மீண்டு வரும் தங்கம் விலை.. இனியும் ஏற்றம் காணுமா.. குறையவே குறையாதா.. இந்த இடத்தில் வாங்கலாமா?

Gold price updates: அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்றே அழுத்தத்தில் காணப்படும் நிலையில், கடந்த வார இறுதியில் தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.

இது அமெரிக்காவின் வேலை வாய்ப்பு குறித்தான தரவானது வெளியான நிலையில், இது தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.

இது இந்திய கமாடிட்டி சந்தையில் 10 கிராமுக்கு 829 ரூபாய் அதிகரித்து, 56,130 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.

பணவீக்க கவலை

பணவீக்க கவலை

கடந்த வெள்ளிக்கிழமையன்று மட்டும் தங்கம் விலையானது 2% ஏற்றம் கண்டு, 1867 டாலராக முடிவுற்றது. கமாடிட்டி நிபுணர்கள் தங்கம் விலையானது வேலை வாய்ப்பு குறித்தான தரவானது சந்தைக்கு எதிராக வந்த நிலையில், சரிவில் காணப்பட்டது. குறிப்பாக அமெரிக்காவின் பணவீக்கம் குறித்த கவலையும் இருந்து வருகின்றது. இது மேற்கோண்டு தங்கம் விலைக்கு ஆதரவாக அமைந்துள்ளது.

முக்கிய லெவல்கள்

முக்கிய லெவல்கள்

எப்படியிருப்பினும் தங்கத்தின் உடனடி சப்போர்ட் அவுன்ஸூக்கு 1820 டாலராகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவலாக 1890 டாலராகவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதே இந்திய சந்தையில் முக்கிய சப்போர்ட் லெவல் ஆக 55,200 ரூபாயாகவும், முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவலாக 56,700 ரூபாயாகவும் கணித்துள்ளனர். இதனை உடைத்து சென்றால், 57,200 ரூபாயினை எட்டலாம் என கணித்துள்ளனர்.

தங்கத்திற்கு ஆதரவு

தங்கத்திற்கு ஆதரவு

மொத்தத்தில் தங்கத்தின் ஒட்டுமொத்த போக்கு என்பது ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஏனெனில் அமெரிக்காவில் சிலிக்கான் வாலி வங்கி திவால் என்பது பொருளாதாரம் எந்தளவுக்கு சரிவில் உள்ளது என்பதை காட்டுகின்றது. ஆக இது மேற்கொண்டு ஈக்விட்டிகள் மற்றும் மற்ற முதலீடுகள் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் கணிப்பு

ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் கணிப்பு

இதே ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் தங்கம் விலையானது அமெரிக்க டாலரால் கடந்த சில அமர்வுகளாக ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக வேலை வாய்ப்பு தரவானது மேற்கொண்டு சம்பள வளர்ச்சி என்பதை குறைந்துள்ளதை காட்டுகின்றது. இது மேற்கொண்டு அமெரிக்க பொருளாதார வளர்ச்சியினை சுட்டிக் காட்டும் விதமாக வந்துள்ளது. ஆக இது வரவிருக்கும் வாரங்களிலும் தங்கத்தில் பிரதிபலிக்கலாம். இந்த சமயத்தில் பணவீக்க விகிதமும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது. இது வரவிருக்கும் அமெரிக்காவின் மத்திய வங்கி கூட்டத்திலும் வட்டிவிகித அதிகரிப்பினை தூண்டலாம்.

வட்டி அதிகரிப்பு

வட்டி அதிகரிப்பு

வரவிருக்கும் அமெரிக்காவின் மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் என்பது 50 அடிப்படை புள்ளிகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். ஆக இது முதலீட்டாளர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது. வரவிருக்கும் வாரத்தில் பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக முதலீட்டாளர்களின் போர்ட்போலியோவில் தங்கம் இருப்பது அவசியமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

தங்கத்திற்கு ஆதரவு

தங்கத்திற்கு ஆதரவு

கிரிப்டோகரன்சி சந்தையும் சரிவில் காணப்படும் நிலையில், இதுவும் தங்கம் விலை ஏற்றம் காண காரணமாக அமைந்தது. ஆக வரவிருக்கும் வாரத்தில் சிலிக்கான் வாலி வங்கி பிரச்சனை, கிரிப்டோகரன்சிகள், டாலர் மதிப்பு, பத்திர சந்தை, ஈக்விட்டி சந்தை என பலவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

குறையும்போது வாங்கலாம்

குறையும்போது வாங்கலாம்

ஆக மொத்தம் வரவிருக்கும் வாரத்தில் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் என்பது மிக அதிகமாக இருக்கலாம். இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் ஏற்றம் காணவே வாய்ப்புகள் அதிகம். ஆக தங்கம் விலையானது குறையும்பட்சத்தில் வாங்கி வைக்கலாம். இது மேற்கொண்டு தங்கம் விலையினை ஊக்குவிக்கலாம்.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+