தொடர்ச்சியாக குறையும் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரம் தான்..!

தங்கம் விலையானது இன்றோடு நான்காவது நாளாக தொடர்ச்சியாக சர்வதேச சந்தையில் சரிவினைக் கண்டு வருகின்றது. கடந்த வாரத்தில் பலமான ஏற்றத்தினை கண்ட நிலையில், இந்த வாரத்தில் சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாக சரிவினைக் கண்டு வருகின்றது.

எனினும் இந்திய சந்தையில் தொடர்ச்சியாக ஏற்றத்தினையே கண்டு வருகின்றது. எனினும் இன்று இந்திய பங்கு சந்தைகள் மற்றும் எம்சிஎக்ஸ் சந்தைகள் விடுமுறை என்பதால், இந்திய சந்தையில் இதன் தாக்கம் இருக்காது. எனினும் இன்று மாலை அமர்வில் சந்தை தொடங்கும் என்பதால், அப்போது சந்தையில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் முக்கிய சப்போர்ட் 1670 டாலராகவும், உடனடி சப்போர்ட் லெவல் 1700 டாலராகவும் உள்ளது. எனினும் தங்கம் விலையானது ஏற்றம் காணலாம் என்ற எண்ணமே நிலவி வருகின்றது. சரி இதற்கு என்ன காரணம்? வாருங்கள் பார்க்கலாம்.

இன்று என்ன பார்க்க போகிறோம்?

இன்று என்ன பார்க்க போகிறோம்?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரம் என்ன? வெள்ளி விலை நிலவரம் என்ன? வெள்ளி விலை என்ன? தங்கம் ஆபரண விலை நிலவரம் என்ன? ஆபரண வெள்ளி விலை எவ்வளவு? இன்று விலை இனி எப்படி இருக்கும்? நீண்டகால நோக்கில் எப்படி இருக்கும்? முக்கிய காரணிகள் என்னென்ன? இது வாங்க சரியான இடமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

காமெக்ஸ் தங்கம் விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 5.55 டாலர் குறைந்து, 1742.15 டாலர்களாக காணப்படுகிறது. எனினும் தங்கம் விலையானது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. அதோடு நேற்றைய அதிகபட்ச விலையையும் உடைத்து காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்பட்டாலும், நீண்ட கால நோக்கில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

காமெக்ஸ் வெள்ளி விலை நிலவரம்

தங்கம் விலையினை போலவே வெள்ளி விலையும் சற்று சரிவில் தான் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸ் வெள்ளியின் விலையானது 0.25% குறைந்து, 25.365 டாலர்களாக காணப்படுகிறது. வெள்ளியின் விலை முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் காணப்படுகிறது. எனினும் புல்லிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. ஆக வெள்ளி விலையும் தற்போது சற்று குறைந்தாலும் மீண்டும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது பெரியளவில் மாற்றம் கணவில்லை. இன்று கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 4,374 ரூபாயாகவும், சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து, 34,992 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில நாட்களாகவே பெரிய அளவில் தங்கம் விலையில் மாற்றமில்லை.

24 கேரட் தங்கம் விலை

24 கேரட் தங்கம் விலை

சென்னையில் இன்று 24 கேரட் தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. இது கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 4769 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து, 38,152 ரூபாயாகவும் காணப்படுகிறது. தூய தங்கத்தின் விலையும் கடந்த சில அமர்வுகளாக பெரியளவில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆபரண வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் நேற்று ஆபரண வெள்ளியின் விலையானது பலமான ஏற்றத்தினைக் கண்ட நிலையில், இன்று கிராமுக்கு 71.90 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 71,900 ரூபாயாகவும் மாற்றமில்லாமல் காணப்படுகிறது. வெள்ளியின் விலையானது கடந்த சில தினங்கள் பெரியளவில் ஏற்ற இறக்கத்தினை கண்ட நிலையில், இன்று மாற்றமில்லாமல் காணப்படுகிறது.

தங்கம் விலை அதிகரிக்கலாம்

தங்கம் விலை அதிகரிக்கலாம்

அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தினால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பங்கு சந்தைகளில் உள்ள முதலீடுகளை வெளியே எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக பங்கு சந்தையானது பலமான சரிவினைக் கண்டு வருகின்றது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். இதனால் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

நிபுணர்களின் கணிப்பு

நிபுணர்களின் கணிப்பு

எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் 48,000 ரூபாயினையும், அடுத்த ஆறு மாதத்தில் மீண்டும் 50,500 ரூபாய் வரை கூட உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. திருமண பருவமும் நெருங்கி கொண்டுள்ளது. இதனால் பிசிகல் தங்கத்தின் தேவையும் அதிகரித்து வருகின்றது. இதனால் தங்கம் விலையானது அதிகரிக்கும். இது மீடியம் டெர்மில் 10 கிராமுக்கு 48,000 ரூபாயினை தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு

பாதுகாப்பு புகலிடத்தில் முதலீடு

அதோடு அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் மத்தியில் அமெரிக்க பத்திர லாபம் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பும் சரிந்து வருகின்றது. இதனால் பங்கு சந்தையும் அழுத்தத்தில் காணப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு புகலிடத்தினை நோக்கி நகர தொடங்கியுள்ளனர். இந்த போக்கானது அடுத்த 15 நாட்களுக்கு தொடரலாம் எனவும், இதனால் தங்கம் விலையானது அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கத்தினை பொறுத்த வரையில் ஷார்ட் டெர்மிலும் சற்று ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு நீண்ட கால நோக்கிலும் வாங்கி வைக்கலாம். அதிலும் வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது, 10 கிராம் தங்கம் விலையானது 9000 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது.ஆக உண்மையில் இது வாங்க நல்ல இடமாகவே பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+