Gold price update: இந்தியாவில் பல்வேறு பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது, இன்று சற்றே ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது இன்று வெளியாகவிருக்கும் பட்ஜெட், பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் என பலவும் சந்தையில் பெருத்த ஏற்ற இறக்கத்தினை ஏற்படுத்தலாம்.
குறிப்பாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியானது குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையானது நீண்டகாலமாக இருந்து வரும் நிலையில், இந்த பட்ஜெட்டில் குறைப்பு இருக்குமா? இனி வரும் காலங்களில் தங்கம் விலை குறையுமா? சாமானிய மக்களும் தங்கத்தினை வாங்க முடியுமா? அல்லது நினைத்து மட்டும் தான் பார்க்க முடியுமா? என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
விலை அதிகரிக்கலாம்
வட்டி அதிகரிப்பானது குறையும்பட்சத்தில் அது டாலரின் மதிப்பில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். இது வட்டியில்லா முதலீடாக இருந்தாலும் பாதுகாப்பு புகலிடமாக பார்க்கப்படும். இதன் காரணமாக தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம்.
சர்வதேச சந்தையில் அதிகரித்து வரும் தங்கத்தின் விலையின் மத்தியில், இந்திய ஆபரண தங்கம் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆக இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
சம்பளம் குறையலாம்
அமெரிக்காவில் ஊழியர்களுக்கான செலவினங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது நான்காவது காலாண்டில் குறைக்கப்படலாம். இதன் காரணமாக சம்பள விகிதமானது குறையலாம். இதன் காரணமாக நுகர்வினை குறைக்கலாம். தேவையினை குறைக்க வழிவகுக்கலாம். இது இந்தியாவிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஏனெனில் அமெரிக்காவில் சம்பளம் குறைந்தாலும், அங்கு பணிபுரியும் பெரும்பகுதி வெளி நாட்டவர்களில் இந்தியர்களின் பங்கு முக்கியமானது. இது இந்தியாவிலும் சம்பளத்தினை குறைக்க வழிவகுக்கலாம்.
தங்கம் நுகர்வு சரிவு
தொடர்ந்து விலை அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஆண்டே தங்கத்தின் நுகர்வானது 3% சரிவினைக் கண்டுள்ளது. இது தேவை அதிகம் இருந்தாலும் விலை உச்சத்தில் இருந்த நிலையில் குறைந்தது என உலக தங்க கவுன்சில் அறிக்கையில் அறிய முடிகிறது.
ஆக இதனை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் 2023ல் வரி விகிதம் குறைக்கப்படுமா? என்ற பெருத்த எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.
கவனிக்க வேண்டியது என்ன?
பட்ஜெட் 2023, அமெரிக்கா மத்திய வங்கியின் வட்டி விகித முடிவு, ஐரோப்பிய மத்திய வங்கியின் வட்டி விகித முடிவு, அமெரிக்காவின் வேலையின்மை குறித்தான தரவு, அமெரிக்கா டாலர் மற்றும் பத்திர சந்தை, ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை உள்ளிட்ட அரசியல் பதற்றங்கள் என பலவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 3.75 டாலர்கள் குறைந்து, 1941.60 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வில் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், நீண்டகால நோக்கிலும் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை அவுன்ஸூக்கு காலையில் சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது 0.23% குறைந்து, 23.780 டாலராக காணப்படுகிறது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும், இன்று மேலாகவே காணப்படுகிறது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று தடுமாறினாலும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது (ஏப்ரல் கான்ட்ராக்ட்) 10 கிராமுக்கு, 20 ரூபாய் குறைந்து, 57,170 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகிறது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையிலும் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் எதிரொலியாக சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 6 ரூபாய் குறைந்து, 68,822 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து, நீண்டகால நோக்கிலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரணம் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரண தங்கம் விலையானது இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்து, 5360 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 176 ரூபாய் அதிகரித்து, 42,880 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 24 ரூபாய் அதிகரித்து, 5847 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதே 10 கிராமுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 58,470 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆபரண வெள்ளி விலை
தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 74.80 ரூபாயாக விற்பனை செய்யபட்டு வருகின்றது. இதே கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 74,800 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

Today Gold Silver Rate Live: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!



Click it and Unblock the Notifications