Gold update: தங்கம் வாங்க இது சரியான நேரம்.. ஏன்.. நிபுணர்கள் சொல்லும் காரணத்தை பாருங்க..!

தங்கம் விலையானது கடந்த அமர்வில் யாரும் எதிர்பாராத விதமாக தொடக்கத்தில் சரிவினைக் கண்டாலும், மீண்டும் மாலை அமர்வில் சற்றே ஏற்றத்தினை கண்டது. இது தொடந்து கடந்த வார இறுதியில் சரிவினைக் கண்ட நிலையில், குறைந்த விலையில் வாங்க முதலீட்டாளர்களை தூண்டியது.

இதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலையானது தற்போது சற்றே ஏற்றத்தில் காணப்படுகிறது. எனினும் இது பெரியளவிலான ஏற்றம் காணவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

அதெல்லாம் சரி இன்று இனி எப்படியிருக்குமோ? வாங்காலா? வேண்டாமா? தற்போதைய விலை நிலவரம் என்ன? சர்வதேச சந்தையில் தங்கம் விலை என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலையானது எப்படியுள்ளது? நீண்டகால நோக்கில் எப்படியிருக்கும்? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

முக்கிய லெவல் உடைப்பு

முக்கிய லெவல் உடைப்பு

தங்கத்தின் முக்கிய லெவலாக பார்க்கப்பட்டு வந்த 1800 டாலர்களை உடைத்துக் காட்டியுள்ளது. சொல்லப்போனால் கடந்த அமர்வில் 1798.80 டாலர்களாக முடிவுற்றிருந்த நிலையில், இன்று தொடக்கத்திலேயே 1801.15 டாலர்களாக தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. இதனால் மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

முதலீட்டாளர்களின் கவனம்

முதலீட்டாளர்களின் கவனம்

எப்படியிருப்பினும் முதலீட்டாளர்கள் வரவிருக்கும் அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவுகளை முக்கியமாக கவனித்து வருகின்றனர். ஆக மீடியம் டெர்மில் தங்கம் விலையானது அதிகரித்தாலும், பணவீக்கம் குறித்தான தரவானது தங்கம் விலையில் மிக முக்கிய காரணியாக எதிரொலிக்கலாம். இது அமெரிக்காவின் வட்டி விகித நடவடிக்கையில் முக்கிய காரணியாக அமையலாம்.

விலை அதிகரிக்கலாம்

விலை அதிகரிக்கலாம்

நேற்று வெளியான அறிக்கையொன்றில் நிபுணர்கள் தங்கத்தின் முக்கிய லெவலாக பார்க்கப்படும் 1800 டாலர்களையும் உடைத்து செல்லலாம். இதேபோல வெள்ளி விலையும் 23 டாலர்களை தொடலாம். இதனை உடைத்து செல்லும் போது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என கூறியிருந்தனர். ஆக தங்கம் மற்றும் வெள்ளி விலையானது தற்போதைக்கு மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

சிறந்த ஹெட்ஜிங்

சிறந்த ஹெட்ஜிங்

வரவிருக்கும் பணவீக்க தரவின் மத்தியில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம் காணவில்லை.எனினும் ஒரு வேளை பணவீக்கம் இன்னும் உச்சத்தினை தொடும்போது அது பங்கு சந்தைகளுக்கு எதிரானதொரு தரவாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கம் விலையானது மீண்டும் அதிகரிக்கலாம்.

வட்டி அதிகரிக்கலாம்

வட்டி அதிகரிக்கலாம்

பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பாக தங்கம் பார்க்கப்பட்டாலும், வட்டி விகிதம் அதிகரிப்பு என்பது கவனிக்க பட வேண்டிய காரணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். இதுவும் தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம்.

ஓமிக்ரான் அச்சம்

ஓமிக்ரான் அச்சம்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஓமிக்ரான் தாக்கம் மிக வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்னும் விதமாக காணப்படுகின்றது. இது மேற்கொண்டு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வழிவகுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது. இதற்கிடையில் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு நீண்டகால நோக்கில் சாதகமாக அமையலாம்.

காமெக்ஸ் தங்கம்

காமெக்ஸ் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 7.45 டாலர்கள் அதிகரித்து, 1806.25 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி

காமெக்ஸ் வெள்ளி

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 0.47% அதிகரித்து, 22.562 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே காணப்படுகின்றது. உச்சத்தினையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் வெள்ளி விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

தங்கம் விலையானது இந்திய சந்தையில் சரிவில் காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து, 47,483 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 23 ரூபாய் அதிகரித்து, 60,690 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 15 ரூபாய் அதிகரித்து, 4,487 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து, 35,896 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 16 ரூபாய் அதிகரித்து, 4,895 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்து, 39,160 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 48,950 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே போல வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 64.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 645 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 64,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது தற்போது மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்க்ளும் வாங்கலாம். இதே ஆபரண தங்கம் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+