பாவம் சாமானியர்கள்! அடுத்த விலை ஏற்றத்துக்கு தயாராகும் தங்கம்! காரணங்கள் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்போதும் தங்கத்தின் விலை, ஒரு சில மாதங்களுக்கு உயரும். அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட விலைக்கு உள்ளேயே வர்த்தகமாகத் தொடங்கிவிடும் என்கிறார்கள் அன்லிஸ்ட்கள்.

 

ஆனால் இந்த முறை, 2021-ம் ஆண்டடின் ஜூன் ஜூலை மாதம் வரை விலை உயர வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

ஏன் இப்படி தங்கம் விலை அதிகரிக்கும்? தங்கம் விலை 2021-ம் ஆண்டு வரை அதிகரிக்க முக்கிய காரணங்கள் என்ன? சென்னையில் தங்கம் விலை நிலவரம் என்ன? வாருங்கள் எல்லாவற்றுக்கும் விடை காண்போம்.

முந்தைய கணிப்புகள்

முந்தைய கணிப்புகள்

உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான கோல்ட் மேன் சாக்ஸ், 2021-ம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை 2,000 டாலரைத் தொடலாம் எனச் சொல்லி இருக்கிறது. அதே போல, சிட்டி பேங்க்கும், தங்கத்தின் விலை பிரமாதமாக அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது எனக் கணித்து இருக்கிறது. உலகின் முன்னணி கமாடிட்டி முதலீட்டாளரான ஜிம் ராஜர்ஸும் தங்கம் விலை இந்த கொரோனா பிரச்சனைக்குள் ஒரு நல்ல ஏற்றத்தைக் காணும் எனக் கணித்து இருக்கிறார்.

காரணங்கள் என்ன?

காரணங்கள் என்ன?

உலக பொருளாதாரம் சுமாராக 5 சதவிகிதம் வரை சரியலாம் எனக் கணித்து இருக்கிறது ஐஎம்எஃப். உலக பங்குச் சந்தைகளும் இன்னும் பழைய நிலைக்கு வந்ததாகத் தெரியவில்லை. அதோடு இந்த ஆண்டு முழுக்க ரெசசன் நிலவ வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதோடு பல நாட்டு அரசாங்கங்கள் மற்றும் பல நாட்டு மத்திய வங்கிகள் சரமாரியாக பணத்தை பொருளாதாரத்தில் செலுத்துவார்கள். இது எல்லாமே தங்கம் விலை ஏற்றத்தை ஊக்கப்படுத்துவதாகவே அமையும்.

வங்கி மற்றும் தரகு நிறுவனங்கள்
 

வங்கி மற்றும் தரகு நிறுவனங்கள்

எப்போது எல்லாம் பாண்டுகளில் வட்டி விகிதங்கள் அல்லது வருமானம் கிட்டத்தட்ட 0-ஆக இருக்கிறதோ அப்போது எல்லாம் தங்கம் மற்றும் antecraft எனப்படுகிற பழங்காலப் பொருட்கள் போன்றவைகளின் விலை அதிகரிக்கும் என்கிறார்கள் வங்கிகள் மற்றும் தரகு நிறுவனங்கள். ஆக எப்படிப் பார்த்தாலும் தங்கத்தின் விலை தற்போதைக்கு வீழ்ச்சி காண்பதாகத் தெரியவில்லை.

வரலாறு சொல்வதென்ன

வரலாறு சொல்வதென்ன

1929 உலகின் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி நிலவத் தொடங்கிய போது, சுமாராக 20 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்த ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 1934 காலகட்டத்தில் 35 டாலருக்கு வர்த்தகமானதாம். அதே போல, 2008 லே மேன் பிரதமர்ஸ் நிதி நெருக்கடி வந்து உலகமே பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்ட போது சுமாராக 700 டாலரில் வர்த்தகமாகி வந்த ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2011 அக்டோபர் வாக்கில் 1900 டாலரைத் தொட்டு வர்த்தகமானதாம்.

விலை ஏற்றம் உறுதி

விலை ஏற்றம் உறுதி

ஆக மேலே சொன்ன காரணங்கள் மற்றும் கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தங்கம் விலை இன்னும் அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் பிரகாசமாகத் தெரிகின்றன. கோல்ட் மேன் சாக்ஸ் சொன்னது போலவே தங்கம் அடுத்த 2021-ம் ஆண்டுக்குள் 2,000 டாலரைத் தொட்டு விடுமோ என்று தான் தோன்றுகிறது. சரி விலை நிலவரங்களுக்கு போவோம்.

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

கடந்த 16 ஜூலை 2020 அன்று 1,797 டாலரில் நிறைவடைந்த ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, அடுத்த நாளே (17 ஜூலை 2020) 1,810 டாலரில் நிறைவடைந்து கிளி கிளப்பியது. தற்போது அதே ஒரு அவுன்ஸ் தங்கம், 1,810 டாலரைத் தங்கம் விடுவதாகத் தெரியவில்லை. இன்று காலையிலேயே 1,810 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது சர்வதேச தங்கம்.

டாலர் ரூபாய் மதிப்பு

டாலர் ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த 14 ஜூலை 2020 அன்று 75.42 ரூபாய்கு நிறைவடைந்தது. ஆனால் இன்று 74.95 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இருப்பினும் ரூபாய் மதிப்பு 74 ருபாய்க்குள் இன்னும் வரவில்லை. கடந்த ஒரு மாத காலத்தில் 74.64 ரூபாய் தான், அமெரிக்க டாலருக்கு நிகரான, மிகக் குறைந்த ரூபாய் மதிப்பாக இருக்கிறது. கடந்த மார்ச் 2020-ல் இருந்து தான் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 72 ரூபாய்க்கு மேல் அதிகரிக்கத் தொடங்கியது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எம் சி எக்ஸ் தங்கம் விலை

எம் சி எக்ஸ் தங்கம் விலை

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் வர்த்தகமாகும், 10 கிராம் தங்கத்துக்கான ஆகஸ்ட் 2020 காண்டிராக்ட்டின் விலை, கடந்த 14 ஜூலை 2020 அன்று 49,259 ரூபாயில் நிறைவடைந்தது. அதன் பிறகு, இன்று வரை விலை ஏற்றம் காணவில்லை. இன்று 48,912 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இந்த குட்டி விலை இறக்கத்துக்கு வர்த்தகர்கள், லாபத்தை புக் செய்வது ஒரு காரணமாக இருக்கலாம். சர்வதேச தங்கம் விலை + டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரியாததால் தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருக்காது எனலாம்.

சென்னையில் தங்கம் விலை 24 கேரட்

சென்னையில் தங்கம் விலை 24 கேரட்

வந்தாரை வாழ வைக்கும் சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 51,330 ரூபாய்க்கு நேற்று விற்று இருக்கிறார்கள். கிராம் ஒன்றுக்கு 5,133 ரூபாய் மேனிக்கு 8 கிராம் ஒரு பவுன் தங்கம் விலை 41,064 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். 16 ஜூலை 2020 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 51,470 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள். ஆக விட்ட விலை ஏற்றத்தை தங்கம் மெல்ல பிடித்துக் கொண்டு இருக்கிறது போலத் தெரிகிறது.

சென்னையில் 22 கேரட் பவுன் விலை

சென்னையில் 22 கேரட் பவுன் விலை

அதே சிங்காரச் சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 47,040 ரூபாய்க்கு நேற்று விற்று இருக்கிறார்கள். கிராம் ஒன்றுக்கு 4,704 ரூபாய் மேனிக்கு 8 கிராம் ஒரு பவுன் தங்கம் விலை 37,632 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள்.

காட்சிப் பொருள் தான்

காட்சிப் பொருள் தான்

இந்தியாவில் வாழும் 130 கோடி மக்களில் 5 கோடி மக்கள், மாதம் 50,000 ரூபாய்க்கு சம்பாதித்தால் மிகப் பெரிய விஷயம். வருமான வரித்துறை கணக்குப் படி 2019 - 20 நிதி ஆண்டில் 6.77 கோடி பேர் தான் வருமான வரித் தாக்கல் செய்து இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆக இந்த 5 கோடி பேரைத் தவிர, தற்போது விற்கும் விலைக்கு, மற்ற சமானியர்கள் எல்லாம் எப்படி தங்கம் வாங்குவார்கள் என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம். இனி சாமானியர்கள் தங்கத்தை வாங்குனா மாதிரி தான் போ!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price is surging again what may happen in upcoming days

The Gold price is surging again in Chennai and what may happen in upcoming days. We have listed out the reasons and explanation for the price rise.
Story first published: Monday, July 20, 2020, 11:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X