Gold price update: தங்கம் விலையானது வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சற்றே ஏற்றத்தில் சர்வதேச சந்தையில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து டாலரின் மதிப்பானது அழுத்தத்தில் காணப்படும் நிலையில், இது தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. மேலும் நாளையும் நாளை மறுநாளும் பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டமானது நடைபெறவுள்ள நிலையில் இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக நீண்டகால நோக்கில் தங்கம் வாங்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்கலாம்.
முதலீட்டாளர்களின் கவனம்
அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இது தங்கம் விலையில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக அதுவரையில் தங்கத்தில் அதிக ஏற்ற இறக்கம் என்பது இருக்கலாம். இதன் காரணமாக மீடியம் டெர்ம் முதலீட்டாளார்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.
டெக்னிக்கலாக எப்படியிருக்கு?
தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரிக்கலாம் எனும் விதமாக டெக்னிக்கலாக, இது மேற்கொண்டு அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே பண்டமெண்டலாக வட்டி விகிதம் அதிக்ரிப்பு, ஐரோப்பிய மத்திய வங்கியின் கூட்டம், வேலையின்மை விகிதம், ரெசசன் அச்சம், பிஎம்ஐ என பல காரணிகளும் தங்கத்தினை நீண்டகால நோக்கில் அதிகரிக்க காரணமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவும் இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
பட்ஜெட் 2023ல் எதிர்பார்ப்புகள்
வரவிருக்கும் பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரியானது குறைக்கப்பட வேண்டும் என்ற பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இது தற்போது 15% ஆக இருக்கும் நிலையில், இது 7.5 - 10% ஆக குறைக்கப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இது வர்த்தக பற்றாக்குறையை குறைக்கவும், ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் அதிகரிக்கப்பட்டது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 18.50 டாலர்கள் அதிகரித்து, 1947.85 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை அவுன்ஸூக்கு காலையில் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது 0.69% அதிகரித்து, 23.797 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இதே நீண்ட கால நோக்கில் வாங்கலாம்.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 140 ரூபாய் அதிகரித்து, 57,005 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகிறது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் எதிரொலியாக சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 356 ரூபாய் அதிகரித்து, 68,685 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரணம் தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையானது இன்று மாற்றமின்றி காணப்படுகின்றது. இது கிராமுக்கு 5350 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 42,800 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 5837 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 58,37 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
தங்கம் விலையானது மாற்றமில்லாவிட்டாலும், ஆபரண வெள்ளியின் விலையானது இன்று சற்று அதிகரித்துள்ளது. இது கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, 74.70 ரூபாயாக விற்பனை செய்யபட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து, 74,700 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications