இன்று தங்கம் விலை நிலவரம் என்ன.. கூட இப்படியும் ஒரு செய்தி உண்டு..!

பொதுவாக தங்கம் என்பது ஒரு பாதுக்காப்பான கவர்ச்சிகரமான முதலீடாக கருதப்படுவதால் தானே என்னவோ, கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.

அவ்வப்போது தங்கம் விலையானது சற்று குறைந்தாலும், தொடர்ந்து ஏற்றம் கண்டு கொண்டே தான் இருக்கிறது.

Zeebiz.com செய்தியில் வெளியான செய்தி ஒன்றில், இந்த வாரம் தங்கம் விலையானது நேர்மறையாக செல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

 தங்கம் விலை அதிகரிக்கும்

தங்கம் விலை அதிகரிக்கும்

அதாவது தங்கம் விலையானது தொடர்ந்து இந்த வாரம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. இதற்கு காரணம் சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் நிகழ்வுகளே காரணம் என்றும் தெரிவித்துள்ளது. தங்கம் விலையானது இந்த வாரத்தில் ஜூன் மாத காண்ட்ராக்டில் உள்ள (10 கிராம்) தங்கம் 47,800 ரூபாய் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு ஸ்டாப் லாஸ் 46,600 ரூபாயாக வைத்துக் கொள்ளலாம் என்றும் கமாடிட்டி நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

கடந்த வாரம் விலை இப்படி தான்

கடந்த வாரம் விலை இப்படி தான்

கடந்த வெள்ளிக்கிழமையன்று தங்கம் விலையானது 15 சதவீதம் ஏற்றம் கண்டு 47,061 ஆக முடிவடைந்தது. இதே கடந்த வாரத்தில் இதன் விலையானது அதிகபட்சமாக 47,980 ரூபாய் வரையில் சென்று பின் திரும்பியது. இந்த நிலையில் இந்த வாரம் மீண்டும் ஏற்றம் காணலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

எனினும் சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது, அவுன்ஸூக்கு 1750 டாலரினை தொடலாம் என்றும் கூறியுள்ளனர். இந்த வாரம் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1710 முதல் 1750 டாலர் வரையில் வர்த்தகமாகலாம் என்றும் கூறியுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் மீண்டும் உச்சத்தினை தொடலாம் என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

தங்கம் ஆபரண விலை

தங்கம் ஆபரண விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையானது (22 கேரட்) கிராமுக்கு 4530 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 36,240 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த மூன்று தினங்களாகவே ஏற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தூய தங்கத்தின் விலை

தூய தங்கத்தின் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையானது (24 கேரட்) தொடர்ந்து இன்றோடு மூன்று நாட்களாக ஏற்றம் கண்டு வருகிறது. இன்று கிராமுக்கு 4900 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 49,010 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி ஆபரண விலை

வெள்ளி ஆபரண விலை

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 48.37 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலை 48,370 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் விலையினை போல அல்லாமல் வெள்ளி விலையானது தொடர்ந்து கடந்த நான்கு தினங்களாகவே ஏற்றம் கண்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+