தங்கம் விலையானது கடந்த அமர்வில் யாரும் எதிர்பாராத விதமாக சற்றே ஏற்றத்தினை கண்டது. இது தொடர்ந்து கடந்த வார இறுதியில் சரிவினைக் கண்டது. இது புராபிட் காரணத்தினால் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று எப்படியிருக்குமோ? இன்று வாங்காலா? வேண்டாமா? என்ற பல கேள்விகளுக்கு மத்தியில் இன்று மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றமின்றி சற்று சரிவிலேயே காணப்படுகின்றது. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும் சற்று சரிவில் காணப்படுகின்றது. இது இன்னும் சரிவினைக் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில்
ஆபரணத் தங்கம் விலையானது எப்படியுள்ளது? இது இன்னும் குறையுமா? இது நீண்டகால நோக்கில் எப்படியிருக்கும்? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
முக்கிய லெவல் உடைப்பு
தங்கத்தின் முக்கிய லெவலாக பார்க்கப்பட்டு வந்த 1800 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது. சொல்லப்போனால் இன்று தொடக்கத்திலேயே இந்த 1800 டாலர்களுக்கு கீழாகத் தான் தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் முடிவு விலையும் இந்த 1800 டாலர்களுக்கு கீழாகத் தான் காணப்பட்டது. இது மேற்கொண்டு இன்னும் சரிவினைக் காண வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் கவனம்
எப்படியிருப்பினும் முதலீட்டாளர்கள் வரவிருக்கும் அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவுகளை எதிர் நோக்கியுள்ளனர் எனலாம். ஏற்கனவே தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் மூன்று வார குறைந்த விலையில் காணப்படும் நிலையில், வரவிருக்கும் பணவீக்கம் குறித்தான தரவானது, விரைவில் அமெரிக்காவின் மத்திய வங்கியினை வட்டி விகித நடவடிக்கையினை கடுமையாக்க வழிவகுக்கலாம்.
விலை அதிகரிக்கலாம்
எப்படி இருப்பினும் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது சற்று அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இது தங்கத்தின் முக்கிய லெவலாக பார்க்கப்படும் 1800 டாலர்களையும் உடைத்து செல்லலாம். இதேபோல வெள்ளி விலையும் 23 டாலர்களை தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆக இதுவும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.
பத்திர சந்தை ஏற்றம்
அமெரிக்க பத்திர சந்தையானது தொடர்ந்து மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.இதுவும் விரைவில் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். எனினும் அதேசமயம் அதிகரித்து வரும் ஓமிக்ரான் தாக்கம், அமெரிக்காவின் வேலை குறித்தான தரவுகள் என பலவும் கவலையளிக்கும் விஷயங்களாக உள்ளன. இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன, இந்திய பொருளாதாரம்
தங்கத்தினை அதிகளவில் பயன்படுத்தும் இந்தியா சீனாவில் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இது நுகர்வில் பாதிப்பினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் தேவையானது குறையலாம். இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கடுமையான கட்டுபாடுகளினால் பொருளாதாரம் சரிந்தால், இதுவே தங்கம் விலைக்கு ஆதரவாகவும் அமையக்கூடும். இது பாதுகாப்பு புகலிடமாகவும் மாறக்கூடும்.
ஓமிக்ரான் அச்சம்
இந்தியாவில் ஓமிக்ரான் தாக்கம் மிக வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்னும் விதமாக காணப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பு ஓமிக்ரான் என்பது சுனாமி வேகத்தில் பரவி வருவதாக ஏற்கனவே எச்சரித்துள்ளது. இதனை மெய்யாக்கும் விதமாகவே இந்தியாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து நாளுக்கு நாள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மேற்கொண்டு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வழிவகுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது. இதற்கிடையில் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
பணவீக்கம் Vs தங்கம்
பணவீக்கத்திற்கு எதிராக சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கம் விலையானது, மேற்கொண்டு நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படுகின்றது. எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது பல காரணிகளுக்கு மத்தியில் அழுத்தத்திலேயே காணப்படுகின்றது. எனினும் வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா? இல்லையெனில் அப்படியே தொடருமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
காமெக்ஸ் தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 6.15 டாலர்கள் குறைந்து, 1,791.25 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்சம், குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி
தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 0.72% குறைந்து, 22.247 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்மில் வெள்ளி விலையானது சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
தங்கம் விலையானது இந்திய சந்தையில் சரிவில் காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 97 ரூபாய் குறைந்து, 47,355 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையானது சரிவினைக் கண்டுள்ளது. தற்போது கிலோவுக்கு 253 ரூபாய் குறைந்து, 60,363 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
ஆபரணத் தங்கம் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 21 ரூபாய் குறைந்து, 4,472 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 168 ரூபாய் குறைந்து, 35,776 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து, 4,879 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 179 ரூபாய் குறைந்து, 39,032 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 48,790 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
இதே போல வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. இது தற்போது கிராமுக்கு 30 பைசா குறைந்து, 64.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 643 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து, 64,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மிலும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக வாங்க நினைப்பவர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கம் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!



Click it and Unblock the Notifications