இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை 48,000 ரூபாயைத் தாண்டி ஒரு வார உச்சத்தைத் தாண்டியுள்ளது. தங்கம் விலையில் ஏற்பட்டு உள்ள இந்தத் திடீர் உயர்வுக்கு அட்சய திருதியை காரணமாக இந்தியாவில் உருவான அதிகப்படியான டிமாண்ட் முக்கியக் காரணமாக இருந்தாலும், அமெரிக்கப் பத்திர சந்தையில் ஏற்பட்டு உள்ள லாப அளவின் சரிவும், டாலர் மதிப்பும் தங்கம் விலை உயர்வு வலிமை சேர்த்துள்ளது.
தங்கம் விலையில் ஏற்பட்டு உள்ள இந்த உயர்வு புதிய முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவிலான வாய்ப்பாக இல்லாவிட்டாலும் ஏற்கனவே முதலீடு செய்துள்ளவர்களுக்கு அதிக லாபத்தை அளிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தை
இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை மாலை வர்த்தகத்தில், குறிப்பாக அமெரிக்கச் சந்தை வர்த்தகம் துவங்கியது முதல் சிறப்பான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இதேபோல் வெளியின் விலையிலும் தொடர்ந்து உயர்ந்து வருவதற்கு மிக முக்கியக் காரணமாக விளங்குவது அமெரிக்கப் பத்திர சந்தையில் ஏற்பட்டு லாப அளவீடுகள் குறைவு தான்.
MCX சந்தை தங்கம் விலை
இந்நிலையில் 8.50 மணிக்கு MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 1.29 சதவீதம் வளர்ச்சி அடைந்து 48,291 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. சுமார் 1 வாரத்திற்குப் பின் தங்கம் விலை மீண்டும் 48,000 ரூபாயை கடந்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
MCX சந்தை வெள்ளி விலை
இதேபோல் ஜூன் 5ஆம் தேதி முடிய உள்ள ஆர்டரில் MCX சந்தையின் ஒரு கிலோ வெள்ளியின் விலை 2.25 சதவீதம் வரையில் அதிகரித்து, 72,687 ரூபாயை கடந்துள்ளது. இந்திய சந்தையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டு உள்ள வளர்ச்சி வரும் நாட்களில் பெரிய அளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தை விலை
இந்திய சந்தையைப் போலவே சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை மாலை 6.30 மணிக்கு 1,844.45 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் இரண்டு மணிநேரத்தில் 1,864.15 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இது முழுக்க முழுக்க அமெரிக்கப் பத்திர சந்தையில் ஏற்பட்டு உள்ள மாற்றங்களின் வாயிலாகவே நிகழ்ந்துள்ளது.
புதிய உச்சம்
சர்வதேச சந்தையில் தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1800 டாலர் அளவீட்டில் வர்த்தகம் செய்யப்படும் நிலையில், அடுத்த சில மாதத்தில் 2,050 முதல் 2,200 டாலர் வரையில் உயரும் என முதலீட்டுச் சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதேபோல் இந்தியாவில் அடுத்த சில மாதத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் 50,000 ரூபாயையும், 12 முதல் 15 மாதத்தில் 56,500 ரூபாயைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கச் சந்தை
தங்கம் விலை உயர்வதற்கு அமெரிக்கச் சந்தை மிக முக்கியக் காரணமாக உள்ளது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் 2013ஆம் ஆண்டுக்குப் பின் அதிகளவில் அதிகரித்துள்ள பணவீக்கம் தங்க முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.
அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு.. இந்தியாவிற்குப் பாதிப்பு..!
More From GoodReturns

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!



Click it and Unblock the Notifications