கிடைச்ச நல்ல வாய்ப்பை எல்லாம் மிஸ் பண்ணிட்டோமோ.. இன்றைய தங்கம் நிலவரம் என்ன தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா மிக மோசமாக பாதிக்கப்பட்ட சமயத்தில் ஆன்லைனில் தங்கத்தினை வாங்கியவர்கள் நம்மவர்கள். அப்படி இருக்கும்பட்சத்தில் தற்போது பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது.

மறுபுறம் பணவீக்கம் ஒரு புறம் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. இப்படி பல காராணிகாளுக்கும் மத்திடில் தங்கம் விலையானது தொடர்ந்து 1800 டாலர்களுக்கு கீழாகவே இருந்து வருகின்றது.

முக்கியத்துவம் பெறும் ஆதார்..! ஆதார் - பான் இணைப்பு போல, இனி ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு..!!முக்கியத்துவம் பெறும் ஆதார்..! ஆதார் - பான் இணைப்பு போல, இனி ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு..!!

இதனை இன்னும் மெருகேற்றும் விதமாக தற்போது ஒமிக்ரான் அச்சமும் சேர்ந்து கொண்டுள்ளது. ஆக இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது தடுமாறி வந்தது. இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன? இந்திய சந்தை மற்றும் சர்வதேச சந்தையில் என்ன நிலவரம் ? ஆபரண தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன? மற்ற முக்கிய காராணிகள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான, அமெரிக்க டாலரின் மதிப்பானது தற்போது சற்றே அழுத்தத்தில் காணப்படுகின்றது. இது கடந்த அமர்வில் மூன்று வாரத்தில் இல்லாத அளவுகு மோசமான சரிவினைக் கண்டுள்ளது.இது மேற்கோண்டு தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் மதிப்பானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டி அதிகரிக்கலாம்

வட்டி அதிகரிக்கலாம்

விரைவில் அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் தொடர்ந்து பணவீக்க விகிதமானது தொடர்ந்து உச்சம் தொட்டு வருகின்றது. இதனால் பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையானது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மத்திய வங்கி கூட்டங்கள்

மத்திய வங்கி கூட்டங்கள்

இன்று ஐரோப்பாவின் மத்திய வங்கிகள், பேங்க் ஆப் இங்கிலாந்து, சுவிஸ் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளின் மத்திய வங்கி கூட்டங்கள் இன்று நடைபெறவுள்ளன. இவ்வங்கிகளில் வட்டி விகிதம், ஊக்கத்தொகை, பொருளாதார வளர்ச்சி குறித்தான நடவடிக்கை என மேற்கோள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக அப்படி ஏதும் நடவடிக்கைகள் இருக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. ஆக இதுவும் இன்று தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற் படுத்தலாம்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

தங்கம் விலையானது தினசரி கேண்டில் பேட்டர்னில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது. இது டோஜி பேட்டர்ன் பார்ம் ஆகி, அதன் உச்சத்தினை இன்று உடைத்துக் காட்டியுள்ளது. ஆக தங்கம் விலையானது அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் எனலாம். தற்போது அவுன்ஸூக்கு 1.09% அதிகரித்து, 1783.80 டாலர்களாக காணப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கம் விலையாவது 1% மேலாக மட்டுமே அதிகரித்திருந்தது. ஆனால் வெள்ளியின் விலையானது 2.96% அதிகரித்து, 22.183 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்கி வைக்க சரியான இடமாகவே பார்க்கப்படுகின்றது.

 

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது தற்போது 10 கிராமுக்கு 302 ரூபாய் அதிகரித்து, 48,389 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு உச்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக இதுவும் மீடியம் டெர்ம் & நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகீறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

தங்கத்தின் விலையை விட வெள்ளியின் விலையானது உச்சத்திணை எட்டியுள்ளது. தற்போது கிலோவுக்கு 1318 ரூபாய் அதிகரித்து, 61,526 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. உச்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. மொத்தத்தில் வெள்ளி விலையானது அதிகரிக்கலாம் என்பது போலவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

தொடர்ந்து பணவீக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், தங்கம் விலையும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 26 ரூபாய் அதிகரித்து, 4545 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே 8 கிராமுக்கு 208 ரூபாய் அதிகரித்து, 36,360 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. இது கிராமுக்கு 29 ரூபாய் அதிகரித்து, 4959 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து, 36,672 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலையை போலவே வெள்ளி விலையும் அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, 65.10 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து, 651 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 500 ருபாய் அதிகரித்து, 65,100 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

 

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. இதுவே மீடியம் டெர்மிலும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. அதேபோல ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலையும் அதிகரித்திருந்தாலும் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 16th December 2021: gold price starts to rising ahead of fed meeting

gold price on 16th December 2021: gold price starts to rising ahead of fed meeting/கிடைச்ச நல்ல வாய்ப்பை எல்லாம் மிஸ் பண்ணிட்டோமோ.. இன்றைய தங்கம் நிலவரம் என்ன தெரியுமா?
Story first published: Thursday, December 16, 2021, 12:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X