தங்கம் விலையானது இன்று சற்று தடுமாற்றத்தில் இருந்தாலும், அதன் சமீபத்திய உச்சத்தில் இருந்து பார்க்கும்போது, 10 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. இது வாங்க சரியான நேரமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
தங்கம் விலையானது கடந்த வாரத்தில் சற்று சரிவில் இருந்த நிலையில், இன்று சற்று தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது. எனினும் இந்த லெவலில் இருந்து மீண்டும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சத்தில் இருந்து சரிவு
தங்கம் விலையானது பியூச்சர் சந்தையில் 55000 ரூபாய் என்ற லெவலை தொட்ட பிறகு மீண்டும், 54,000 ரூபாய்க்கு கீழாகவே சென்று, மீண்டும் தற்போது மீண்டு வந்து கொண்டுள்ளது. இது புராபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் உச்சத்தில் இருந்து 1000 ரூபாய்க்கு மேலாக சரிவினைக் கண்டு தற்போது மீண்டும், வலுப்பெற ஆரம்பித்துள்ளது.
என்ன காரணம்?
எப்படியிருப்பினும் தற்போது இந்திய சந்தையில் 54,400 ரூபாய்க்கு மேலாக காணப்படுகின்றது. கடந்த வாரத்தில் சர்வதேச சந்தையிலும் மீண்டும் 1800 டாலர்களை உடைத்து 1791 டாலர்களாக காணப்பட்டது. இதே வெள்ளி விலையானது 23.12 டாலராகவும் காணப்பட்டது. டாலரின் மதிப்பு, ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை என பலவும் தங்கத்திற்கு எதிராக அமைந்தன.
தங்கத்திற்கு ஆதரவு
தங்கம் விலையானது கடந்த வாரத்தில் குறைந்து, இது டாலரில் தங்கத்தினை வாங்கும், மற்ற கரன்சிதாரர்களுக்கு விலை மலிவாகவும் பார்க்கப்பட்டது. இதுவும் தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காரணமாக அமையலாம். நவம்பர் மாதத்தின் நடுத்தர காலத்தில் இருந்து, இது குறைந்த விலையை எட்டியது. அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் நிலையில், வரவிருக்கும் ஆண்டிலும் இந்த போக்கு தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதன் காரணமாக ரெசசன் அச்சம் அதிகரித்துள்ளது. இது மேற்கொண்டு நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.
ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை
இதற்கிடையில் தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையும் அதிகரித்து வரும் நிலையில், இது மேற்கொண்டு நீண்டகால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். இது பங்கு சந்தையிலும் ஏற்ற இறக்கத்தினை கொண்டு வரும் நிலையில், இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய லெவல்கள்
எனினும் இன்றைய அமர்வில் தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம் என கூறும் நிபுணர்கள், முக்கிய சப்போர்ட் லெவல் ஆக 1778 - 1815 டாலர்களையும், ரெசிஸ்டன்ஸ் லெவலாக 1805 - 1815 டாலர்களையும் கமாடிட்டி தரகு நிறுவனம் கணித்துள்ளது. இது இந்திய சந்தையில் 54,120 - 53,950 ரூபாய் சப்போட் லெவலாகவும் கணித்துள்ளது. இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 54,480- 54,650 ரூபாயாகவும் கணித்துள்ளனர்.
இதே வெள்ளியின் சப்போர்ட் விலை 22.92 - 22.75 டாலராகவும், இதே ரெசிஸ்டன்ஸ் லெவல் ஆக 23.48 - 23.65 டாலராகவும் கணித்துள்ளனர். இதே இந்திய சந்தையில் சப்போர்ட் லெவல் 67,250 - 66,880 ரூபாயாகவும், இதே ரெசிஸ் லெவல் ஆக 68,520 - 68,980 ரூபாயாகவும் கணித்துள்ளனர்.
சிறந்த ஹெட்ஜிங்
தங்கம் என்பது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் நிலையில், தற்போது பணவீக்கமும் உச்சத்தில் காணப்படுகின்றது. வட்டி விகிதமும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதன் காரணமாக பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமே இருந்து வருகின்றது.


Click it and Unblock the Notifications