ரூ.9,500 சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த சில அமர்வுகளாக எதிர்பாராத விதமாக பலமான ஏற்றத்தினைக் கண்டு வந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் சரிவினை காணத் தொடங்கியுள்ளது.

இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்பட்டாலும், இதன் விலை இன்னும் குறையுமா? எவ்வளவு குறையும்? இது வாங்க சரியான நேரமா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.

இதற்கிடையில் நிபுணர்களின் கணிப்பு என்ன? நீண்டகால நோக்கில் எப்படியிருக்கும் வாருங்கள் பார்க்கலாம்.

 செப்டம்பரில் வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. வரும் வாரங்களில் எப்படியிருக்கும்..! செப்டம்பரில் வீழ்ச்சி கண்ட தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. வரும் வாரங்களில் எப்படியிருக்கும்..!

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

தங்கம் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து, பலவீனமடைந்து வந்த நிலையில் ஏற்றம் கண்டது. கடந்த அமர்வில் அமெரிக்காவின் ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்பு விரைவில் வட்டி அதிகரிக்கப்படலாம் என்ற உணர்வு, மேற்கொண்டு பத்திரம் வாங்குதல் விரைவில் குறைக்கலாம், அமெரிக்காவின் வேலை குறித்தான தரவுகளுக்கு மத்தியில், டாலரின் மதிப்பு மீண்டும் சரிவு கண்டது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமைந்தது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படுகிறது. அதோடு விரைவில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்ற நிலையே நிலவி வருகிறது. இது மேற்கொண்டு பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இது தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு காரணமாக அமையலாம் என்ற நிலை இருந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு எதிராக அமைந்துள்ளது. அதாவது கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக பணவீக்கம் அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என்ற நிலை இருந்து வருகிறது.

விழாக்காலத்தில் தேவை அதிகரிக்கலாம்

விழாக்காலத்தில் தேவை அதிகரிக்கலாம்

வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தங்கத்தின் தேவையானது முதலீட்டு ரீதியாகவும், ஆபரணத் தங்கத்தின் தேவையும் தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற நிலையும் நிலவி வருகிறது. இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் தங்கம் விலையானது வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் விலை அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது.

 

சரிவில் பங்குச்சந்தைகள்

சரிவில் பங்குச்சந்தைகள்

கடந்த சில தினங்களாகவே சர்வதேச பங்குச் சந்தைகள் சரிவை கண்டு வரும் நிலையில், முதலீட்டாளர்களின் கவனம் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. இது மேற்கொண்டு பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது, மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது.

இறக்குமதி அதிகரிப்பு

இறக்குமதி அதிகரிப்பு

தங்கம் விலை தற்போதைக்கு சரிவினைக் கண்டிருந்தாலும், நீண்டகால நோக்கில் மீண்டும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. குறிப்பாக இந்தியாவின் செப்டம்பர் மாதத்தில் தங்கம் இறக்குமதியானது 658% அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தேவை அதிகரிக்கும் என்ற நம்பிக்கைக்கும் மத்தியில், குறைந்த விலையில் தங்க வியாபாரிகள் வாங்கி உள்ளதை காட்டுகின்றது.

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச தங்கம் விலை

சர்வதேச சந்தையில் கடந்த அமர்வில் தங்கம் விலையானது பலத்த ஏற்றத்தினைக் கண்ட நிலையில், இன்று சரிவினைக் கண்டுள்ளது. தற்போது அவுன்ஸுக்கு 8.55 டாலர்கள் குறைந்து, 1759.05 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் உச்சம் குறைந்த விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

சர்வதேச வெள்ளி விலை

சர்வதேச வெள்ளி விலை

தங்கத்தின் விலை சற்று சரிந்துள்ள அதே நேரத்தில், வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்று மீடியம் டெர்மில் மீண்டும் குறையும் விதமாகவே காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் தற்போது சற்று குறைந்து, 22.468 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்குவது நல்லது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 182 ரூபாய் குறைந்து, 46,705 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலை என எதனையும் உடைக்க வில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இது உச்சத்தில் 9,500 ரூபாய்க்கு மேல் சரிவில் காணப்படுகின்றது. ஆக இது குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ள நிலையில், இந்திய சந்தையிலும் சற்று குறைந்து தான் காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 318 ரூபாய் குறைந்து, 60,635 ரூபாயாக காணப்படுகிறது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்கத்தில் சற்று கீழாகத் தான் காணப்படுகின்றது. எனினும் உச்சம், குறைந்த விலையினை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம். இது

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (22 கேரட் ) தங்கத்தின் விலையானது 23 ரூபாய் அதிகரித்து, 4,405 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 184 ரூபாய் அதிகரித்து, 35,240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து கடந்த சில தினங்களாக 35,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும், சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலையானது 26 ரூபாய் அதிகரித்து, 4,806 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 208 ரூபாய் அதிகரித்து, 38,448 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 48,060 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

இதே சென்னையில் ஆபரண வெள்ளி விலையினை பொறுத்தவரையில் இன்று கிராமுக்கு 64.80 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 64,800 ரூபாயாகவும் காணப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகின்றது.

மீடியம் டெர்மில் என்ன செய்யலாம்?

மீடியம் டெர்மில் என்ன செய்யலாம்?

தங்கத்தின் விலையானது தினசரி கேண்டில் பேட்டர்னில், மற்ற இன்ட்ராடே கேண்டில்களில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது. ஆக மீடியம் டெர்ம் மற்றும் இன்ட்ராடே வர்த்தகர்கள் சற்று பொறுத்திருந்து வர்த்தகம் செய்யலாம். இதே நீண்ட கால முதலீட்டாளர்கள் தற்போது வாங்கினாலும், இன்னும் குறையும் போது வாங்கினால் இன்னும் லாபம் அதிகமாக கிடைக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price on 05th September 2021; gold price today down after sharp high in MCX

Gold price latest update.. Gold price on 05th September 2021, gold prices trade lower amid dollar strength, silver prices also fall today.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X