செம சரிவில் தங்கம் விலை.. முதலீட்டாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொடர்ச்சியாக இந்த வாரத் தொடக்கத்தில் தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்து வந்தது. எனினும் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்து தங்கம் விலையானது சரிவினை காணத் தொடங்கியுள்ளது.

இது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், புராபிட் புக்கிங் காரணமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 3 நாளில் 65% உயர்வு.. அசத்தும் அதானி நிறுவனம்.. முதலீட்டாளர்களுக்கு செம லாபம்..! 3 நாளில் 65% உயர்வு.. அசத்தும் அதானி நிறுவனம்.. முதலீட்டாளர்களுக்கு செம லாபம்..!

இதற்கிடையில் இந்த சரிவானது இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் அதிகரிக்குமா? ஏனெனில் சரிவினைக் கண்டாலும் தொடர்ந்து 1800 டாலர்களுக்கு மேலாகவே தங்கம் விலை இருந்து வருகின்றது. ஆக இது குறைந்தாலும், மீண்டும் ஏற்றம் காண வழிவகுக்குமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் வட்டி அதிகரிப்பு

விரைவில் வட்டி அதிகரிப்பு

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது விரைவில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்க விகிதமானது 7.5% ஆக உயர்ந்துள்ளது. இது அதிகளவிலான நிதியுதவி, குறைந்த வட்டி விகிதங்கள் என பலவும் பணவீக்கத்தினை ஊக்குவித்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த பணவீக்க விகிதமானது கடந்த 1982லிருந்து பார்க்கும்போது மிக அதிகமாகும். இதன் காரணமாக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கம் பார்க்கப்படுகிறது.

டாலர் மதிப்பு அதிகரிக்கலாம்

டாலர் மதிப்பு அதிகரிக்கலாம்

அமெரிக்காவின் பத்திர சந்தையானது அவ்வப்போது தடுமாறினாலும் தொடர்ந்து ஏற்றப் பாதையிலேயே இருந்து வருகின்றது. இதனையடுத்து வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால் மேற்கொண்டு டாலரின் மதிப்பானது அதிகரிக்கலாம். மொத்தத்தில் தங்கம் விலை சரிய இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

பங்கு சந்தைகள் வீழ்ச்சி

பங்கு சந்தைகள் வீழ்ச்சி

கடந்த அமெரிக்காவின் பணவீக்க விகிதமானது 40 ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சத்தினை எட்டியுள்ள நிலையில், அது அமெரிக்க சந்தையில் எதிரொலித்தது. இதன் காரணமாக சந்தைகள் சரிவில் முடிவடைந்தன. இதன் எதிரொலி ஆசிய சந்தைகளும் பலத்த சரிவில் காணப்படுகின்றன. இன்று இந்திய சந்தையும் கூட பலத்த சரிவில் காணப்பட்டுகின்றது. மேலும் இன்று வார இறுதியாதலால் புராபிட் புக்கிங்கும் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரண தங்கம் விலையானது சரிவினைக் கண்டாலும், இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏற்றம் காணலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

 ரஷ்யா - உக்ரைன் பதற்றம்

ரஷ்யா - உக்ரைன் பதற்றம்

தங்கம் விலையினை ஊக்குவிக்கும் விதமாக ரஷ்யா- உக்ரைன் பிரச்சனையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த பிரச்சனை இன்னும் பெரியதாக உருவெடுக்கலாம் என்ற அச்சமும் நிலவி வருகின்றது. குறிப்பாக அமெரிக்கா உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக சுமார் 80 டன் ஆயுதங்களை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரஷ்யா உக்ரைன் இடையேயான பதற்றமும் அதிகரித்துள்ளது. இது மேற்கொண்டு அமெரிக்கா - ரஷ்யா உறவிலும் விரிசலை அதிகப்படுத்தியுள்ளது. இது மேற்கொண்டு அதிகரித்தால். சர்வதேச அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 12.20 டாலர்கள் குறைந்து,1825.20 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையும், குறைந்தபட்ச விலையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. நேற்றைய குறைந்தபட்ச விலையானது 1822.10 டாலர்களை உடைத்தால் மேற்கொண்டு சரிவினைக் கானலாம்.

 காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை


தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் பலத்த சரிவில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 2.02% குறைந்து, 23.047 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கேப் டவுனாகி கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது குறையலாம் எனும் விதமாக காணப்படுகின்றது.

 எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை


சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 229 ரூபாய் குறைந்து, 48,726 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையினை போல இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது பலத்த வீழ்ச்சி கண்டு காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 901 ரூபாய் குறைந்து, 62,365 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத்தான் தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தை, இந்திய கமாடிட்டி சந்தைகளில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டிருந்தாலும், ஆபரணத் தங்கம் விலை இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து, 4,604 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 24 ரூபாய் அதிகரித்து, 36,832 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து, 5,023 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 24 ரூபாய் அதிகரித்து, 40,184 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 50,230 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை இன்று பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, 66.90 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 669 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 66,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது வார இறுதி நாளான இன்று பலத்த சரிவில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு சரிவினைக் காணலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. ஆக சற்று பொறூத்திருந்து வாங்கலாம். எனினும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே பல காரணிகளும் சாதகமாக உள்ள நிலையில் குறைந்தால் வாங்கலாம். இதே ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில் இன்றும் அதிகரித்தே காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 11th February 2022: gold prices crashed of hefty US federal rate hike

gold price on 10th February 2022: gold price struggling after 4 days rise/4 நாட்களுக்கு பிறகு சற்றே சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X