Gold update: தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. குறையவே குறையாதா.. நிபுணர்களின் கருத்து..?

தங்கம் விலையானது கடந்த ஐந்து அமர்வுகளாக தொடர்ந்து இந்திய சந்தையில் தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருகின்றது. இது இனி குறையவே குறையாதா? இனி விலை எப்படியிருக்கும், நிபுணர்களின் கருத்து என்ன?

தங்கம் விலையானது இந்திய சந்தையில் சற்று அதிகரித்து இருந்தாலும், சர்வதேச சந்தையில் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

ஆக இன்று இனி எப்படியிருக்குமோ? வாங்காலா? வேண்டாமா? தற்போதைய விலை நிலவரம் என்ன? சர்வதேச சந்தையில் தங்கம் விலை என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலையானது எப்படியுள்ளது? நீண்டகால நோக்கில் எப்படியிருக்கும்? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

முதலீட்டாளர்களின் கவனம்

முதலீட்டாளர்களின் கவனம்

இன்று வெளியாகவிருக்கும் வேலையின்மை விகிதம் குறித்தான தரவானது வெளியாகவுள்ளது.அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவானது வெளியான நிலையில், கடந்த அமர்வில் தங்கம் விலையானது, ஒரு வார உச்சத்தினை எட்டியது. இதன் காரணமாக டாலரின் மதிப்பு சரிவினைக் கண்டது. இதே பத்திர சந்தையும் சரிவினைக் கண்டது.

வட்டி விகிதம் அதிகரிக்கலாம்

வட்டி விகிதம் அதிகரிக்கலாம்

அமெரிக்காவின் பணவீக்க தரவானது விரைவில் வட்டி விகிதத்தினை உயர்த்த வழிவகுக்கும். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். சமீபத்திலேயே அமெரிக்காவின் மத்திய வங்கியானது 2022ம் ஆண்டில் வட்டி விகிதத்தினை மூன்று முறை அதிகரிக்க திட்டமிட்டிருந்தது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம்

பணவீக்கம்

அமெரிக்காவின் நுகர்வோர் விலை குறியீடு குறித்தான பணவீக்க தரவானது 0.6% அதிகரித்துள்ளது. இது முன்னதாக 0.5% ஆக இருந்தது. இதற்கிடையில் தான் தங்கம் விலையானது கடந்த அமர்வில் ஏற்றத்தினைக் கண்டது. இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

டாலர் VS தங்கம்

டாலர் VS தங்கம்

பணவீக்க தரவானது வெளியான நிலையில் அமெரிக்க டாலரின் மதிப்பானது 0.56% சரிவினைக் கண்டுள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையானது அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. இதற்கிடையில் பணவீக்க தரவின் மத்தியில் ஈக்விட்டி சந்தையும் சரிவினைக் கண்டுள்ளது. இதுவும் தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

ஓமிக்ரான் அச்சம்

ஓமிக்ரான் அச்சம்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் ஓமிக்ரான் தாக்கம் மிக வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என்னும் விதமாக காணப்படுகின்றது. இது மேற்கொண்டு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வழிவகுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது. இது பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு நீண்டகால நோக்கில் சாதகமாக அமையலாம்.

காமெக்ஸ் தங்கம்

காமெக்ஸ் தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 1826.40 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையை உடைக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் மீடியம் டெர்மில் தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி

காமெக்ஸ் வெள்ளி

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 23.192 டாலராக காணப்படுகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தற்போது சற்று குறைந்தாலும், மீண்டும் சற்று அதிகரிக்கும் விதமாக காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

தங்கம் விலையானது இந்திய சந்தையில் சரிவில் காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 61 ரூபாய் அதிகரித்து, 47,869 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை போலவே, வெள்ளியின் விலையும் அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 166 ரூபாய் அதிகரித்து, 62,022 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. உச்ச விலையையும் உடைத்து காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

ஆபரணத் தங்கம் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு, 19 ரூபாய் அதிகரித்து, 4,519 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து, 36,152 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 81 ரூபாய் குறைந்து, 4,820 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 648 ரூபாய் குறைந்து, 38,560 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 48,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே போல வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து, 66 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 660 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 5000 ரூபாய் அதிகரித்து, 66,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது தற்போது மீடியம் டெர்மிலும் சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்களும் வாங்கலாம். இதே ஆபரண தங்கம் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+