தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக இன்று சரிவினைக் கண்டுள்ளது.
இதற்கிடையில் இந்திய கமாடிட்டி சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் நிலவரம் என்ன? தற்போது சரிவினைக் கண்டுள்ள நிலையில், இது இன்னும் விலை சரியுமா? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன?
நிபுணர்களின் கணிப்பு என்ன? கூடுமா? குறையுமா? வெள்ளியின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பின் வாங்கிய ரஷ்யா
ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றமானது எப்போது வேண்டுமானாலும் போர் வரலாம் என்ற நிலையில் இருந்து வந்தது. ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்யா படைகள் முகாமுக்கு திரும்பியுள்ளதாக நேற்று அறிவித்தார். இதன் பிறகு பலத்த சரிவினைக் கண்டு வந்த பங்கு சந்தைகள் அனைத்தும், இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏற்றம் கண்டன. இதற்கிடையில் தான் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது தொடர்ந்து சர்வதேச சந்தையில் ஏற்றத்தினை கண்டு வந்த நிலையில், இன்று சற்று சரிவினைக் கண்டுள்ளது.
பதற்றம் தணிவு
ரஷ்யா - உக்ரைன் இடையே நிலவி வரும் பிரச்சனைக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது, கடந்த சில தினங்களாகவே 7 வருட உச்சத்தில் காணப்பட்டது. இது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் கேஸ் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் ரஷ்யாவில், சப்ளையில் பாதிப்பு ஏற்படலாமோ என்ற அச்சமும் இருந்தது. ஆனால் தற்போது பிரச்சனையானது ஓரளவுக்கு சுமூக நிலைக்கு திரும்பி வரும் நிலையில், அப்படி ஏதும் பிரச்சனைகள் இருக்காது. இதன் காரணமாக பணவீக்கமும் ஓரளவுக்கு கட்டுக்குள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மீண்டும் உச்சத்தில் பணவீக்கம்
அமெரிக்காவில் மீண்டும் கடந்த ஜனவரி மாதத்தில் பணவீக்க விகிதம் உச்சம் தொட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உணவு பொருட்கள், மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட பலவும் பணவீக்கத்திற்கு வழிவகுத்துள்ளதாகவும் சுட்டி காட்டியுள்ளது.
இதற்கிடையில் பிரிட்டீஸ் பணவீக்கமானது 30 ஆண்டு உச்சத்தினை எட்டியுள்ளது. இதற்கிடையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள், வரவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆன தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு சந்தைகள் ஏற்றம்
பணவீக்கம் என்பது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக இருந்தாலும், கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த சர்வதேச பங்கு சந்தைகள் நேற்றிலிருந்து மீண்டும் ஏற்ற பாதைக்கு திரும்பியுள்ளன. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் உள்ள முதலீடுகள் குறையத் தொடங்கியுள்ளன. இது தங்கம் விலையானது மீடியம் டெர்மில் குறைய காரணமாக அமைந்துள்ளன. மேலும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டாலும், அது டாலருக்கு ஆதரவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை அதிகரிப்பு
தங்கத்திற்கான தேவையானது பிசிகல் தங்கமாகவும், முதலீட்டு ரீதியாகவும் நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலைக்கு நீண்டகால நோக்கில் ஆதரவாக அமையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.எனினும் மீடியம் டெர்மில் வரவிருக்கும் டேட்டாக்கள் தங்கத்தின் விலையில் பிரதிபலிக்கலாம் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
காமெக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 2.35 டாலர்கள் குறைந்து, 1854.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. தினசரி கேண்டில் பேட்டர்னில் பியரிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது மேற்கொண்டு குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
காமெக்ஸ் வெள்ளி விலை
வெள்ளி விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று அதிகரித்து, 23.413 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. எனினும் தினசரி கேண்டில் பேட்டர்னில் பியரிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பர்ம் ஆகியுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது மேற்கொண்டு குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
எம்சிஎக்ஸ் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலை சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 68 ரூபாய் குறைந்து, 49,317 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. இதிலும் தினசரி கேண்டில் பேட்டர்னில் பியரிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது மேற்கொண்டு குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையினை போல இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு சற்று அதிகரித்து, 63,024 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகத் தான் தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையை உடைக்கவில்லை. வெள்ளி விலையிலும் தினசரி கேண்டில் பேட்டர்னில் பியரிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. ஆக தற்போது சற்று அதிகரித்து இருந்தாலும், மீண்டும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையானது இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து, 4,665 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து, 37,320 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 38 ரூபாய் குறைந்து, 5,085 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 304 ரூபாய் குறைந்து, 40,680 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 50,850 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலையை போல, ஆபரண வெள்ளி விலை இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 40 பைசா குறைந்து, 67.80 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 678 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து, 67,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இன்று என்ன செய்யலாம்?
தங்கம் மற்றும் வெள்ளி விலையானது சர்வதேச சந்தையில் இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு சரியலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம். இதே முதலீட்டு ரீதியாக நீண்டகால நோக்கில் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம்.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம், வெள்ளி விலை : வரும் நாட்களிலும் விலை சரியுமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் மெகா சரிவு.. ஆனந்த கண்ணீரில் மிடில் கிளாஸ் மக்கள்..!



Click it and Unblock the Notifications