தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்.. நிபுணர்களின் பளிச் கணிப்பு..!

தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1935 டாலர்களை உடைக்கலாம் என்று நிபுணர்கள் முன்னதாக கணித்திருந்தனர். இதற்கிடையில் கடந்த வாரத்தில் தங்கத்தின் விலையானது அதனை உடைக்கவில்லை. எனினும் 1852 டாலர்கள் என்ற லெவலை எட்டியது.

எனினும் பிற்பாதியில் மீண்டும் 1800 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 1791 டாலர்களாகவும் முடிவுற்றது.

கடந்த வாரத்தில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தினை உயர்த்தலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ரூபாய் சரிவு

ரூபாய் சரிவு

இதற்கிடையில் தான் தங்கம் விலையானது கடந்த அமர்வுகளில் 1800 டாலர்களை உடைத்துள்ளது. ஈக்விட்டி சந்தையும் தொடர்ந்து கடந்த சில அமர்வுகளாக சரிவினைக் கண்டு வந்தது. இது ஓவர் பாட் லெவலில் இருந்தது. இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது சரிவினைக் கண்டது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

இது தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. இதற்கிடையில் ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றமானது கச்சா எண்ணெய் விலை ஏற்றத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. இது பணவீக்கத்திற்கு மேலும் வழிவகுத்துள்ளது. இதற்கிடையில் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 120 டாலர்களை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு பணவீக்கத்திற்கு சாதகமாக அமையலாம். இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம்.

அமெரிக்கா பணவீக்கம்

அமெரிக்கா பணவீக்கம்

அமெரிக்காவில் அதிகரித்துள்ள பணவீக்கத்தின் மத்தியில், மீண்டும் இது 4.5 - 5% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பணவீக்க இலக்கு 2% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. டாலர் மதிப்பானது ஓவர்பாட் லெவலில் உள்ளது. இதற்கிடையில் ரூபாயின் மதிப்பானது 74 - 75.3 ரூபாய் என்ற லெவலில் உள்ளது. இது மேலும் 76 ரூபாய் வரையில் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய சப்போர்ட்

முக்கிய சப்போர்ட்

தங்கத்தின் அடுத்த முக்கிய சப்போர்ட் 1760 டாலராக உள்ளது. இது 1760 டாலர் முதல் 1865 டாலராக உள்ளது. இதனை ஸ்டாப் லாஸ் ஆக வைத்து வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 1805 டாலர்களை உடைத்து, 1830 டாலர்களை உடைக்கலாம், இதற்கு அடுத்த முக்கிய லெவல் 1865 டாலர்களாகவும் நிபுணர்கள் கணித்துள்ளார்.

இந்திய சந்தையில் தங்கம்

இந்திய சந்தையில் தங்கம்

தங்கம் விலையானது அடுத்த முக்கிய சப்போர்ட் 47,100 ரூபாயாக உள்ளது. 47,500 - 47,600 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம். இது 47,900 ரூபாய் என்ற லெவலை எட்டலாம். இதே மீடியம் டெர்மில் 48300 ரூபாய் வரையில் இலக்காகவும், ஸ்டாப் லாஸ் 47,100 ரூபாயாகவும் வைத்துக் கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+