தங்கம் விலை அடுத்த வாரம் எப்படியிருக்கும் தெரியுமா.. விலை குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

இந்திய பியூச்சர் சந்தையில் தங்கம் விலையானது கடந்த வெள்ளிக்கிழமையன்று 10 கிராமுக்கு 59,461 ரூபாய் என்ற லெவலை எட்டியது. குறிப்பாக ஏப்ரல் கான்ட்ராக்டில் 2.44% அல்லது 1414 ரூபாய் ஏற்றம் கண்டு முடிவடைந்துள்ளது.

இதே வெள்ளி விலையானது 3% ஏற்றம் கண்டு, 2118 ரூபாய் அதிகரித்து, 68,649 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் உள்ள ஏற்றமானது, இனியும் வரவிருக்கும் வாரத்தில் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாங்கலாம்

வாங்கலாம்

குறிப்பாக அமெரிக்காவின் வங்கி நெருக்கடி, ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் நெருக்கடியான நிலை என பலவும், பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. இது வரும் வாரத்தில் 60,000 ரூபாய் என்ற லெவலை உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக கமாடிட்டி நிபுணர்கள் தங்கத்தினை வாங்கி வைக்கலாம் என பரிந்துரை செய்கின்றனர்.

லாபகரமான முதலீடு

லாபகரமான முதலீடு

எம்சிஎக்ஸ் தங்கம் விலையானது மற்ற எல்லா முதலீடுகளை காட்டிலும், சமீபத்திய காலமாக நல்ல லாபகரமான ஒன்றாக உள்ளது. ஆக இது நடப்பு ஆண்டில் இதுவரையில் 8% அல்லது 4366 ரூபாய் அதிகரித்து காணப்படுகிறது. இதே வெள்ளி விலையானது, 3628 ரூபாய் அல்லது 6.51% அதிகரித்தும் காணப்படுகின்றது.

இலக்கு விலை

இலக்கு விலை

ஏப்ரல் கான்ட்ராக்டில் தங்கத்தினை 58,650 ரூபாயினை ஸ்டாப் லாஸ் ஆக வைத்து, 59,200 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம். இதற்காக இலக்கு விலை 60,200 ரூபாய் என்றும் நிபுணர்கள் காணித்துள்ளனர். இதே வெள்ளியின் பியூச்சர் கான்ட்ராக்டில் 65,500 ரூபாயினை ஸ்டாப் லாஸ் ஆக வைத்து, 67,000 ரூபாய்க்கு வாங்கலாம். இதன் இலக்கு விலை 70,000 ரூபாயாக ஐஐஎஃப்எல் கணித்துள்ளது.

ஸ்பாட் சந்தையில் எப்படி?

ஸ்பாட் சந்தையில் எப்படி?

எப்படியிருப்பினும் அடுத்து வரும் வாரங்களில் தங்கத்தில் ஏற்ற இறக்கம் என்பது நிச்சயம் அதிகம் இருக்கலாம். தங்கத்தின் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 59,000 ரூபாயாகவும், வெள்ளியின் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலாக 69,000 ரூபாயாகவும் கணித்துள்ளது.

இதே ஸ்பாட் சந்தையில் அடுத்த வாரம் அவுன்ஸுக்கு தங்கம் விலையானது 2000 டாலர்களை தொட வாய்ப்புள்ளதாகவும், இதே வெள்ளியின் சப்போர்ட் விலை 23 மற்றும் 24 டாலர்களுக்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய காரணிகள்

முக்கிய காரணிகள்

அமெரிக்காவின் மத்திய வங்கியின் கூட்டம் அடுத்த வாரம் நடக்கவுள்ளது. ஆக இதில் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதே வங்கி நெருக்கடி, ரெசசன் அச்சம் என பலவும் முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம். இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். ஆக தொடர்ந்து அவ்வப்போது தங்கம் விலையானது சரிந்தாலும், தொடர்ந்து நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

டாலரும் சரியலாம்

டாலரும் சரியலாம்

மேற்கொண்டு வரும் வாரத்தில் டாலரின் மதிப்பும் 102 - 100 என்ற லெவலுக்கு சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலையை ஊக்குவிக்கலாம். இதன் எதிரொலி இந்திய ஆபரண சந்தையிலும் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+