3 மாத உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்..ஆனா ஒரு ஹேப்பி நியூஸ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கத்தின் விலையானது மூன்று மாத உச்சத்தில் காணப்படுகின்றது. கடந்த வாரத்தில் இருந்தே தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலையானது, இன்று மேலும் உச்சத்தில் இருந்து வருகின்றது.

 

இதற்கிடையில் இந்த ஏற்றமானது இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் குறையுமா? இது தொடர்ந்து 1800 டாலர்களுக்கு மேலாகவே தங்கம் விலை இருந்து வருகின்றது.

ஆக இது மீண்டும் ஏற்றம் காண வழிவகுக்குமோ என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

 தங்கம் விலை எப்போது வேண்டுமானாலும் குறையலாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு..! தங்கம் விலை எப்போது வேண்டுமானாலும் குறையலாம்.. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு..!

ரஷ்யா - உக்ரைன் பதற்றம்

ரஷ்யா - உக்ரைன் பதற்றம்

ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றமானது, எப்போது வேண்டுமானாலும் போர் வரலாம் என்ற பதற்றமான நிலையே இருந்து வருகின்றது. உக்ரைன் எல்லையில் ஆயுதங்களுடன் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் தான் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது பெரும் ஏற்றத்தினை கண்டு வருகின்றது.

7 வருட உச்சத்தில் கச்சா எண்ணெய்

7 வருட உச்சத்தில் கச்சா எண்ணெய்

ரஷ்யா - உக்ரைன் இடையே நிலவி வரும் பிரச்சனைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் 7 வருட உச்சத்தில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு சந்தைகள் வீழ்ச்சி
 

பங்கு சந்தைகள் வீழ்ச்சி

அமெரிக்கா மற்றும் ஆசிய பங்கு சந்தைகள் அனைத்தும் பலத்த வீழ்ச்சியினை கண்டுள்ளது. இதன் காரணமாக பங்கு சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

1 லட்சத்துக்கும் அதிகமான படைகள் குவிப்பு

1 லட்சத்துக்கும் அதிகமான படைகள் குவிப்பு

உக்ரைன் எல்லையில் ரஷ்யா 1 லட்சத்திற்கும் அதிகமான படைகளை குவித்து வைத்திருப்பதாக அமெரிக்கா சில தினங்களுக்கு முன்பு கூறியது. நாளுக்கு நாள் உக்ரைன் - ரஷ்யா இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யா எல்லையில் படைகளை குவித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இது சர்வதேச நாடுகளிடையே பெரும் பதற்றத்தினையே ஏற்படுத்தியுள்ளது.

காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 13.55 டாலர்கள் அதிகரித்து,1855.60 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையும், குறைந்தபட்ச விலையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் பலத்த ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 1.20% அதிகரித்து, 23.648 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கேப் அப் ஆகி மேலாக தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் எனும் விதமாக காணப்படுகின்றது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 468 ரூபாய் அதிகரித்து, 49,582 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கேப் அப் ஆகி மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையினை போல இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 954 ரூபாய் அதிகரித்து, 63,942 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலையானது, இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து, 4,687 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து, 37,496 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து, 5,113 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து, 40,904 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 51,130 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 80 பைசா அதிகரித்து, 68.20 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 682 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 800 ரூபாய் அதிகரித்து, 68,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பலத்த ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு அதிகரிக்கலாமோ என்ற நிலையே இருந்து வருகின்றது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் சற்று குறையும்போது வாங்கி வைக்கலாம். இதே ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில் இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 14th February 2022: gold prices nearly in 3 month high amid Ukraine tensions

gold price on 14th February 2022: gold prices nearly in 3 month high amid Ukraine tensions/3 மாத உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்..!
Story first published: Monday, February 14, 2022, 13:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X