தங்கம் விலையானது கடந்த வாரத்திலேயே உச்சத்தினை எட்டிய நிலையில், இந்த வாரத்தின் தொடக்க வர்த்தக நாளான இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது.
இப்படி தொடர்ந்து ஏற்றம் கண்டு கொண்டு இருக்கிறதே, தங்கம் விலை குறையவே குறையாதா? குறைந்த விலையில் வாங்க வாய்ப்பே கிடைக்காதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சர்வதேச மந்த நிலையில் இருந்து வந்தாலும் வரவிருக்கும் விழாக்கால பருவம் என்பது தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்க வழிவகுக்கலாம். அதோடு இந்தியாவிலும் திருமண விழாக்காலம் என பலவும் இருந்து வரும் நிலையில், இதுவும் தங்கத்தின் தேவையை ஊக்குவித்துள்ளது.
டாலர் மதிப்பால் தங்கம் ஏற்றம்
அமெரிக்காவின் டாலரின் மதிப்பானது கடந்த சில தினங்களாகவே பெரும் அழுத்தத்தில் இருந்த நிலையில், இது தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. டாலரின் மதிப்பு அதிகரித்தால் அது தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாமே என்றாலும், நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் மேற்கொண்டு வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற நிலையில், இது டாலருக்கு ஆதரவாக அமைந்துள்ளது. எனினும் வட்டி அதிகரிப்பானது ஏற்கனவே மந்த நிலையில் இருக்கும் பொருளாதாரத்தினை மேற்கொண்டு அழுத்தலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
சீனாவில் தேவை அதிகரிக்கலாம்
சீனாவில் நிலவி வந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தங்கத்தின் தேவையானது சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது சீனாவில் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம். இது மேற்கொண்டு தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
குறைந்த விலையில் தங்கம்
டாலர் மதிப்பானது இன்று ஐந்து மாத சரிவில் காணப்படும் நிலையில், தங்கத்தினை வாங்க நினைப்பவர்களுக்கு இது விலை குறைவாக இருக்கும். ஆக குறைந்த விலையில் வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டலாம். ஆக இதுவும் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
வட்டி அதிகரிப்பு மெதுவாகலாம்
கடந்த வாரம் வெளியான வேலை வாய்ப்பு தரவானது எதிர்பார்த்ததை விட அதிக ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதையும், இது சம்பளம் அதிகரிப்பதையும் காட்டுகின்றது. இது அமெரிக்க மத்திய வங்கியின் நடவடிக்கையினை மெதுவாக்கலாம். எப்படியிருப்பினும் தங்கம் விலையானது இன்றும் அவுன்ஸூக்கு 1800 டாலர்களுக்கு மேலாக காணப்படுகின்றது. இது தங்கம் விலை மேற்கொண்டு அதிகரிக்க காரணமாக அமையலாம்.
ரூ.3000 அதிகம்
ஆக இவ்வாறு மெதுவாக அதிகரிப்பு என்பது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். வட்டி விகிதம் குறைவாக இருந்தால் அது பத்திர சந்தைகளில் லாபத்தினை குறைக்கலாம். இதனால் தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்க வழிவகுக்கலாம். எப்படியிருப்பினும் கடந்த 1 மாதத்தில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 3000 ரூபாய் அதிகரித்துள்ளது.
சர்வதேச தங்கம் விலை
சர்வதேச கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 11.50 டாலர்கள் அதிகரித்து, 1821.10 டாலராக காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் இன்னும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. மீடியம் டெர்மில் மட்டும் அல்ல, நீண்டகால நோக்கிலும் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச வெள்ளி விலை
தங்கத்தினை போலவே வெள்ளி விலையும் ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. வெள்ளியின் விலையானது தற்போது 1.05% அதிகரித்து,23.497 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வின் உச்சத்தினை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 348 ரூபாய் அதிகரித்து, 54,198 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்னும் மீடியம் டெர்மில் விலை அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது டெக்னிக்கலாகவும் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
வெள்ளி விலையும் கிலோவுக்கு 730 ரூபாய் அதிகரித்து, 67,179 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. டெக்னிக்கலாக மீடியம் டெர்மில் மட்டும் அல்ல, நீண்டகால நோக்கிலும் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் வணிகம் செய்வது நல்லது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்து காணப்படும் நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலையானது சென்னையில் இன்று கிராமுக்கு, 29 ரூபாய் அதிகரித்து, 5045 ரூபாயாகவும், சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து, 40,360 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 32 ரூபாய் அதிகரித்து, 5504 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது 10 கிராமுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 55,040 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது கிராமுக்கு 0.90 பைசா அதிகரித்து, 72.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 900 ரூபாய் அதிகரித்து, 72,500 ருபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
More From GoodReturns

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. எல்லாம் கச்சா எண்ணெய் விலையில் நடந்த டிவிஸ்ட் தான் காரணம்..!



Click it and Unblock the Notifications