சற்றே சரிந்த தங்கம் விலை.. இப்படியே தொடருமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில வாரங்களாகவே அவ்வப்போது சரிந்திருந்தாலும், மொத்தமாக பார்க்கும்போது ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

இனி இது குறையவே குறையாதா? இன்னும் எவ்வளவு தான் இப்படியே அதிகரிக்கும். இனி கனவில் மட்டும் தான் வாங்க முடியுமா? நிபுணர்களின் கணிப்பு என்ன?

தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? வெள்ளி விலை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் தங்கம் விலை என்ன? வெள்ளி விலை என்ன? ஆபரண தங்கத்தின் விலை என்ன? சாதக பாதகமான காரணிகள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நேற்று காலை அமர்வில் பலமான ஏற்றம் கண்ட பிறகு, மாலை அமர்வில் மீண்டும் சற்று சரிவினைக் கண்டது. இதற்கிடையில் இன்று சற்று சரிவில் தொடங்கியுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 2.00 டாலர்கள் குறைந்து, 1899.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இன்று முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தினசரி கேண்டில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையும் இன்று சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சற்று சரிவில் தான் காணப்படுகிறது. இது தற்போது அவுன்ஸூக்கு 0.32% குறைந்து, 27.782 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலை பெரியளவில் மாற்றமில்லாவிட்டாலும், சற்று அதிகரித்து தான் காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 29 ரூபாய் அதிகரித்து, 48,813 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாக காணப்படுகிறது. நடப்பு காண்டிராக்ட் ஜூன் 4 அன்று எக்ஸ்பெய்ரி ஆகவிருப்பதால், நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் அடுத்த காண்டிராக்டில் வாங்கலாம்.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

வெள்ளி விலையானது தற்போது சற்று சரிவில் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 41 ரூபாய் குறைந்து, 71,370 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தினை பொறுத்த வரையில், தற்போது கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 4,625 ரூபாயாகவும், சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 37,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆபரணத் தங்கம் விலை தொடர்ச்சியாக 5 நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 5,050 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40,400 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 50,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதுவும் தொடர்ச்சியாக 5 நாட்களாகவே ஏற்றம் கண்ட நிலையில், இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 1.30 ரூபாய் குறைந்து, 76 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு, 1,300 ரூபாய் குறைந்து, 76,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெள்ளியின் விலையானது கடந்த சில அமர்வுகளாக சற்று தடுமாற்றத்தில் இருந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

முக்கிய காரணிகள்

முக்கிய காரணிகள்

பணவீக்கம் பற்றிய கவலைகள், அமெரிக்காவின் பத்திர லாபம், அமெரிக்க டாலரின் மதிப்பு, கொரோனா வைரஸ் அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகள் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது. இதே போல இந்திய சந்தையிலும் சற்றே அதிகரித்தும் காணப்படுகிறது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

ரூபாயின் மதிப்பு வலுவடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது சற்றே தடுமாற்றத்தில் காணப்படுகிறது. அதோடு அமெரிக்காவின் பணவீக்கம், டியூரபிள் கூட்ஸ் உள்ளிட்ட டேட்டாக்கள் தங்கத்தில் இனி வரும் நாட்களில் மாற்றத்தினை ஏற்படுத்தலாம் என்கிறார் பிரித்வி பின்மார்ட் கமாடிட்டி ரிசர்ச் நிறுவனத்தின் தலைவர் மனோஜ் குமார் ஜெயின்.

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கத்தின் முக்கிய லெவல்

தங்கத்தின் சப்போர்ட் லெவல் 1892 - 1878 டாலர்களாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 1914 - 1922 டாலர்களாகும். இதே இந்திய சந்தையில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் லெவல் 48,600 - 48,380 ரூபாயாகும். இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் 49,050 - 49,220 ரூபாயாகும். இதே வெள்ளியின் சப்போர்ட் லெவல் 70,700 - 70,200 ரூபாயாகும். ரெசிஸ்டன்ஸ் லெவல் 72,200 - 72,800 ரூபாயாகும்.

இன்று வாங்கி வைக்கலாமா?

இன்று வாங்கி வைக்கலாமா?

நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். எனினும் இந்திய சந்தையில் கரண்ட் காண்டிராக்ட் ஜூன் 4 அன்று எக்ஸ்பெய்ரி என்பதால் சற்று விலை குறையவும் வாய்ப்புள்ளது. ஆக விலை குறையும்போது வாங்கினால் இன்னும் லாபம் சற்றும் அதிகரிக்கலாம். எனினும் மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price little down in comex market, struggling in MCX

Gold price latest updates.. Gold price little down in comex market, struggling in MCX
Story first published: Thursday, May 27, 2021, 11:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X