தங்கத்தில் பணத்தைக் குவித்த மக்கள்! தங்க உற்பத்தியைக் குறைக்கும் சுரங்க கம்பெனிகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2020-ம் ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை சுமாராக 28 சதவிகிதம் அதிகரித்துவிட்டது.

திருமணம், காது குத்து போன்ற நல்ல காரியங்களுக்கு தங்கம் வாங்க வேண்டும் என்றால் கூட, நடுத்தர மக்கள் 100 முறை யோசிக்கும் அளவுக்கு தங்கத்தின் விலை புதிய உச்சங்களைத் தொட்டது.

ஆனால் இன்று, ஆபரணத் தங்கம் விலை, 07 ஆகஸ்ட் 2020 உச்ச விலையில் இருந்து, சுமாராக 5,750 ரூபாய் விலை குறைந்து விற்பனை ஆகி வருகிறது. ஒரு பக்கம், ஆபரணத் தங்கம் வாங்க மக்கள் தயங்குகிறார்கள் என்றால், மறு பக்கம், அதே தங்கத்தின் முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

தங்கத்தில் குவிந்த முதலீடு

தங்கத்தில் குவிந்த முதலீடு

இந்தியாவின் தங்க இ டி எஃப் திட்டங்களில், கடந்த ஆகஸ்ட் 2020 மாதத்திலும் மக்கள் பணத்தைக் குவித்து இருக்கிறார்கள்.
2020-ம் ஆண்டில் மாத வாரியாக நிகர முதலீடு விவரங்கள் கீழே:
ஜனவரி 202 கோடி ரூபாய்
பிப்ரவரி 1,483 கோடி ரூபாய்
மார்ச் -195 கோடி ரூபாய் (விற்று வெளியே எடுத்து இருக்கிறார்கள்)
ஏப்ரல் 731 கோடி ரூபாய்
மே 815 கோடி ரூபாய்
ஜூன் 494 கோடி ரூபாய்
ஜூலை 921 கோடி ரூபாய்
ஆகஸ்ட் 908 கோடி ரூபாய் என முதலீடு செய்து இருக்கிறார்கள் மக்கள்.

தங்கம் மீதான நம்பிக்கை

தங்கம் மீதான நம்பிக்கை

ஆக எப்படியும் தங்கம் விலை ஏறும் என்கிற நம்பிக்கையில், மக்கள் தொடர்ந்து 5-வது மாதமாக, தங்கள் பணத்தை, தங்க இ டி எஃப் திட்டங்களில் முதலீடு செய்து இருக்கிறார்கள் என்பதை இந்த தரவுகள் வழியாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது. 2020-ம் ஆண்டில் மட்டும் மக்கள் 5,356 கோடி ரூபாயை தங்க இ டி எஃப் திட்டங்களில் முதலீடு செய்து இருக்கிறார்கள். சரி தங்கம் விலை நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை

வள்ளுவர் கோட்டம் கொண்ட சென்னை மாநகரத்தில், நேற்று 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 53,350 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பவுன் விலை 42,680 ரூபாய். 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 48,910 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு பவுன் விலை 39,128 ரூபாய்.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் 10 கிராம் ஆபரண வெள்ளி விலை நேற்று 679 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இன்று டிசம்பர் 2020 மாதத்துக்கான 1 கிலோ வெள்ளி ஃப்யூச்சர் விலை 68,190 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை, இதே வெள்ளி ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை 67,928 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்றத்தில் எம் சி எக்ஸ் தங்கம் விலை

ஏற்றத்தில் எம் சி எக்ஸ் தங்கம் விலை

05 அக்டோபர் 2020, 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, தற்போது 51,412 ரூபாய்க்கு, 93 ருபாய் (0.18 %) விலை ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த தங்க காண்டிராக்ட் 51,319 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்தது.

குட்டி ஏற்றத்தில் சர்வதேச தங்கம் விலை

குட்டி ஏற்றத்தில் சர்வதேச தங்கம் விலை

இன்று, ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை (XAU : USD), 1,951 டாலர் வரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை 1,940 டாலரில் வர்த்தகம் நிறைவடைந்தது. ஆக 11 டாலர் விலை ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஏன் இப்படி தங்கம் விலை தடுமாறிக் கொண்டு இருக்கிறது?

கொரோனா வைரஸுக்கான வேசின் மருந்து

கொரோனா வைரஸுக்கான வேசின் மருந்து

AstraZeneca மருந்து கம்பெனி, மீண்டும் கொரோனா வைரஸ் வேசின் மருந்துக்கான மூன்றாம் கட்ட சோதனையைத் தொடங்கி இருக்கிறது. இதனால் பங்குச் சந்தைகள் எல்லாம் உற்சாகமாக ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. சென்செக்ஸ் 267 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆசியாவில் சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் தவிர மற்ற சந்தைகள் எல்லாமே ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன.

அமெரிக்க டாலர் கரன்சி

அமெரிக்க டாலர் கரன்சி

உலகின் 6 முக்கிய கரன்சிகளுக்கு எதிரான, அமெரிக்க டாலர் கரன்சியின் மதிப்பு நிலையாக இருப்பதாகச் சொல்கிறது மணி கண்ட்ரோல் வலைதளம். அதோடு, செப்டம்பர் 15 - 16 தேதிகளில் நடக்க இருக்கும் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் பாலிசி கூட்டத்தை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

தங்க சுரங்க கம்பெனிகள்

தங்க சுரங்க கம்பெனிகள்

தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து இருக்கும் இந்த நேரத்தில் கூட, உலகின் டாப் தங்க சுரங்க கம்பெனிகள், தங்கள் உற்பத்தியைப் பெருக்காமல், உஷாராக இருப்பதாகச் சொல்கிறது டெக்கன் ஹெரால்ட் பத்திரிகை. மாறாக, தங்களின் தங்க உற்பத்தியை சுமாராக 7 % குறைக்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார்களாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price is struggling to go up but investors pour money in gold

The gold price has been struggling to go up. But as per the AMFI data, investors had poured money in Gold ETF in the month of August 2020.
Story first published: Monday, September 14, 2020, 11:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X