Gold price update: தங்கம் விலையானது வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று சர்வதேச சந்தையில் சற்றே சரிவில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு சற்றே குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றும் நாளையும் பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டமானது நடைபெறவுள்ள நிலையில் இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற பலத்த எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றது.
மேலும் இந்தியாவின் மத்திய பட்ஜெட் 2023 ஆனது நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இதுவும் தங்கத்திற்கு ஆதரவாகவோ அல்லது தாக்கத்தினை ஏற்படுத்தும் அறிவிப்புகள் ஏதும் வெளியாகுமா? என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்
பெடரல் ரிசர்வ் வங்கி பாலிசி கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும், இது குறித்து நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும் சற்று குறைந்து காணப்படுகின்றது. எனினும் இன்றும் நாளையும் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புராபிட் புக்கிங்
தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து உச்சம் எட்டி வந்தது. இது 9 மாத உச்சத்தில் காணப்பட்டது. ஆக குறைந்த விலையில் வாங்கியவர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ப்யூச்சர் சந்தையினை பொறுத்த வரையில் நடப்பு காண்ட்ராக்ட் ஆனது நடப்பு வாரத்தில் எக்ஸ்பெய்ரி ஆகவுள்ள நிலையில், புராபிட் புக்கிங், ரோலோவர் என இருக்கலாம்.இது தங்கம் விலையில் அதிக ஏற்ற இறக்கத்தினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
இது தவிர பட்ஜெட் 2023, அமெரிக்கா மத்திய வங்கியின் முடிவு, ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவு, அமெரிக்காவின் வேலையின்மை குறித்தான தரவு, அமெரிக்கா டாலர் மற்றும் பத்திர சந்தை, ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை உள்ளிட்ட அரசியல் பதற்றங்கள் என பலவும் வரும் நாட்களில் முதலீட்டாளர்களால் கவனிக்கப்படலாம். ஆக இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 3.10 டாலர்கள் குறைந்து, 1919.80 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நீண்டகால நோக்கிலும் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை அவுன்ஸூக்கு காலையில் சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது 0.12% குறைந்து, 23.705 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது (ஏப்ரல் கான்ட்ராக்ட்) 10 கிராமுக்கு, 45 ரூபாய் குறைந்து, 57,005 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் எதிரொலியாக சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 64 ரூபாய் குறைந்து, 68,525 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரணம் தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையானது இன்று சற்றே குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 12 ரூபாய் குறைந்து, 5338 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து, 42,704 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 14 ரூபாய் குறைந்து, 5823 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து, 58,230 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 20 பைசா குறைந்து, 74.50 ரூபாயாக விற்பனை செய்யபட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 74,500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?



Click it and Unblock the Notifications