Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கமா இது? தாறுமாறாக எகிறும் விலை, திருமண விசேஷங்களுக்கு நகை எடுக்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இன்றைய காலை நேர நிலவரம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று தடுமாற்றத்தில் இருந்தாலும், உள்ளூர் சந்தையில், சவரன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கோயம்புத்தூர் மற்றும் சென்னை வாசிகள் இன்று ஒரு கிராம் தங்கம் வாங்க எவ்வளவு செலவு செய்ய வேண்டும்? விலை இனி குறையுமா குறையாதா வாருங்கள் பார்க்கலாம்.

சென்னையில் இன்று 24 கேரட் தங்கம் விலை கிராமுக்கு 109 ரூபாய் அதிகரித்து, 15,109 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே 22 கேரட் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து 13,850 ரூபாயாகவும், சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து, 1,10,800 ரூபாயாகவும் காணப்படுகிறது. இதுவே 18 கேரட் தங்கம் விலையானது கிராமுக்கு 90 ரூபாய் அதிகரித்து 11,545 ரூபாயாக காணப்படுகிறது. நேற்று கிராமுக்கு 300 ரூபாய் குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலையானது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது. கோயம்புத்தூரிலும் இதே நிலையில் தான் காணப்படுகிறது.

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலையானது அதிகரித்திருந்தாலும், வெள்ளி விலையானது பெரிய அளவில் மாற்றம் காணவில்லை. இது கிராமுக்கு 255 ரூபாயாகவும், கிலோவுக்கு 2,55,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பு பலமடைந்தால், முதலீட்டாளர்கள் தங்கத்தை விடுத்து டாலரில் முதலீடு செய்வார்கள். அப்போது தங்கம் விலை சற்று குறையலாம். அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தை உயர்த்தினால், டாலர் மதிப்பு வலுவடையும். இது வட்டியில்லா தங்கம் மீதான ஈர்ப்பை குறைத்து, விலை குறைய வழிவகுக்கலாம். மேலும் தற்போது நிலவி வரும் சர்வதேச புவிசார் அரசியல் பதற்றங்கள் தணிந்து அமைதி திரும்பினாலும், தங்கம் விலை கணிசமாக குறையலாம். ஆனால் அதெல்லாம் இப்போதைக்கு நடக்குமா என்பது தான் மிகப்பெரிய கேள்வியே.

போதாக்குறைக்கு இந்தியாவில் உள்ளூர் சந்தையில் என்னதான் விலை அதிகரித்தாலும் தேவை அதிகமாகவே உள்ளது. இது விலையை பெரிய அளவிலான சரிவில் இருந்து தடுக்கலாம். போர் பதட்டங்களுக்கு மத்தியில், பங்குச் சந்தை ஏற்ற இறக்கமாக இருப்பதால், பெரிய முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான புகலிடமாக கருதி தொடர்ந்து வாங்கி வருகின்றனர். ஆக இதுவும் தொடர்ந்து தங்கம் விலை உச்சத்திலேயே இருக்க காரணமாக அமைந்துள்ளது.

தங்கம் விலை ஒரு சிறிய சரிவை சந்தித்தாலும், கட்டாயம் வாங்கியே ஆக வேண்டும் என நினைப்பவர்கள் சிறுகச் சிறுக வாங்குவதே புத்திசாலித்தனமான அணுகுமுறையாக இருக்கும். ஆனால் முதலீட்டு ரீதியாக வாங்குபவர்கள் டிஜிட்டல் தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+