 2020 மாதத்துக்கான 1 கிலோ வெள்ளி ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலையும் 65,950 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. தற்போது இருக்கும் விலை நிலவரத்துக்கு தங்கம் தான் வாங்க முடியாது போல எனப் பார்த்தால், வெள்ளியை வாங்குவதற்கு கூட சிரமம் தான் போலிருக்கிறதே.

ஒரு அவுன்ஸ் தங்கம் விலை - டாலரில்

ஒரு அவுன்ஸ் தங்கம் விலை - டாலரில்

சர்வதேச சந்தைகளில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, கடந்த 9 ஆண்டு கால, விலை உச்சத்தை எல்லாம் கடந்து 1,988 அமெரிக்க டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் அடுத்த சில வாரங்களில் கோல்ட்மேன் சாக்ஸ் சொன்னது போல 2,000 டாலரை அசால்டாகத் தொட்டு விடும் போலிருக்கிறதே. ஜூலை 2020 மட்டும் தங்கம் விலை 11 % அதிகரித்து இருக்கிறது. 2012-ம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச தங்கம் விலை இந்த அளவுக்கு அதிகரிப்பது இதுவே முதல் முறையாம்.

இது தான் காரணங்களா?

இது தான் காரணங்களா?

டாலர் பலவீனமாகிக் கொண்டு இருப்பது, உலக பொருளாதாரம் மீண்டும் வழக்கம் போல செயல்படுவதில் இருக்கும் சிரமங்கள் மற்றும் எதார்த்த பிரச்சனைகள், உலக அளவில் அதி வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் போன்ற பிரச்சனைகளால் தங்கம் விலை தாறு மாறாக அதிகரித்துக் கொண்டே போகிறது.

Stimulus Package பிரச்சனை

Stimulus Package பிரச்சனை

அமெரிக்கா, மீண்டும் ஒரு புதிய ஊக்கத் தொகையைக் கொண்டு வர படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இது முதலீட்டாளர்களை பதட்டமடையச் செய்கிறது. மீண்டும் புதிய ஊக்கத் தொகையைக் கொண்டு வந்தால், மேலும் டாலர் பலவீனமடையும். இது தங்கத்தின் விலையை அதிகரிக்க உதவும் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

டாலர் ரூபாய் மதிப்பு

டாலர் ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. 74.74 ரூபாய்க்கு ஒரு டாலர் என்று இருந்த நிலை இன்று 74.99 ரூபாய்க்கு ஒரு டாலர் என மாறி இருக்கிறது. மீண்டும் 75 ரூபாய்க்கு மேல் போனால் அது தங்கத்தின் விலையை அதிகரிக்கவே உதவும். 

தங்கம் விலை ஏறுமா

தங்கம் விலை ஏறுமா

தங்கம் விலை அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார்கள் அனலிஸ்ட்கள். பொதுவாக அமெரிக்க டாலர் அல்லது தங்கத்தை தான் பாதுகாப்பான முதலீடுகளாகப் பார்ப்பார்கள். இப்போது அமெரிக்க டாலர் பலவீனமடைந்து கொண்டு இருப்பதால், தங்கத்தில் முதலீடுகள் மேலும் குவிந்து விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price is in uptrend inching towards new highs

Gold price are touching new highs. Chennai gold price, International gold price, MCX gold price everything is in uptrend.
Story first published: Monday, August 3, 2020, 12:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X