தங்கம் வாங்க ரெடியா.. இன்று விலை எப்படியிருக்கு தெரியுமா.. சென்னையில் என்ன நிலவரம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம்(Gold) விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சர்வதேச சந்தையில் சற்று சரிவில் காணப்படுகிறது.

 

எனினும் இந்திய சந்தையில் நிலவரம் என்ன? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய காரணிகள் என்னென்ன?

இது வட்டி விகிதம் அதிகரிக்கலாமோ? இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடினை குறைக்கலாமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் காணப்படுகிறது.

ஒரே ஒரு எழுத்தை மாற்றி மோசடி: கவனமா இருங்க HDFC வங்கி வாடிக்கையாளர்களே!ஒரே ஒரு எழுத்தை மாற்றி மோசடி: கவனமா இருங்க HDFC வங்கி வாடிக்கையாளர்களே!

தங்கம் விலை சரிவு

தங்கம் விலை சரிவு

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது. இது பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியானதை அடுத்து கடந்த அமர்வில் மீண்டும் ஏற்றத்தினை கண்டது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்தது. எனினும் வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பின் மத்தியில், தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது.

வெள்ளி விலையும் சரிவு

வெள்ளி விலையும் சரிவு

வெள்ளி விலையும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இன்று சற்று சரிவினை கண்டு காணப்படுகின்றது. இது சீனாவில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. இது வெள்ளியின் தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாலர் & பத்திர சந்தை ஏற்றம்
 

டாலர் & பத்திர சந்தை ஏற்றம்

அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பத்திர சந்தை ஏற்றம் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில், தங்கம் விலையானது இன்று அழுத்தத்தில் காணப்படுகின்றது. அதோடு வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையானது சரிவில் காணப்படுகின்றது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சற்று சரிவினைக் கண்டுள்ளது. தற்போது அவுன்ஸூக்கு 9.80 டாலர்கள் குறைந்து, 1865.70 டாலர்களாக காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளியின் விலையும் குறைந்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 1.36% குறைந்து, 21.633 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து தான் காணப்படுகின்றது. இது தற்போது 10 கிராமுக்கு 0.21% குறைந்து, 51,595 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலை, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை.. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் சற்று அதிகரிக்கலாம்.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 139 ரூபாய் அதிகரித்து, 62,165 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக மீடியம் வெள்ளி விலை குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்திருந்தாலும், ஆபரணத் தங்கம் விலை இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 4,843 ரூபாயாகவும், இதே 8 கிராமுக்கு 38,744 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று மாற்றமின்றி காணப்படுகின்றது. இது கிராமுக்கு 5283 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 42,264 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையும் இன்று இதுவரையில் மாற்றம் காணவில்லை. இது தற்போது கிராமுக்கு 20 பைசா குறைந்து, 67.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 673 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 67,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டும் சற்று சரிவனையே கண்டுள்ளது. இது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. எனினும் வரவிருக்கும் தரவுகளை பொறுத்து இது மாறலாம் எனும் நிலையில், பொறுத்திருந்து வாங்கலாம். ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.


தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 13th June 2022:Gold prices struggling to find traction

Fears have been raised that the US Federal Reserve may raise interest rates, which could reduce investment in interest-free gold. Meanwhile, the price of gold is slightly lower today.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X