இரு தினங்களுக்கு பிறகு தங்கத்தின் விலை சரிவு.. இனியும் குறையுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

தங்கம் விலையானது கடந்த அமர்வில் பலத்த சரிவினைக் கண்ட நிலையில், இன்றும் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.

இந்திய சந்தையிலும் பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகின்றது. கடந்த இரு அமர்வுகளாகவே தங்கம் விலையானது சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது.

சவுதி அரேபியா: 10 வருடத்தில் முதல் உபரி நிதி பட்ஜெட்.. முகமது பின் சல்மான் செம ஹேப்பி..!
இது டெக்னிக்கலாக பார்க்கும்போது தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகின்றது.

தங்கத்தின் சப்போர்ட் விலை

தங்கத்தின் சப்போர்ட் விலை

கடந்த வெள்ளிக்கிழமையன்று தங்கத்தின் விலை 1770 டாலர்கள் என்ற லெவலில் இருந்த நிலையில், அமெரிக்காவில் பணவீக்க விகிதம் அதிகரித்து வரும் நிலையில், இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே அமெரிக்காவில் நுகர்வோர் விலை குறித்தான குறியீடானது, நவம்பர் மாதத்தில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 6.8% ஆக அதிகரித்துள்ளது. ஆக இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி அதிகரிப்பு

வட்டி அதிகரிப்பு

ஆக இதற்கிடையில் பத்திரம் வாங்குதல் குறைப்பு நடவடிக்கையானது எதிர்பார்ப்புக்கு முன்னதாக செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் வட்டி விகிதமும் விரைவில் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறையலாம். இது தங்கத்திற்கு எதிராக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓமிக்ரான் அச்சம்

ஓமிக்ரான் அச்சம்

சர்வதேச அளவில் இந்தியா உள்பட்ட பல நாடுகளில் ஓமிக்ரான் பரவல் இருந்து வருகின்றது. இதனால் பல நாடுகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. இது பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். வட்டி விகிதத்தினையும் அப்படியே வைத்திருக்க தூண்டலாம். ஆக இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் சந்தையில் தங்கம் விலை

காமெக்ஸ் சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது பெரியளவில் மாற்றமின்றி சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து 1786.85 டாலர்களாக காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட சற்று கீழாக தொடங்கியுள்ளது. ஆக இது சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. இதனால் மீடியம் டெர்ம் முதலீட்டாளர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

காமெக்ஸ் சந்தையில் வெள்ளி விலை

வெள்ளி விலையும் தற்போது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 22.233 டாலர்களாக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வினை காட்டிலும் சற்று மேலாகவே காணப்படுகின்றது. கடந்த அமர்வின் உச்சத்தினையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக இது வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்த வரையில் தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி தற்போது சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 76 ரூபாய் அதிகரித்து, 48,240 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் முந்தைய அமர்வின் முடிவு விலையை காட்டிலும் சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

வெள்ளி விலையானது தற்போது கிலோவுக்கு 176 ரூபாய் அதிகரித்து, 61,329 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை விட இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரணத் தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 4,529 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 36,232 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையின் இன்று தூய தங்கத்தின் விலையும் கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து 4940 ரூபாயாகவும், இதே 8 கிராமுக்கு 39,520 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 49,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதுவும் இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளி விலை

ஆபரண வெள்ளியின் விலையும் இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 20 பைசா அதிகரித்து, 65.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 653 ரூபாயாகவும், இதே கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 65,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் டெக்னிக்கலாக அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் இன்று சற்று குறையும்போது வாங்கி வைக்கலாம். இதே ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியினை தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம். வரவிருக்கும் திருமண மூகூர்த்தங்களில் தேவையானது அதிகரிக்கலாம் என எதிபார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையானது பெரியளவில் குறையுமா? என்பது கேள்விக்குறியாகவே பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+