தடுமாறும் தங்கம் விலை.. உச்சத்தில் இருந்து ரூ.8400 சரிவு.. வாங்க சரியான இடம் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

 

இன்று சர்வதேச சந்தையில் பெரியளவில் ஏற்றம் காணாவிட்டாலும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. இதன் எதிரொலி இந்திய சந்தையிலும், ஆபரணத் தங்கத்தின் விலையிலும் காணப்படுகின்றது.

இதற்கிடையில் இன்று வாங்காலா? வேண்டாமா? இனி குறையுமா? அல்லது இப்போதே வாங்கலாமா? அடுத்து என்ன செய்யலாம்?

61,000 அருகில் சென்செக்ஸ், நிஃப்டி 18,100-க்கு மேல் வர்த்தகம்.. கவனிக்க வேண்டிய டிசிஎஸ், விப்ரோ..!61,000 அருகில் சென்செக்ஸ், நிஃப்டி 18,100-க்கு மேல் வர்த்தகம்.. கவனிக்க வேண்டிய டிசிஎஸ், விப்ரோ..!

நிபுணர்களின் கணிப்பு என்ன? இது நீண்டகால நோக்கில் எப்படியிருக்கும்? வாருங்கள் பார்க்கலாம்.

முக்கிய லெவல் உடைப்பு

முக்கிய லெவல் உடைப்பு

தங்கத்தின் முக்கிய லெவலாக பார்க்கப்பட்டு வந்த 1800 டாலர்களை உடைத்து காட்டியுள்ளது. சொல்லப்போனால் இன்று 1818 டாலர் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது தற்போது தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், தொடர்ந்து ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகின்றது. கடந்த அமர்வின் முடிவு விலையும், இன்று தொடக்க விலையும் 1800 டாலர்களுக்கு மேலாகவே காணப்படுகிறது. ஆக இது மேற்கொண்டு மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

டாலர், பத்திர சந்தை நிலவரம்

டாலர், பத்திர சந்தை நிலவரம்

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான அமெரிக்க டாலரின் மதிப்பானது சற்று அழுத்தத்தில் காணப்படும் நிலையில், இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமைந்துள்ளது. இதற்கிடையில் பத்திர சந்தையும் சந்தை சரிவும் தங்கத்திற்கு சாதகமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. பத்திர சந்தையானது 1.808%ல் இருந்து 1.778 டாலர்களாக சரிவினைக் கண்டுள்ளது.

பணவீக்கம் குறித்த தரவு
 

பணவீக்கம் குறித்த தரவு

அமெரிக்க டாலரின் மதிப்பு, பத்திர சந்தை சரிவு என பல காரணிகளும் வரவிருக்கும் பணவீக்கம் குறித்தான டேட்டாவினை எதிர் நோக்கியுள்ளன. இது பணவீக்கம் அதிகரித்தால் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்றாலும், இது தங்கத்தின் விலையினை பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த விலை

குறைந்த விலை

கடந்த வாரத்தில் தங்கம் விலையானது தொடர்ந்து சரிவிலேயே இருந்த நிலையில், இது பலரையும் குறைந்த விலையில் வாங்க தூண்டியுள்ளது. இதுவும் தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. இதற்கிடையில் நிபுணர்களும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்து வருகின்றனர். அதனை மெய்யாக்கும் விதமாகவே கடந்த சில தினங்களாகவே தங்கம் விலையானது தொடர்ந்து சற்று அதிகரித்து வருகின்றது.

ஓமிக்ரான் பரவல்

ஓமிக்ரான் பரவல்

இந்தியாவில் ஓமிக்ரான் தாக்கம் மிக வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்னும் விதமாக காணப்படுகின்றது. இது மேற்கொண்டு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வழிவகுக்கலாம் என்ற அச்சமும் நிலவி வருகின்றது. இதற்கிடையில் பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு சாதகமாக அமையலாம்.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கத்திற்கு எதிராக சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கம் விலையானது, மேற்கொண்டு நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படுகின்றது. எனினும் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம். பத்திரம் வாங்குதல் விரைவில் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பங்கு சந்தைகள் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளன. இதற்கிடையில் தான் தற்போது தங்கம் விலை தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.

காமெக்ஸ் தங்கம்

காமெக்ஸ் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றமின்று சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.75 டாலர் அதிகரித்து, 1819.35 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்சம், குறைந்த விலை என எதனையும் உடைக்கவில்லை. எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி

காமெக்ஸ் வெள்ளி

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் பெரியளவில் மாற்றமின்றி சற்று குறைந்துள்ளது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 22.808 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று சற்று கீழாகவே காணப்படுகின்றது. ஆக மீடியம் டெர்மில் வெள்ளி விலையானது சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

தங்கம் விலையானது இந்திய சந்தையில் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 76 ரூபாய் அதிகரித்து, 47,765 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையினை உடைத்துக் காட்டியுள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 72 ரூபாய் அதிகரித்து, 61,172 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் உச்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 13 ரூபாய் அதிகரித்து, 4,500 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து, 36,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து, 4,901 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து, 39,208 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,010 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே போல வெள்ளி விலையும் இன்று பலத்த சரிவினைக் கண்டுள்ளது. இது தற்போது கிராமுக்கு 3.60 ரூபாய் குறைந்து, 61 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 610 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 3,600 ரூபாய் குறைந்து, 61,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றாலும், மீடியம் டெர்மிலும் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. எனினும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். எனினும் கட்டாயம் ஸ்டாப் லாஸ் வைத்துக் கொள்ள வேண்டும். இதே ஆபரண தங்கம் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது. ஆபரண வெள்ளி விலையானது இன்று பலத்த சரிவினைக் கண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 12th January 2021: gold prices start rising amid positive cues

gold price on 12th January 2021: gold prices start rising amid positive cues/தடுமாறும் தங்கம் விலை.. உச்சத்தில் இருந்து ரூ.8400 சரிவு.. வாங்க சரியான இடம் தான்..!
Story first published: Wednesday, January 12, 2022, 11:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X