Gold Price பெரிய சரிவை காணலாம்! யார் கணித்து இருக்கிறார்கள்? எவ்வளவு சரியலாம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் வாங்கப் போகிறீர்களா? தங்கத்தில் முதலீடு செய்யப் போகிறீர்களா? இது சரியான நேரம் போலத் தான் தெரிகிறது. கடந்த சில நாட்களாக, தங்கம் விலை பெரிய ஏற்றமோ அல்லது இறக்கமோ காணாமல், தடுமாறிக் கொண்டு இருக்கிறது.

 

சென்னை ஆபரணத் தங்கம் முதல் சர்வதேச தங்கம் வரை எல்லாவற்றின் விலை நிலவரம் என்ன? இந்த நேரத்தில் தங்கத்தை வாங்கலாமா? தங்கம் விலை எவ்வளவு சரிய வாய்ப்பு இருக்கிறது? யார் கணித்து இருக்கிறார்கள்?

எதிர்காலத்தில் தங்கம் விலை என்ன ஆகும்? எந்த கம்பெனிகள் தங்கம் விலை ஏறும் எனக் கணித்து இருக்கிறார்கள்? கணிப்பின் படி எவ்வளவு விலை ஏறும்? என்பதை எல்லாம் இந்த கட்டுரையில் பார்ப்போம்.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கம் விலை நிலவரம்

தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றும் சக்தி கொண்ட சென்னை மாநகரத்தில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 52,410 ரூபாய்க்கு விற்று வருகிறார்கள். 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,050 ரூபாய்க்கு விற்று வருகிறார்கள்.

எம் சி எக்ஸ் தங்கம் விலை

எம் சி எக்ஸ் தங்கம் விலை

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான எம் சி எக்ஸ் சந்தையில், 10 கிராம் தங்க ஃப்யூச்சர் டிசம்பர் 2020 காண்டிராக்டின் விலை, நேற்றைய குளோசிங் விலையான 50,526 ரூபாயில் இருந்து 510 ரூபாய் விலை சரிந்து 50,016 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

இண்டர்நேஷனல் தங்கம் விலை
 

இண்டர்நேஷனல் தங்கம் விலை

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, நேற்றைய குளோசிங் விலையான 1,878 டாலரில் இருந்து, 8 டாலர் (0.45 %) விலை ஏற்றம் கண்டு 1,886 டாலரில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்று அதிகபட்சமாக 1,898 டாலர் வரைத் தொட்டு வர்த்தகமானதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை குறிப்பிட்ட ரேஞ்சுக்குள்ளேயே வியாபாரம்

தங்கம் விலை குறிப்பிட்ட ரேஞ்சுக்குள்ளேயே வியாபாரம்

கடந்த ஒரு மாத காலமாகவே, சென்னை ஆபரணத் தங்கம் விலை (24 கேரட் 10 கிராம்) 51,870 முதல் 54,200 ரூபாய்க்குள்ளேயே வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
அதே போல எம் சி எக்ஸ் டிசம்பர் காண்டிராக்ட் தங்கம் விலை 49,252 முதல் 52,390 ரூபாய்க்குள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சர்வதேச தங்கம் விலையும் 1,861 - 1,970 டாலருக்குள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

தங்கம் விலை 1,726 டாலர் வரை சரியலாம் - Credit Suisse

தங்கம் விலை 1,726 டாலர் வரை சரியலாம் - Credit Suisse

தங்கம் விலை, குறுகிய காலத்தில், நாம் எதிர்பார்ப்பதை விட, அதிக காலத்துக்கு தொடர்ந்து விலை சரிந்து வர்த்தகமானால் சர்வதேச தங்கம் விலை 1,765 டாலர் வரையும், சொல்லப் போனால் 1,726 டாலர் வரை சரியலாம் என க்ரெடிட் சூசி (Credit Suisse) கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

1,760 டாலருக்குக் வரை போகலாம்

1,760 டாலருக்குக் வரை போகலாம்

தங்கத்தின் விலை 1,840 டாலருக்குக் கீழ் போனால், இந்த டவுன் டிரெண்ட் முடிவதற்குள், தங்கம் விலை 1,800 டாலருக்குக் கீழ் சரியலாம், அடுத்த சப்போர்ட் 1,760 டாலரில் தான் இருக்கிறது என, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் (Standard Chrtered) நிறுவனத்தின் விலை உயர்ந்த உலோகங்களின் அனலிஸ்ட் (Precious Metal Analyst) சுகி கூப்பர் சொல்லி இருக்கிறார்.

தங்கம் வாங்கலாமா?

தங்கம் வாங்கலாமா?

தங்கம் தீர்க்கமாக ஏற்றம் காணாமால், அவ்வப் போது ஏற்ற இறக்கம் கண்டு வருவதால், வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம், விலை கணிசமாக குறையும் போது எல்லாம், கோட்டக் செக்யூரிட்டீஸ் கம்பெனி, தங்கத்தை வாங்கச் சொன்னது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக, வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் தங்கத்தை வாங்கிப் போடலாம்.

தங்கம் விலை கணிப்பு கோல்ட் மேன் சாக்ஸ்

தங்கம் விலை கணிப்பு கோல்ட் மேன் சாக்ஸ்

உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான கோல்ட் மேன் சாக்ஸ் (Goldman Sachs) ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, 2,000 டாலரைத் தொடும் என சில மாதங்களுக்கு முன்பு கணித்தது. அதே போல தங்கம் விலை 2,000 டாலரைத் தாண்டி 2,063 டாலரைத் தொட்டது. தற்போது 2,300 டாலரைத் தொடும் எனக் கணித்து இருக்கிறது கோல்ட் மேன் சாக்ஸ்.

2,300 டாலர் தொடலாம் - க்ரெடிட் சூசி

2,300 டாலர் தொடலாம் - க்ரெடிட் சூசி

க்ரெடிட் சூசி கூட, தங்கம் விலை நீண்ட காலத்தில் 2,300 டாலர் வரைத் தொடலாம் எனக் கணித்து இருக்கிறது. முதலில் 2,075 டாலரைக் கடக்க வேண்டும், அதன் பின் 2,175 டாலரைக் கடந்தால், சர்வதேச தங்கம் விலை 2,300 டாலரைத் தொடலாம் எனக் கணித்து இருக்கிறது க்ரெடிட் சூசி.

3,000 டாலர் சொன்ன பேங்க் ஆஃப் அமெரிக்கா

3,000 டாலர் சொன்ன பேங்க் ஆஃப் அமெரிக்கா

அமெரிக்காவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் அமெரிக்கா (Bank of America), கடந்த ஏப்ரல் 2020-ல், "The Fed can't print gold" என்கிற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 18 மாத காலத்துக்குள், ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை 3,000 டாலர் வரை அதிகரிக்கலாம் எனக் கணித்து இருக்கிறது.

கமாடிட்டி பிதாமகன் ஜிம் ராஜர்ஸ்

கமாடிட்டி பிதாமகன் ஜிம் ராஜர்ஸ்

உலகின் முன்னணி கமாடிட்டி முதலீட்டாளர்களில் ஒருவரான ஜிம் ராஜர்ஸ், தங்கம் விலை எதிர்காலத்தில் புதிய உச்சத்தைத் தொடும் என மொட்டையாகச் சொல்லி இருக்கிறார். அதோடு கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து தன் சொந்தப் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்து கொண்டே வருகிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தகக்து.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

எனவே தற்காலிகமாக தங்கம் விலை சரிந்தால், கோட்டக் செக்யூரிட்டீஸ் சொன்னது போல நல்ல வாய்ப்பாகக் கருதி, தங்கத்தை வாங்க விரும்புபவர்கள் வாங்கிப் போடலாம். தங்கம் விலை ஏற்றம் காணும் இந்த டிரெண்டில் 10 - 15 சதவிகித விலை இறக்கத்தை எல்லாம் கண்டு கொள்ள வேண்டாம் என, ஜிம் ராஜர்ஸ் சொன்னதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக தங்கத்தில் சரியான நேரத்தில் முதலீடு செய்து, நல்ல லாபம் பார்க்க வாழ்த்துக்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price may see a big fall now and see a big rise later price prediction by companies

The gold price may see a big fall now and then a big surge later. What are the companies predicted the surge in gold price and how much they predicted the gold price.
Story first published: Wednesday, October 7, 2020, 19:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X