உலகினை அச்சுறுத்தி வந்தாலும் தன்னை எதுவும் செய்ய முடியாது என காலரை தூக்கிவிட்டு கொண்டு தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது தங்கம் விலை.
ஒரு பக்கம் கொரோனா லாக்டவுனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தாலும், அட்சய திருதியை ஆன இன்று தங்கம் குறித்தான நிறைய சலுகைகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.
இந்த நிலையில் இந்த வருட முடிவுக்குள் தங்கம் விலையானது டாலரில் 2000 டாலர் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் முன்பே கணித்து இருந்தனர். இந்த நிலையில் தற்போதும் மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
கோல்டு இடிஎஃப் வாங்கலாம்
இந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக தங்கத்தினை கடைகளில் வாங்க முடியாவிட்டாலும், ஆன்லைன் தங்கம் வாங்க முடியும். அதிலும் இன்றும் அட்சய திருதியை காரணம் காட்டி விலையை குறைத்துள்ளதோடு, பல விதமான சலுகையை வழங்கி வருகின்றன. இதற்காக கோல்டு இடிஎஃப் வாங்கி வைக்கலாம். அல்லது தங்க பத்திரங்கள் வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கோல்டு இடிஎஃப் சிறந்த ஆப்சன்
மணி கண்ட்ரோலில் வெளியான செய்தியில் கோல்டு இடிஎஃப் தற்போதைக்கு ஒரு சிறந்த வழி என்றும், இது முதலீட்டாளார்களுக்கு ஏற்ற சிறந்த முதலீடாகவும் இருக்கும். இது நாள் மக்களிடையே பரவி வரும் ஒரு சிறந்த முதலீட்டு ஆப்சனாக உள்ளது என்றும் ஆக்ஸிஸ் செக்யூரிட்டிஸ் தலைவர் சுனில்குமர் கட்கே மனி கண்ட்ரோலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விலை அதிகரிக்கும்
அது மட்டும் அல்ல அடுத்த 3 முதல் 4 மாதங்களில் தங்கம் விலையானது 50,000 - 52,000 ரூபாயினை தொடலாம் என்றும் கட்கே கூறியுள்ளார். நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் தங்களது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் தங்களது முதலீடுகளை செய்து வருகின்றனர். இதனால் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
வேகமெடுக்கும் விலை
கொரோனாவின் வேகம் குறையாமல் வேகமேடுத்துக் கொண்டிருக்கையில், காமெக்ஸில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1850 - 1900 டாலர்கள் வரை செல்லலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதே இந்தியாவில் 50,000 ரூபாயினை தொடக்கூடும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!



Click it and Unblock the Notifications