சும்மா எகிறி அடிக்க போகும் தங்கம் விலை.. இவ்வளவு அதிகரிக்குமா.. இனி சாமானியர்களின் கனவு..!

தங்கம் விலையானது அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. எந்தளவுக்கு விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறதோ, அந்தளவுக்கு மக்களின் வாங்கும் திறன் குறைந்து வருகிறது.

ஆனால் ஓர் அறிக்கையானது தங்கம் விலையானது இன்னும் மூன்று வருடத்தில் அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதுவும் சர்வதேச சந்தையில் அவுன்ஸ் தங்கம் விலையானது 5000 டாலர் வரை கூட செல்லலாம் என்கிறது கிட்கோ அறிக்கை.

இதே வெள்ளியின் விலையானது 50 டாலர்களாக அதிகரிக்கலாம் என்கிறது அந்த அறிக்கை.

தங்கம் விலை அதிகரிக்கும்

தங்கம் விலை அதிகரிக்கும்

ஏற்கனவே இதற்கான ஆட்டம் ஆரம்பித்து விட்டது. அதிகளவிலான ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. இது தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா காரணமாக நிகழும் என்றும் கிட்கோ செய்திகள் கூறுகின்றன. மேலும் குறுகிய கால சந்தையில் தங்கம் விலையானது அடுத்த மூன்று ஆண்டுகளில் அவுன்ஸூக்கு 3,000 - 5,000 டாலர்கள் வரை செல்லக்கூடும். இதே அடுத்த மூன்று ஆண்டுகளில் வெள்ளியின் விலையானது 18 டாலர் முதல் 50 டாலர் வரை செல்லக்கூடும்.

கோல்டுமேன் சாச்சஸ்

கோல்டுமேன் சாச்சஸ்

சமீபத்தில் கோல்டுமேன் சாச்சஸ் தங்கம் விலையானது 2000 டாலர் வரை செல்லக்கூடும் என்றும் கணித்திருந்தது. ஆனால் மேற்கண்ட கிட்கோ அறிக்கையானது 5000 டாலர்கள் வரை செல்லக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டும் அல்ல விலைமதிப்பற்ற இந்த உலோகங்களுக்கான போட்டியின் இறுதியில் தங்கத்தின் விலையை விட வெள்ளியின் விலை அதிகமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

வெள்ளி விலை அதிகரிக்க காரணங்கள்

வெள்ளி விலை அதிகரிக்க காரணங்கள்

தங்கம் மற்றும் வெள்ளிக்கான அடிப்படைகள் ஒரே மாதிரியானவை தான். ஆனால் வெள்ளியின் விலையானது மிகவும் கொந்தளிப்பான பாணியில் நகர்கிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். வெள்ளிக்கு தங்கத்தினை விட சிறப்பாக செயல்பட பல காரணங்கள் உள்ளன. சந்தையின் ஆரம்ப கட்டத்தில் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரிக்க தொடங்குகிறது,. அதன் பிறகு தாமதமாக வெள்ளியின் விலை அதிகரிக்க தொடங்குகிறது. ஆனால் அது உறுதியாக நகரத் தொடங்கும்.

வெள்ளி விலை அதிகரிக்கும்

வெள்ளி விலை அதிகரிக்கும்

உண்மையில் 2010ல் நாம் 17 டாலரில் இருந்து 50 டாலர் வரையில், வெறும் ஒன்பது மாதங்களில் சென்றதை பார்த்தோம். ஆக வெள்ளியின் விலையானது இன்னும் நேர்மறையாகத் தான் உள்ளது. விலைமதிப்பற்ற இந்த உலோகத்தின் விலையானது விரைவில் மூன்று இலக்கினை தொடும் என்றும் அது தெரிவித்துள்ளது.

எவ்வளவு அதிகரிக்கும் தங்கம் விலை?

எவ்வளவு அதிகரிக்கும் தங்கம் விலை?

இதுவே தங்கம் விலையினை பொறுத்த வரையில் ஒரு பரந்த ஏற்றம் 2023 வரையில் காணப்படும்,. அதன் பிறகு 2025க்குள் ஒரு திருத்தம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நீண்டகாலமாகவே தங்கமும் நேர்மறையாக உள்ளது. ஆக இது நிச்சயம் உயர் மட்டத்திற்கு செல்லும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டும் அல்ல அடுத்த ஆண்டு அல்லது நடப்பு ஆண்டின் இறுதியில் தங்கம் விலையானது 1,900 டாலர்களை தொடலாம் என்ற கணிப்பு மிகையாகாது என்றும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தொடர்ந்து பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களாகவே காலையில் சற்று ஏற்றம் கண்டாலும், முடிவில் சற்று குறைந்தே காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது 2.50 டாலர்கள் அதிகரித்து 1,783.70 டாலர்களாக அதிகரித்து காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை நிலவரம்

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையானது தொடர்ந்து கடந்த நான்கு தினங்களாகவே அதிகரித்து வரும் நிலையில் இன்றும் அதிகரித்துள்ளது. தற்போது வெள்ளியின் விலையானது 0.35% ஏற்றம் கண்டுள்ளது. இது தற்போது 0.064 டாலர்கள் அதிகரித்து, 18.128 டாலர்களாக அதிகரித்துள்ளது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 33 ரூபாய் அதிகரித்து, 48,277 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது நேற்று சரிவினைக் கண்டு இருந்த நிலையில், இன்று சற்றும் ஏற்றம் கண்டு காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி விலையானது, கிலோவுக்கு 247 ரூபாய் அதிகரித்து, 48,370 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது சுமார் 0.51 சதவீதம் ஏற்றமாகும்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று தங்க ஆபரணம் விலையானது இன்னும் மாற்றம் காணவில்லை. இதே கடந்த திங்கட்கிழமையன்று தங்கம் விலையானது சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் அதிகரித்து 4,645 ரூபாயாகவும், சவரனுக்கு 37,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே வெள்ளி விலையை பொறுத்தவரையில் இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. எனினும் திங்கட்கிழமையன்று கிராமுக்கு 48.50 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 48,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+