Gold:தங்கம் விலையானது தொடர்ந்து கடந்த சில அமர்வுகளாகவே உச்சம் எட்டி வந்த நிலையில், கடந்த அமர்வில் சற்று சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது. எனினும் தற்போது சற்றே அதிகரித்தே காணப்படுகின்றது. இன்று அமெரிக்க மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பானது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து சர்வதேச சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகளானது வெளியேறி வரும் நிலையில், அது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து அமெரிக்காவின் வங்கிகள் நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், இது பொருளாதாரத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கத்திற்கு ஆதரவு
இது எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு வருடத்தினை தாண்டியும் ரஷ்யா உக்ரைன் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு அரசியல் பதற்றங்களும் தொடர்ந்து கொண்டுள்ளன. இதன் காரணமாக இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் நிலவி வரும் வங்கி நெருக்கடி என்பது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவளிக்கலாம்.
எவ்வளவு லாபம்?
நடப்பு நிதியாண்டில் எம்சிஎக்ஸ் தங்கம் 15.42% எனும் அளவுக்கு லாபம் கொடுத்துள்ளது. அதே சமயம் பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முறையே 1.03% மற்றும் 2.31% எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இதே வெள்ளி விலையும் 2.1% எனும் அளவுக்கு லாபம் கொடுத்துள்ளது. இதே முந்தைய நிதியாண்டில் 6.3% எனும் அளவுக்கு லாபம் கொடுத்துள்ளது.
எதிர்பார்ப்பு என்ன?
கமாடிட்டி நிபுணர்கள் நிலவி வரும் அரசியல் பதற்றங்கள், அதிகரித்து வரும் தேவை, பொருளாதார நெருக்கடி, வங்கி பிரச்சனை, முதலீட்டாளர்கள் கவலை என பலவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இவை எல்லாவற்றையும் மீறி தங்கம் விலையானது குறைந்தாலும், அது பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை. ஆக அப்படியே குறைந்தாலும், குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
முதலீடு அதிகரிக்கலாம்
அமெரிக்காவின் வங்கி துறையில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில் சர்வதேச சந்தைகள் சரிவில் காணப்படுகின்றன. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்கலாம்.
பொருளாதார வளர்ச்சி என்பதும் ஒரு நிலையற்ற நிலையில் இருப்பதால், அதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதற்கிடையில் தங்கம் விலையானது 2050 - 2060 டாலர்களை மீண்டும் எட்டலாம், இதே 10 கிராமுக்கு 63,500 ரூபாயினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1.20 டாலர்கள் அதிகரித்து, 1942.30 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலைபோல வெள்ளி விலை அவுன்ஸூக்கு, சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது 0.31% அதிகரித்து, 22.497 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 32 ரூபாய் குறைந்து, 58,547 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 196 ரூபாய் அதிகரித்து, 68,590 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகிறது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்று சற்று அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையானது இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து, 5,470 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, 43,760 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, 5967 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 1100 ரூபாய் குறைந்து, 59,670 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளி விலையானது சற்றே குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 70 பைசா குறைந்து, 74 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, 74,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications