செம சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா நிபுணர்களின் கணிப்பு என்ன?

தங்கம்(Gold) விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சர்வதேச சந்தையில் சற்று சரிவில் காணப்படுகிறது.

எனினும் இந்திய சந்தையில் நிலவரம் என்ன? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன?
கவனிக்க வேண்டிய காரணிகள் என்னென்ன?

நீண்டகால நோக்கில் தங்கம் வாங்க சரியான நேரமா? இனியும் குறையுமா? மீண்டும் அதிகரிக்குமா? முக்கிய லெவல்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

சரிவில் தங்கம் விலை

சரிவில் தங்கம் விலை

தங்கம் விலையானது வலுவான டாலருக்கு மத்தியில் தொடர்ந்து இன்றும் சரிவினைக் கண்டுள்ளது. இன்று மாலை அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவானது வெளியாகவிருக்கும் நிலையில், இது தங்கம் விலையில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக தங்கத்தில் முதலீடுகள் குறைந்துள்ளன.

சீனாவின் பணவீக்கம்

சீனாவின் பணவீக்கம்

சீனாவின் பணவீக்கம் குறித்தான தரவும் வெளியாகவுள்ளது. இதுவும் தங்கத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இதற்கிடையில் அமெரிக்காவின் மத்திய வங்கியும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

ரேஞ்ச் பவுண்டில் தங்கம் விலை

ரேஞ்ச் பவுண்டில் தங்கம் விலை

தங்கம் விலையானது கடந்த 2 வாரங்களாகவே 1830 - 1860 டாலர்களுக்குள்ளேயே வர்த்தகமாகி வருகின்றது. ஆக இது ஏதேனும் ஒரு பக்கத்தில் உடைக்கும்போது, மீண்டும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சற்று சரிவினைக் கண்டுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1846.90 டாலர்களாக காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 21.692 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து தான் காணப்படுகின்றது. இது தற்போது 10 கிராமுக்கு 149 ரூபாய் குறைந்து, 50,852 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலை, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை.. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 211 ரூபாய் குறைந்து, 61,225 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் வெள்ளி விலை குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்திருந்தாலும், ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து, 4,785 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே 8 கிராமுக்கு 168 ரூபாய் அதிகரித்து, 38,280 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து, 5220 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 184 ரூபாய் அதிகரித்து, 41,760 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையும் சரிவினைக் கண்டுள்ளது. இது தற்போது கிராமுக்கு 1 ரூபாய் சரிவினைக் கண்டு, 67 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 670 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து, 67,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மில் சரியலாம் எனும் விதமாக காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் பொறுத்திருந்து வாங்கலாம். அதேபோல ஆபரண தங்கம் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. ஆக இதுவும் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+