தங்கம் விலையானது அடுத்த ஆண்டில் யாரும் எதிர்பாராத அளவு உச்சத்தினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளி விலையும் மீண்டும் அடுத்த ஆண்டு புதிய உச்சத்தினை எட்டலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சர்வதேச நிபுணர்கள் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 2000 டாலர்களுக்கு மேலாக எட்டலாம். வெள்ளி விலையானது 40 டாலர்களுக்கு மேலாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதன் ஆல் டைம் உச்சமான 50 டாலர்களை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வரும் வாரத்தில் எப்படியிருக்கும்? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
விலை அதிகரிக்கலாம்
இது அடுத்த ஆண்டில் 2100 டாலர்களை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா முதல் முதலாக உலகை எட்டி பார்த்த நிலையில் தங்கம் விலையானது 2000 டாலர்களை எட்டியது. இது மீண்டும் இரண்டு வருடங்களுக்கு பிறகு ஏற்றம் காணத் தயாராகி வருகின்றது.
உச்சம் எட்ட தயார்
இது தற்போது 2100 டாலர்களை எட்ட காத்திருக்கிறது. டெக்னிக்கலாக நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிப்பதற்கான அறிகுறிகளே காணப்படுகின்றன, இது ஆகஸ்ட் 2020ல் கொரோனா உச்சம் எட்டிய காலம். அப்போதில் இருந்து பெரியளவில் மாற்றம் இல்லாத நிலையில், தற்போது கொரோனா பரவி வரும் சூழலில் மீண்டும் உச்சம் எட்ட தயாராகி வருகின்றது.
சரிவு இருக்கலாம்
உலகம் முழுக்க அடுத்த அலை கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுக்கலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. எனினும் ஒரு விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பு ஒரு சரிவு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டின் இறுதியில் 1800 டாலராக முடிவடையலாம்.
தங்கத்திற்கு ஆதரவு
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் சீனாவின் பொருளாதாரம் என பலவும் தங்கத்தின் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த ஆண்டு தங்கம் விலையானது உச்சத்தினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா மற்றும் அமெரிக்கா என இரண்டு முக்கிய காரணிகளும் அடுத்த ஆண்டில் தங்கத்தின் விலையில் எதிரொலிக்கலாம்.
ரெசசன் அச்சம்
ஃபெடரல் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கையை எடுத்து வருகின்றது. இந்த நடவடிக்கையானது 2023லும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஏற்கனவே அமெரிக்காவில் ரெசசன் அச்சம் நிலவி வரும் நிலையில், வட்டி அதிகரிப்பு அதனை இன்னும் மோசமாக்கலாம்.
ரஷ்யா உக்ரைன் பிரச்சனை
ரஷ்யா - உக்ரைன் இடையேயான நடவடிக்கையானது மேற்கோண்டு சர்வதேச நாடுகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 10 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த ராணுவ நடவடிக்கையானது, இனியும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. ஒரு புறம் ரஷ்யாவின் பொருளாதாரத்தினை எப்படியேனும் முடக்கி விட வேண்டும் என சர்வதேச நாடுகள் பற்பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதாரவாக அமையலாம்
இது சரியான வாய்ப்பு
மொத்தத்தில் தங்கம் விலையானது அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், நீண்டகால நோக்கில் விலை அதிகரிப்பதற்கே வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க இது சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!



Click it and Unblock the Notifications