தங்கம் முதலீட்டாளார்கள் செம அப்செட்.. இனி ஒரு வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காதா?

Gold price update: தங்கம் விலையானது 2022ல் 14.30% ஏற்றம் கண்ட பிறகு, தொடர்ந்து 10 வாரமாக தங்கம் விலையானது ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. கடந்த வாரத்தில் 2.36% அதிகரித்து, 1865 டாலராக உச்சம் தொட்டுள்ளது.

தொடர்ந்து சீனாவில் அதிகரித்து வரும் கொரோனாவுக்கு மத்தியில், சர்வதேச காரணிகள் பலவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றத்தில் காணப்படுகின்றது.

முக்கிய காரணி

முக்கிய காரணி

மொத்தத்தில் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முக்கிய நடவடிக்கைக்கு மத்தியில், கொரோனாவும் டாலரின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது உச்சத்தில் இருந்து வருகின்றது.

அமெரிக்காவில் இருந்து வரும் மெதுவான வளர்ச்சிக்கு மத்தியில் வேலை வளர்ச்சி விகிதமானது குறைந்து வருகின்றது. இது மேற்கொண்டும் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

பாதுகாப்பு புகலிடம்

பாதுகாப்பு புகலிடம்

தொடர்ந்து பணவீக்கத்தினை குறைக்கும் பொருட்டு வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் மத்திய வங்கியானது, இனி நடவடிக்கைகளை குறைக்கும் என்றாலும், வட்டி அதிகரிப்பு என்பது மிதமாக தொடர்ந்து அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலைக்கு ஆதரவாக அமையலாம். ஆக தங்கம் விலையில் ஏதேனும் சரிவு ஏற்பட்டால் அது முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் வாங்க பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படுகிறது.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விகிதமாக 10 கிராமுக்கு 54,700 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே ஏற்றத்தில் 55,200 ரூபாய் மற்றும் 55,000 ரூபாயாக கணித்துள்ளது. இது தொடர்ந்து 54, 500 ரூபாயக்கு மேலாக இருக்கும் பட்சத்தில் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வரவிருக்கும் அடுத்த இரு அமர்வுகளில் இந்த லெவலில் காணப்பட்டால், தொடர்ந்து ஏற்றம் காண வழிவகுக்கலாம்.

 டாலரின் நிலை என்ன ?

டாலரின் நிலை என்ன ?

 

அமெரிக்க டாலரின் மதிப்பில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1890 டாலர் மற்றும் 1910 டாலர்கள் என்ற லெவலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வரவிருக்கும் அமர்வுகளில் எட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்ந்து சர்வதேச சந்தைகளில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், தங்கம் விலையானது இந்த அளவுக்கு ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தியில் தாக்கம்

உற்பத்தியில் தாக்கம்

அமெரிக்காவின் வேலை வாய்ப்பு தொடர்பான தரவானது மந்த நிலையில் காணப்படும் நிலையில், இது பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதையே காட்டுகின்றது. இதற்கிடையில் மேற்கொண்டு அமெரிக்கா சீனா உள்ளிட்ட நாடுகளின் உற்பத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற அமைப்புகள் பொருளாதார வளர்ச்சி குறித்தான குறைந்த மதிப்பீட்டினை வெளியிட்டு வருகின்றன.

அதிகரிக்கலாம்

அதிகரிக்கலாம்

மேற்கண்ட பல காரணிகளுக்கு மத்தியில் நிபுணர்கள் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றே கூறி வருகின்றனர். இது வரவிருக்கும் அமர்வுகளில் மேற்கொண்டு அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதன் காரணமாக ஆபரணத் தங்கம் விலையும் அதிகரிக்கலாம். குறிப்பாக தங்கத்தின் தேவையானது இனி வரும் வாரங்களில் அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு தங்கம் விலையினை இந்திய ஆபரண சந்தையில் ஊக்குவிக்கலாம். குறிப்பாக பொங்கல் காலகட்டத்தில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+