அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் 20 ஆண்டுகள் உயர்வில் இருக்கும் காரணத்தால், தங்கம் விலை தொடர்ந்து நான்காவது வாரமாகச் சரிந்து வருகிறது.
இதற்கிடையில் இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (எம்சிஎக்ஸ்), வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ₹49,909 ஆக முடிந்தது, கடந்த ஒகு வாரத்தில் சுமார் 2.86 சதவீத நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.
சர்வதேச சந்தையின் ஸ்பாட் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 1810 டாலராக ஆக முடிவடைந்தது, முக்கிய ஆதரவு விலையான $1820 நிலைக்குக் கீழ் சரிந்துள்ளது.
தங்கம்
கமாடிட்டி மார்க்கெட் நிபுணர்களின் கூற்றுப்படி, மத்திய வங்கிகளின் பண நெருக்கடி மற்றும் நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவை உலகப் பொருளாதார வளர்ச்சியை முடக்கும் என்ற கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் தங்கம் மீதான முதலீட்டை வெளியேற்றி அமெரிக்க டாலர் மற்றும் அமெரிக்கப் பத்திரங்களில் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர்.
டாலர்
அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் 20 ஆண்டுகள் உயர்வில் இருக்கும் வேளையில் இந்த வர்த்தகப் போக்கு அடுத்த சில வாரங்களுக்குத் தொடரும் என்றும் சந்தை நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தக் காலகட்டத்தில் தங்கம் விலை மேலும் சரிவும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
தங்கம் விலை கணிப்பு
குறுகிய காலத்தில், சர்வதேச சந்தையின் ஸ்பாட் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1780 டாலராகவும், MCX தங்கத்தின் விலை 10 கிராம் அளவுகளுக்கு 48,800 ரூபாய் ஆகவும் சரிய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
48,800 ரூபாய்
இதனால் தங்கம் வாங்க விரும்புவோரும், தங்க முதலீட்டாளர்களும் சிறிது காலம் காத்திருந்து, ஸ்பாட் சந்தையில் முக்கிய ஆதரவு நிலைகளான 1780 டாலர் மற்றும் MCX இல் 48,800 ரூபாய் மதிப்பில் தங்கத்தை வாங்கும் வாய்ப்பை பெறலாம் எனச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
நாணய கொள்கை கூட்டம்
இதற்கு முக்கியக் காரணம் அடுத்து இரு நாணய கொள்கை கூட்டத்தில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் பென்ச்மார்க் வட்டியை உயர்த்துவதில் உறுதியாக உள்ளது. இதனால் தங்கம் விலை குறைய அதிகப்படியான வாய்ப்புகளும் உள்ளது.
அமெரிக்காவின் பணவீக்கம்
அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடு ஏப்ரல் மாதம் 0.3% உயர்ந்து 8.3% ஆக உள்ளது. மார்ச் மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) 1.2% உயர்ந்திருந்த நிலையில் ஏப்ரல் மாதம் வெறும் 0.3% மட்டுமே உயர்ந்துள்ளது மிகப்பெரிய வளர்ச்சி அளவீடாகப் பார்க்கப்படுகிறது.
எரிபொருள் விலை
இதே வேளையில் நுகர்வோர் விலை பணவீக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவு தற்காலிகமானது தான் என்று அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மே மாதத்தின் 2வது வார தொடக்கத்தில் ஒரு கேலன் எரிபொருள் விலை 4.161 டாலராக ஆக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் இதன் விலை 4 டாலருக்குக் கீழ் இருந்து குறிப்பிடத்தக்கது.
காத்திருப்பது சிறந்தது
இதனால் மே மாதம் அமெரிக்காவின் பணவீக்கம் அதிகரிக்கும், பெட்ரல் ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தும், உலகளவில் பங்குச்சந்தை, பத்திரம், தங்கம் மீதான முதலீடுகள் வெளியேறி அமெரிக்கப் பத்திர சந்தையில் குவியும். இதனால் தங்கம் விலை தொடர்ந்து சரியும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications