தங்கம் வாங்க பிளான் இருக்கா.. கொஞ்சம் பொறுங்க.. நிபுணர்கள் சொல்லும் காரணத்தை கேளுங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் மீதான ஆர்வம் என்பது யாருக்குத் தான் இருக்காது? அது குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரையில் இருந்து வருகின்றது. தங்கம் என்பது வெற்று ஆபரணமாக மட்டும் அல்லாமல், அன்பின் அடையாளமாகவும், அஸ்தஸ்தினை தீர்மானிக்கும் ஒரு முக்கிய அம்சமாகவும் இருக்கிறது.

 

தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் நிலையற்ற காரணிகளுக்கு மத்தியில், முதலீட்டாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பு புகலிடமாகவும் பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. நடுத்தர மக்களுக்கு நல்ல வாய்ப்பு! தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. நடுத்தர மக்களுக்கு நல்ல வாய்ப்பு!

தொடருமா?

தொடருமா?

இப்படிப்பட்ட தங்கம் விலையானது கடந்த வாரத்தில் இருந்து சற்று மீண்டும் சரியத் தொடங்கியுள்ள நிலையில், இந்த போக்கானது இனியும் தொடருமா? தற்போதைய நிலையில் வாங்கலாமா? வேண்டாமா? அடுத்து என்ன செய்யலாம். இனி தங்கம் விலை எப்படியிருக்கும், முக்கிய காரணிகள் என்னென்ன? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

என்ன நடக்க போகிறது?

என்ன நடக்க போகிறது?

கடந்த சில அமர்வுகளாகவே சர்வதேச சந்தையில் சரிந்து வந்த தங்கம் விலையானது இன்று மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது டாலரின் மதிப்பு சற்றே ஏற்றம் காணத் தொடங்கியுள்ள நிலையில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இதற்கிடையில் முதலீட்டாளர்களின் கவனம் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதாக, கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது.

விலை குறையுமா?
 

விலை குறையுமா?

இது குறித்து நிபுணர்கள் நவம்பர் 23 அன்று ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில், முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் அமெரிக்க டாலரின் மதிப்பு மேற்கோண்டு இன்று வலுவடைந்துள்ளது. இதற்கிடையில் மேற்கொண்டு அமெரிக்கா வட்டி விகிதம் மேற்கொண்டு சற்று அதிகரிக்கப்படலாம் என்றும், இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

தங்கத்தின் முக்கிய லெவல்களாக, ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 52,600 ரூபாயாகவும், முக்கிய சப்போர்ட் லெவல் 51,700 ரூபாயாகவும் கணித்துள்ளனர். இதே வெள்ளியின் சப்போர்ட் விலை 59,500 ரூபாயாகவும், ரெசிஸ்டன்ஸ் விலை 59,500 ரூபாயாகவும் கணித்துள்ளனர்.

கவனமாக இருக்கணும்?

கவனமாக இருக்கணும்?

வரவிருக்கும் நாட்களில் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தினை அடுத்து இப்படி இருக்கலாம் என கூறுகின்றனர். தங்கம் விலையிலும் ஏற்றம் இறக்கம் என்பது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் வரவிருக்கும் நாட்களில் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

விலை உயர்ந்த தங்கம்

விலை உயர்ந்த தங்கம்


தொடர்ந்து அதிகரித்து வரும் டாலர் மதிப்பானது, மற்ற கரன்சிதாரர்களுக்கு தங்கத்தினை விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. சீனாவிலும் கொரோனா பெருந்தொற்றானது பரவி வரும் நிலையில், இதுவும் தங்கத்தில் முதலீடுகளை குறைத்துள்ளது. எனினும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி என்பது சவாலாக உள்ள நிலையில், இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன செய்யலாம்?

என்ன செய்யலாம்?

எப்படியிருப்பினும் வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதம் முந்தைய அதிகரிப்புகளை போல் பெரியளவில் இருக்காது என்றாலும், 50 அடிப்படை புள்ளிகளாகவது இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது,. இது பணவீக்கம் என்பது குறையத் தொடங்கியிருந்தாலும், இன்னும் அமெரிக்க அரசின் இலக்கினை எட்டவில்லை என்பதால் நிச்சயம் குறைந்தபட்ச அதிகரிப்பேனும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தங்கம் விலையானது குறையும்போது நீண்டகால நோக்கில் வாங்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price may expected to under pressure

Gold prices have started to slide back a bit since last week, will this trend continue? Can I buy it now?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X