தடுமாறும் தங்கம் விலை! எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலை கடந்த சில வாரங்களாகவே, தடுமாறிக் கொண்டு இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் வரை சர சரவென ஏற்றம் கண்டு கொண்டிருந்த தங்கம், அடுத்தடுத்த வாரங்களில் நல்ல விலை இறக்கம் கண்டு இருக்கின்றன.

சர்வதேச தங்கம் விலை, எம் சி எக்ஸ் தங்கம் விலை, ஆபரணத் தங்கம் என எல்லாவகையான தங்கமும், தற்போது விலை ஏற்றம் காண முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றன.

ஏன் தங்கம் விலை ஏற்றம் காணாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது? தங்கம் விலை நிலவரம் என்ன? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.

டாலர் இண்டெக்ஸ்

டாலர் இண்டெக்ஸ்

டாலர் இண்டெக்ஸ் சரிகிறது என்றால், மற்ற நாட்டு கரன்சிகள் வலுவடைதாகப் பொருள். அமெரிக்க டாலர் வலுவிழப்பதாகப் அர்த்தம். டாலர் வலுவிழக்கிறது என்றால், மற்ற நாட்டு கரன்சி வைத்திருப்பவர்கள், குறைந்த விலையில் தங்கத்தை வாங்க முடியும். கடந்த ஒரு மாத கலமாக டாலர் இண்டெக்ஸ் பெரிய ஏற்ற இறக்கங்களைக் காணவில்லை 92.27 - 93.69 புள்ளிகளுக்குள்ளேயே வர்த்தகமாகி வருகின்றன. இது தங்கத்தின் விலை தடுமாற்றத்திலும் பிரதிபலிக்கிறது எனலாம்.

பாண்டு வருமானம்

பாண்டு வருமானம்

பொதுவாக, கடன் பத்திரங்கள் மற்றும் வட்டி வருமானம் கொடுக்கக் கூடிய முதலீடுகளில் நல்ல வருமானம் வராத போது தான், தங்கம் போன்ற முதலீடுகளில் மக்கள் குவிவார்கள். நேற்று (27 ஆகஸ்ட் 2020) அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி, பணக் கொள்கை தொடர்பாக பேசியது, அமெரிக்க பாண்டுகளின் வருமானத்தை உயர்த்தி இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆக பாண்டுகளில் வருமானம் வருகிறது என்றால், தங்கத்தில் முதலீடுகள் குறையலாம். தங்கத்தின் முதலீடுகள் குறைந்தால், விலையும் ஆட்டம் காணத் தானே செய்யும்.

கொரோனாவுக்கு மருந்து

கொரோனாவுக்கு மருந்து

கோவிட் ஷீல்ட், ஸ்புட்னிக், கோவேக்சின் என, கொரோனா வைரஸுக்கு பல மாற்று மருந்துகள் பற்றிய நல்ல செய்திகள் வரத் தொடங்கி இருக்கின்றன. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் போய்க் கொண்டிருந்த போது தான் தங்கமும் தலை தெறிக்க விலை ஏறிக் கொண்டு இருந்தது. இப்போது, மாற்று மருந்துகள் பற்றிய செய்திகள் வருவதால், தங்கம் விலையும் ஏற்றம் காண முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது.

இயங்கும் பொருளாதாரம்

இயங்கும் பொருளாதாரம்

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலகட்டத்தில் தான் லாக் டவுன் எல்லாம் அறிவித்தார்கள். எனவே பங்குச் சந்தைகள் எல்லாம் படு பாதாளத்தைத் தொட்டன. ஆனால் இப்போது கொரோனா அதிகம் பரவி இருக்கும் காலத்தில் கூட, லாக் டவுன் எல்லாம் தளர்த்தப்பட்டு, கம்பெனிகள் செயல்படத் தொடங்கி இருக்கின்றன. பொருளாதாரம் மீண்டும் இயங்கத் தொடங்கி இருக்கின்றன. பங்குச் சந்தைகள் எல்லாம் கிட்டத்தட்ட பழைய நிலைக்கு வந்துவிட்டன எனலாம். பொருளாதாரம் இயங்கத் தொடங்கி, பங்குச் சந்தைகளும் லாபம் கொடுக்கத் தொடங்கிய பின், தங்கம் விலை ஏற்றம் காண முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. சரி தங்கம் விலை நிலவரம் என்ன? ஆபரணத் தங்கத்தில் இருந்து தொடங்குவோம்.

சென்னையில் தங்கம் விலை - 24 கேரட் & 22 கேரட்

சென்னையில் தங்கம் விலை - 24 கேரட் & 22 கேரட்

நேற்று சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 54,270 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 49,750 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கடந்த 18 ஆகஸ்ட் 2020-க்குப் பிறகு, சென்னை ஆபரணத் தங்கம் விலை, நேற்று தான் ஒரு நல்ல விலை ஏற்றத்தைக் கண்டு இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

MCX தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை

MCX தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், அக்டோபர் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, தற்போது 50,972 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. 18 ஆகஸ்ட் 2020 விலை உடன் ஒப்பிடும் போது, இன்னமும் ஒரு நல்ல விலை ஏற்றம் காணவில்லை.

MCX வெள்ளி விலை

MCX வெள்ளி விலை

செப்டம்பர் மாதத்துக்கான 1 கிலோ வெள்ளி ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை இன்று 65,696 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. கடந்த 07 ஆகஸ்ட் 2020 அன்று இதே ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை 77,949 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது என்றால், எவ்வளவு விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது என நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

தடுமாறும் சர்வதேச தங்கம் விலை

தடுமாறும் சர்வதேச தங்கம் விலை

கடந்த 19 ஆகஸ்ட் 2020 அன்று, ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை 1,928 டாலரைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றும் (27 ஆகஸ்ட் 2020) ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, 1,929 டாலருக்குத் தான் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இன்று ஏதோ கொஞ்சம் விலை ஏற்றம் கண்டு தற்போது 1,944 டாலரில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

எதிர்காலத்தில் தங்கம் விலை

எதிர்காலத்தில் தங்கம் விலை

ஜிம் ராஜர்ஸ் என்கிற உலகின் முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர், வருங்காலத்தில், தங்கம் ஒரு நல்ல விலை ஏற்றத்தைக் காணும் எனச் சொல்லி இருந்தது நினைவு கூறத்தக்கது. அதோடு அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான புகைச்சல், இந்தியா சீனாவுக்கு இடையிலான பஞ்சாயத்துக்கள், அமெரிக்க அரசு அறிவிக்க இருக்கும் ஸ்டிமுலஸ் பேக்கேஜ் எல்லாம் தங்கத்தின் விலையை அதிகரிக்கவே ஊக்குவிக்கும். எனவே நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது தங்கம் விலை அதிகரிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அனலிஸ்ட்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price is struggling to go up why what may happen to gold price in future

Why the Gold price is struggling to go up now? What may happen to the precious metal gold price in future?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X