நடப்பு ஆண்டில் கமாடிட்டி சந்தையானது மீண்டு வந்து கொண்டுள்ளது. இதற்கிடையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது இன்று எப்படியுள்ளது? இது இனி எப்படியிருக்கும? கவனிக்க வேண்டிய காரணிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.
அமெரிக்க டாலரின் மதிப்பானது மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. தொடர்ந்து பணவீக்க விகிதமானது சற்றே மென்மை அடைய தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு வட்டி விகிதத்தினை பெரியளவில் அதிகரிக்க வழிவகுக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரச்சனைகளுக்கு மத்தியில், பொருளாதாரம் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் & வெள்ளி விலை அதிகரிக்கலாம்
முன்னதாக ஐசிஐசிஐ டைரக்ட் ஒரு அறிக்கையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நடப்பு ஆண்டில் மிக பெரிய பயனர்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் மிகப்பெரிய லாபகரமான முதலீடாக இவை இருக்கலாம். வெள்ளியின் தேவையும் நடப்பு ஆண்டில் தொழிற்துறையில் மீண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வெள்ளி விலையும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்.
கணிப்பு என்ன?
இதற்கிடையில் ஐசிஐசிஐ டைரக்ட் அறிக்கையில் நிபுணர்கள் 10 கிராமுக்கு தங்கம் விலையானது 62,000 ரூபாயாகவும், இதே வெள்ளி விலை கிலோவுக்கு 80,000 ரூபாயினையும தொடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றன. மற்ற அடிப்படை உலோகங்களில் காப்பர், ஜிங்க், அலுமினியம், இது தவிர கச்சா எண்ணெய் உள்ளிட்ட பலவும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாலரின் மதிப்பு ஆதரவு
தொடர்ந்து டாலரின் மதிப்பு தங்கம் விலைக்கு ஆதரவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேரு நாடுகளில் ரெசசன் அச்சம் நிலவி வரும் நிலையில், பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை தற்போதைக்கு மென்மையாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். மேற்கொண்டு சீனாவின் பொருளாதாரமும் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பிசிகல் தங்கத்தின் தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தினாலும், முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவையினை ஊக்குவிக்கலாம். இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
வாங்கி குவிக்கலாம்
இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தான் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் சர்வதேச மத்திய வங்கியானது 400 டன் தங்கத்தினை வாங்கி குவித்துள்ளது. இந்தபோக்கு இனியும் தொடரலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மத்திய வங்கியானது தங்கத்தினை வாங்கிக் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 1830.10 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று அழுத்தத்தில் பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டாலும், மீண்டும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் கீழாக காணப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் எனலாம்.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 24.18 டாலராக குறைந்து காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று கீழாகவே காணப்படுகிறது. இது மேற்கொண்டு இன்று சற்று குறையலாம் எனும் விதமாகவே டெக்னிக்கலாக காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 88 ரூபாய் அதிகரித்து, 55,105 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவினை காட்டிலும், இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளி விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 128 ரூபாய் அதிகரித்து, 69,541 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாறியுள்ள நிலையில், அதன் எதிரொலியாக ஆபரண தங்கம் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இன்று கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 5150 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 41,200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்து, 5618 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு, 220 ரூபாய் அதிகரித்து, 56,180 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
வெள்ளியின் விலையானது இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 74.50 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 200 ரூபாயாக அதிகரித்து, 74,500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
More From GoodReturns

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

PPF Vs SIP: 10 வருஷத்துல யாரு கிங்? ரூ.1.5 லட்சத்தை எதில் போட்டால் கோடீஸ்வரர் ஆகலாம்?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!



Click it and Unblock the Notifications