Gold price updates: தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் வரும் வாரத்தில் அவுன்ஸுக்கு 1800 டாலர்களை உடைக்கலாம் என்கிறது ஒரு கணிப்பு. ஆக இந்திய சந்தையிலும் சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் ரெசசன் அச்சம் என்பது சற்றே குறையத் தொடங்கியுள்ளது. அதோடு அமெரிக்காவின் உயர் பத்திர சந்தை, 3 மாத உச்சத்தில் உள்ள டாலரின் மதிப்பு என பலவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
முந்தைய நிலவரம் என்ன?
கடந்த மாதம் தங்கம் விலையாந்து 8 மாத உச்சமான 1960 டாலர்களை எட்டியது. எனினும் தற்போது 7% சரிவில் காணப்படுகின்றது. இதே இந்திய ப்யூச்சர் சந்தையிலும் 10 கிராமுக்கு 55,000 ரூபாயினை உடைத்தும் காட்டியுள்ளது. எனினும் இது 58,826 ரூபாய் என்ற உச்சத்தினையும் எட்டியது. கடந்த வார இறுதியில் பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும் சற்றே ஏற்றத்திலும் காணப்பட்டது.
தங்கம் விலை குறையலாம்
எப்படியிருப்பினும் சமீபத்தில் அமெரிக்காவின் பெடரல் வங்கியானது கொடுத்த அப்டேட்டில், வட்டி அதிகரிப்பானது கடந்த முறையை விட சற்றே கூடுதலாக இருக்கலாம் என எதிர்பார்ப்பப்பதாக மத்திய வங்கியின் தலைவர் தெரிவித்திருந்தது நினைவுகூறத்தக்கது.
ஆக இந்த கருத்தின் படி வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதம் என்பது கடந்த முறையை விட இந்த முறை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கம் விலையை மேற்கொண்டு அழுத்தம் கொடுக்கலாம். இது தங்கம் விலை குறைய காரணமாக அமையலாம் என எதிர்பார்கப்படுகிறது.
தங்கம் விலையில் அழுத்தம் இருக்கலாம்
தற்போதைய பொருளாதார தரவுகள் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வருவதையே சுட்டி காட்டி வரும் நிலையில், மத்திய வங்கியானது பணவீக்கத்தினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய வங்கியின் இலக்கினை பணவீக்கம் எட்டும் வரையில் இந்த நடவடிக்கை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தம் கொடுக்கலாம்.
விலையேற்றம் தடுக்கப்படலாம்
கடந்த ஆண்டே பெடரல் ரிசர்வ் வங்கியானது 7 முறை வட்டி அதிகரிப்பினை செய்தது. இது 1980-க்கு பிறகு இது ஒரு வேகமான நடவடிக்கையாகும். இது அந்த காலகட்டத்துடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் மத்திய வங்கியாளர்கள் ஒரு புதிய கொள்கையை பின்பற்றுகின்றனர். ஆக வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்திலும் வட்டி அதிகரிப்பு என்பது இருக்கலாம். இது தங்கத்தினை அதிகளவில் ஏற்றம் காணுவதை தடுக்கலாம். இது மற்ற முதலீடுகளில் முதலீடுகளை அதிகரிக்க தூண்டலாம்.
டாலரின் மதிப்பு
எல்லாவற்றுக்கும் மேலாக தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான டாலரின் மதிப்பும், பத்திர சந்தையும் தங்கம் விலையில் அழுத்தத்தினை கொடுக்கலாம். இது கடந்த செப்டம்பர் மாதத்திலேயே இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டது.
அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்றே அழுத்தம் காணப்படும் நிலையில், கடந்த வார இறுதியில் தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பானது 6% சரிவினைக் கண்டது. ஆனால் இது தற்போது மீண்டு எழத் தொடங்கியுள்ளது. இது வேகம் பெறத் தொடங்கியுள்ளது. ஆக இந்த வேகமானது தங்கத்திலும் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.
அரசியல் பதற்றங்கள்
சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இது சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையானது இன்று வரையில் நீடித்துக் கொண்டுள்ளது. ஆக இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை என்பது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
எனினும் 1 வருடத்திற்கு மேலாக நீடித்து வரும் இந்த பிரச்சனையால் ஏற்கனவே தங்கம் விலையில் கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. பல பொருளாதாரங்களிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்போது இவை எல்லாவற்றையும் தாண்டி பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டுள்ளது.
தேவை ஆதரவளிக்கலாம்
எப்படியிருப்பினும் அதிகரிக்கபோகும் வட்டி விகிதம் என்பது தங்கத்தில் அழுத்தத்தினை கொடுக்கலாம். இது பணவீக்கம் குறையும் வரையில் தொடரலாம் என்ற நிலையில், இது மேற்கொண்டு தங்கத்திற்கு அழுத்தத்தினையே கொடுக்கலாம். எனினும் இந்தியா சீனா போன்ற நாடுகளில் பிசிகல் தங்கத்திற்கான தேவையானது மிகப்பெரிய அளவில் மீண்டு வந்து கொண்டுள்ளது. இது அதிக விலை சரிவினைக் தடுக்கலாம்.
டெக்னிக்கலாக தங்கம்
டெக்னிக்கலாக பார்க்கும்போது தங்கத்தின் முக்கிய சப்போர்ட் 1800 டாலர்களாக உள்ளது. இதற்கு மேலாகவே தொடர்ந்து தங்கம் விலை காணப்பட்டால் ஏற்றத்தினை காணலாம். எனினும் சப்போர்ட் விலையை அவ்வளவு உடைக்குமா? என்பதும் பார்க்கப்படுகிறது.
எனினும் ஏற்றம் கண்டாலும் முக்கிய ரெசிஸ்டன்ட் லெவலாக 1970 டாலர்களை உடைத்தால் மட்டுமே அது பெரியளவில் ஏற்றம் காணலாம். இதே 1800 டாலர்களை உடைத்தால் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 1740 டாலராகவும், இதனையும் உடைத்தால் அது 1620 என்ற லெவலையும் எட்டலாம் என ஜியோஜித் நிபுணர் ET அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதே இந்திய சந்தையினை பொறுத்தவரையில் தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விலைய்யாக 10 கிராமுக்கு 54,000 ரூபாயினையும், இதனையும் உடைத்தால் மேற்கொண்டு சரியலாம். இதே முக்கிய ரெசிஸ்டன்ட் லெவல் ஆக 57,000 ரூபாயினையும் கணித்துள்ளனர். ஆக இதுவும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications