Gold:தங்கம் விலையானது தொடர்ந்து வரலாற்று உச்சத்தினை எட்டத் தொடங்கியுள்ளது. இது போகிற போக்கினை பார்த்தால் இனி குறையவே குறையாதா? இனி என்னவாகுமோ என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 2000 டாலர்களுக்கு அருகிலேயே வர்த்தகமாகி வருகின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலையானது மீண்டும் 2000 டாலர்களை கடக்கும்போது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்திற்கு ஆதரவு
ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கூட்டத்தின் மத்தியில் தங்கம் விலையானது தொடர்ந்து ஆசிய சந்தைகளில் உச்சம் எட்டி வருகின்றது. இது மேற்கொண்டு ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து அமெரிக்காவின் பொருளாதாரம் என்பது நெருக்கடியான சூழலில் இருந்து வருகின்றது. குறிப்பாக அமெரிக்க வங்கிகள் திவால் என்பது பொருளாதாரத்தினை இன்னும் மோசமான பாதைக்கு கொண்டு செல்லலாம் என அஞ்சப்படுகின்றது. ஐரோப்பாவிலும் இதே நிலை எனும் போது அது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது..
எதிர்பார்ப்பு
தங்கம் விலையானது விரைவில் 2000 டாலர்களை எட்டலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இது புதன்கிழமையன்று வெளியாகவிருக்கும் அமெரிக்க மத்திய வங்கியின் அறிவிப்பின் மத்தியில் ஏற்றம் காணலாம்.
கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலையானது அவுன்ஸுக்கு கிட்டத்தட்ட 6% ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் நாளை அமெரிக்க மத்திய வங்கியானது 50 அடிப்படை புள்ளிகளை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பணவீக்க பிரச்சனை
இன்று வரையில் பணவீக்கமும் கட்டுக்குள் வராத நிலையில், மத்திய வங்கியின் இலக்கினை எட்டும் வரையில் இந்த நடவடிக்கை தொடரும் என அமெரிக்க மத்திய வங்கியாளர்கள் தெரிவித்துள்ளார். ஆக இதுவும் நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாகவே அமையலாம். தொடர்ந்து வடி விகிதம் அதிகரித்தாலும், பொருளாதாரம் என்பது ஏற்கனவே மந்த நிலையில் உள்ளபோது, இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக இதுவும் தங்கத்திற்கு ஆதரவாகவே அமையலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 2.40 டாலர்கள் அதிகரித்து, 1985.05 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் கடந்த அமர்விலேயே 2000 டாலர்களை உடைத்து., அதிகபட்சமாக 2014.90 டாலர்களை எட்டியது குறிப்பிடத்தக்கது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலைபோல வெள்ளி விலை அவுன்ஸூக்கு, சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது 0.06% குறைந்து, 22.633 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 112 ரூபாய் அதிகரித்து, 59,618 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 54 ரூபாய் அதிகரித்து, 66,892 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகிறது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 5580 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 44,640 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்து, 6087 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 220 ரூபாய் அதிகரித்து, 60,870 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, 74.70 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 74,700 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications