தங்க விலை அமெரிக்க சந்தையின் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பெரும் திருப்பத்தை சந்தித்ததுள்ளது. புதன், வியாழன் ஆகிய இரண்டு நாட்களில் பதிவான சரிவிலிருந்து மீண்டு, கிட்டத்தட்ட 2% உயர்ந்து மீண்டும் 5,000 டாலர் அளவை தாண்டியுள்ளது.
இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கம் விலை சனிக்கிழமை ரீடைல் சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் தங்கம் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு 175 அதிகரித்து 15,884 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.14,560-ஆக வர்த்தகமாகிறது. 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு 50 உயர்ந்து 12,450 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 2,80,000 ரூபாய்க்கும், பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 920 ரூபாய் உயர்ந்து 60,060 ரூபாயாக உள்ளது. இன்றைய விலை உயர்வுக்கு முக்கியமான காரணம் அமெரிக்காவின் ஜனவரி மாத பணவீக்க டேட்டா.
அமெரிக்காவில் ஜனவரி மாத பணவீக்கம் (CPI) எதிர்பார்த்ததை விட குறைந்து 2.4% ஆக பதிவானது. இது ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை விரைவில் குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்தது. இதனால் தங்கத்தில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர்.
அமெரிக்க தொழிலாளர் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, அந்நாட்டின் மொத்த CPI 2.4% ஆக குறைந்தாலும், கோர் CPI (உணவு மற்றும் எரிபொருள் விலைகளை தவிர்த்தது) 2.5% ஆகவே நிலைத்துள்ளது. இதனால் ஃபெடரல் ரிசர்வ் அதிகாரிகள் இன்னும் பணவீக்கம் இன்னும் குறைய வேண்டும் ென எதிர்பார்த்து வருகின்றனர், இதனால் வட்டி விகிதம் உடனடியாக குறைவதற்கான வாய்ப்புகள் குறைவு. இருப்பினும், பணவீக்கம் குறைந்துள்ளது தங்கத்திற்கு பெரும் நன்மையாக அமைந்தது.
தங்க விலை எப்படி நகர்ந்தது?
நேற்றைய அமெரிக்க சந்தை வர்த்தகத்தில் தங்கம் முதலில் 5,000 டாலர் அருகே சென்றது, பின்னர் 4,950 டாலர் வரை சரிந்தது. ஆனால் பணவீக்கம் குறைந்த நம்பிக்கை காரணமாக முதலீட்டாளர்களின் கவனம் தங்கம் மீத திரும்பியதால் அதிகளவிலான முதலீடுகள் குவிந்தது. இதனால் தங்கம் அகிகமாக முதலீடு பெற்று விலை உயர்ந்தது.
அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகளும் சரி பணவீக்கமும் சரி வட்டி குறைப்பிற்கு மிகவும் ஆதாரவமாக செயல்பட்டு வருகிறது. இது பொருளாதாரம் வலுவாக உள்ளதை காட்டுகிறது. ஆயினும் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் உடனடியாக வட்டி குறைப்புக்கு செல்ல வாய்ப்பு குறைவு என்று தெரிகிறது. ஜெரோம் பவல் தலைமையிலான அதிகாரிகள் மே மாதம் வரை காத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கவர்னர் கெவின் வார்ஷ் வந்த பின்பு தான் வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் மக்களுக்கு இன்றைய விலை உயர்வு மூலம் தங்கம் நகை வாங்க திட்டமிடுவோருக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications