தங்கம் விலையில் தொடரும் சரிவு.. இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சற்று சரிவில் காணப்பட்டாலும், அது பெரியளவில் சரிவினைக் காணவில்லை. இது டாலரின் மதிப்பு தடுமாற்றத்தில் இருந்து வரும் நிலையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை.

இது வரவிருக்கும் அமெரிக்காவின் பணவீக்க தரவினையொட்டி, எப்படி வருமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது.

இதற்கிடையில் இன்று சர்வதேச சந்தை நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

பணவீக்க தரவு

பணவீக்க தரவு

அமெரிக்காவின் பணவீக்க தரவானது இன்று வெளியாகவிருக்கும் நிலையில், அது எப்படி வருமோ என்ற பலத்த எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. அமெரிக்க டாலரின் மதிப்பானது ஆக்ஸ்ட் 26ல் இருந்து பார்க்கும்போது டாலரின் மதிப்பு சரிவில் காணப்படும் நிலையில், இது மற்ற கரன்சி தாரர்களுக்கு தங்கத்தினை விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது.

வட்டி விகிதம் அதிகரிப்பு?

வட்டி விகிதம் அதிகரிப்பு?

அமெரிக்க மத்திய வங்கியானது ஏற்கனவே வட்டி விகிதத்தினை அதிகரிக்க திட்டமிட்டுள்ள நிலையில், இன்று வெளியாகவிருக்கும் பணவீக்க தரவானது, மேற்கொண்டு வட்டி வகித மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கலாம். ராய்ட்டர்ஸ் ஆய்வில் நிபுணர்கள் 75 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதிக வட்டி

அதிக வட்டி

பாதுகாப்பு புகலிடமாக இருந்து வரும் தங்கம் விலையானது, வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால், அது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். இதனால் தங்கத்தில் முதலீடுகள் பெரிதும் குறையலாம். இது மேற்கொண்டு முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம்.

எரிபொருள் விலை

எரிபொருள் விலை

ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகளின் முடிவால் கச்சா எண்ணெய் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பணவீக்கம் மேற்கொண்டு அதிகரிக்கலாம். இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு 7.35 டாலர்கள் குறைந்து, 1733.10 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று தொடக்கம் சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், மீண்டும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் 1.10% குறைந்து, 19.642 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

 

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 251 ரூபாய் குறைந்து, 50,370 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துள்ளது. மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 485 ரூபாய் குறைந்து, 57,002 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையையும் உடைக்கவில்லை.. ஆக மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர்அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு, 20 ரூபாய் குறைந்து, 4725 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 37,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து, 5155 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 41,240 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 210 ரூபாய் குறைந்து, 51,550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து, 62.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 624 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1000 ரூபாய் அதிகரித்து, 62,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.47,250

மும்பை - ரூ.46,730

டெல்லி - ரூ.46,880

பெங்களூர் - ரூ.46,780

கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,250

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+