சாமானியர்களைச் சோதிக்கும் தங்கம் விலை! 50,000 ரூபாயை தொடாமல் விடாது போலிருக்கே!

நம் வீட்டில், நம் அம்மா அப்பாவுக்கு கல்யாணம் ஆகும் போது ஒரு பவுன் தங்கம் என்ன விலைக்கு வாங்கினீர்கள்? என்று கேட்டுப் பாருங்கள்.

1990-களில் 8 கிராம் தங்கம் விலையே 2600 - 2700 ரூபாய்க்குள் இருந்து இருக்கும். 2000 ஆண்டு வாக்கில் ஒரு பவுன் தங்கம் விலை சுமாராக 3,600 ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக இருந்து இருக்கும்.

ஆனால் இன்று விலை நிலவரம் என்ன..? ஒரு பவுன் தங்கம் விலை கிட்டத்தட்ட 40,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிக் கொண்டு இருக்கிறது. சரி சமீபத்தைய Gold விலை நிலவர செய்திகள் என்ன..? முதலில் Chennai Gold rate-ல் இருந்து தொடங்குவோம்.

சென்னையில் தங்கம் விலை

சென்னையில் தங்கம் விலை

வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாநகரத்தில், நேற்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 49,610 ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கிறது. பவுனுக்கு 39,688 ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கிறது. கிராம் விலை 4,961 ரூபாய். ஆத்தி இன்னும் 39 ரூபாய் விலை ஏறினால் கிராமுக்கு 5,000 ரூபாயா..? என்பது தான் நம் கவலை.

22 கேரட் விலை என்ன

22 கேரட் விலை என்ன

24 கேரட் தங்கம் கிராமுக்கு 5,000 ரூபாயைத் தொடப் போகிறது என்றால், நேற்று 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 45,470 ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கிறது. பவுனுக்கு 36,376 ரூபாய். கிராமுக்கு 4,547 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது. சுமாராக ஒரு வருடம் முன்பு, 4,547 ரூபாய்க்கு 24 கேரட் தங்கமே வாங்கலாம். ஆனால் இன்று செய் கூலி, சேதாரம் எல்லாம் போட்டால் 22 கேரட் தங்கம் கிடைப்பதே சிரமம் தான்.

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

நேற்றைக்கு போலவே, ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, சர்வதேச அளவில், 1,730 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. 17 ஜூன் 2020 அன்று சர்வதேச தங்கம் விலை 1,713 டாலருக்கு நிறைவடைந்து இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே சர்வதேச அளவில் தங்கம் நிலையாகவே வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. விலை ஏற்றம் இல்லை.

அமெரிக்க டாலர் பிரச்சனை

அமெரிக்க டாலர் பிரச்சனை

ஆனால் அமெரிக்க டாலர் தான், இந்தியாவில் தங்கம் விலை ஏற்றத்தை உறுதி செய்து கொண்டு இருக்கிறது. "அமெரிக்க டாலரால் விலை உயரும் தங்கம்..! எப்படி..?" என்கிற தலைப்பில் விரிவாக உதாரணங்களுடன் எழுதி இருக்கிறோம். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த ஒரு மாத காலத்தில் இல்லாத அளவுக்கு , ஜூன் 17 அன்று 76.21 ரூபாய்க்கு நிறைவடைந்து இருக்கிறது.

ரூபாய் பலவீனம்

ரூபாய் பலவீனம்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 76.10 ரூபாய்க்குக் கீழ் வந்ததாகத் தெரியவில்லை. இன்று காலை முதல் கொஞ்சம் ரூபாய் பலமடைந்தது போலத் தெரிகிறது. தற்போது ஒரு அமெரிக்க டாலருக்கு 76.19 ரூபாய் என்கிற கணக்கில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இப்போதைக்கு இந்திய ரூபாய் வலுவடைந்தால் தான் தங்கம் விலையில் ஒரு தீர்வு உண்டாகும்.

கமாடிட்டி சந்தையில் தங்கம்

கமாடிட்டி சந்தையில் தங்கம்

இந்திய கமாடிட்டி சந்தையான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், ஆகஸ்ட் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்ட்டின் விலை 47,340 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்று ஆகஸ்ட் 2020 மாத தங்கத்துக்கான ஃப்யூச்சர் காண்டிராக்ட்டின் விலை 47,680 ரூபாயைத் தொடும் விதத்தில் 47,650 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை என்ன ஆகும்

தங்கம் விலை என்ன ஆகும்

டாலர் தொடர்ந்து வலு பெறுவது,
ரூபாய் பலவீனமடைவது,
இந்தியா சீனா எல்லை பிரச்சனையால் நிலவும் ஒரு விதமான போர் பதற்றம், இந்தியாவின் எம் சி எக்ஸ் கமாடிட்டி சந்தையில் தங்கம் விலை அதிகரிப்பது போன்றவைகள் எல்லாம், இந்தியாவில் ஆபரணத் தங்கம் விலை ஏற்றத்தை ஊக்குவிப்பதாகவே இருக்கிறது. தங்கம் 50,000 ரூபாயை தொடும் என எதிர்பார்க்கலாம்.

சாமானியர்களுக்கு சோதனை

சாமானியர்களுக்கு சோதனை

இந்தியாவில், ஒரு நடுத்தர குடும்பத்தின் மாத வருமானம் 50,000 ரூபாய் இருந்தால் மிகப் பெரிய விஷயம். ஆனால் இங்கு 10 கிராம் தங்கத்தின் விலை 50,000 ரூபாயைத் தொடும் என்றால், எப்போது நகை வாங்கி, அக்கா தங்கை மகள்களுக்கு எல்லாம் திருமணம் செய்து வைக்க முடியும். சாமானியர்கள் தங்கம் வாங்குவதற்கே தனியாக இன்னொரு வேலை பார்த்து சம்பாதிக்க வேண்டி இருக்கும் போலிருக்கிறதே..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+